(Reading time: 26 - 52 minutes)

அவனும் அவனின் அருகில் கோபம் கொப்பளிக்கும் முகத்துடன் தன வலியை வேறு பொறுத்துக்கொண்டு நின்றிருந்த அழ்குநிலாவின் முகத்தையும் பார்த்து என்ன ஆதித் இப்போ எதுக்கு அம்மானு சத்தம் போட்ட... என்று கேட்ட ஜானகி, நீ எதுக்குமா கோபமா இருக்க என்று அழ்குநிலாவிடமும் கேள்வியை தொடுத்தார்.

இதுக்குத்தான் ஆண்டி நான் எப்படி அவர் ரூமிற்குப் போய் எழுப்ப என்று கேட்டேன். நீங்கதான் சொன்னீங்க எனக்கு முட்டிவலிக்கு இன்னும் கோவில்படிவேறு ஏறனும், அவன் ரூம் மாடியில் இருப்பதால் தானே உன்னை போய் எழுப்பச்சொன்னேன் என்று கூறி கட்டாயப்படுத்தி இவர் ரூமிற்கு என்னை அனுப்புனீங்க என்றவள், அங்கு நடந்ததை முழுவதுமாக சொல்ல சங்கோஜப்பட்டுக்கொண்டு

நான் சங்கடப்பட்டமாதிரியே ஆகிடுச்சு, நான் என்னமோ இவர் ரூமிற்கு ஆசைப்பட்டுப் போனதுபோல் இவர் என்னை திட்டுறாரு ஆண்டி என்றவள், தனது காயத்தை தடவிக்கொண்டே கோபமாக அவனை பார்த்து பல்லைக் கடித்தபடி கூறினாள்

அவள் கூறியதை கேட்ட ஆதித் கண்களால் அவளிடம் மண்ணிப்புக் கேட்டுக்கொண்டே என் போனில் கூப்பிட்டிருக்கலாம்லமா என்றான்.

அதற்கு ஜானகி நானும் ஆறுமணியில் இருந்து உனக்கு போன் போட்டு பார்கிறேன் ரிங் போய் கட்டாயிடுது. நீ எடுக்கற பாடா தெரியல. மணிவேறு ஏழு முப்பது ஆகிடுச்சு. கோவிலுக்கு வேறு போகணும். அதனால்தான் அவளை உன்னை எழுப்ப அனுப்பினேன் என்றாள்.

என்னது போன் பண்ணியும் நான் எழுந்துக்கலையா? எனக்கு போன் அடித்த சவுண்டே கேட்கலையே என்றவனுக்கு, அப்பொழுதுதான் ஞாபகம் வந்தது. மாடியில் உள்ள ஜிம்மில் போனை வைத்துவிட்டு எடுக்க மறந்து கீழே ரூமிற்கு வந்துவிட்டது .

சாரிமா... போனை ஜிம் ரூமில் வைத்துவிட்டு மறந்து வந்துட்டேன். ஒரு டென் மினிட்ஸில் குளிச்சுட்டு வருகிறேன் என்றவன், அழ்குநிலாவின் முகத்தை பார்த்தவன் அவளின் முறைப்பை பார்த்து ஆமா பெரிய இவ நான் கைபிடிச்சு தெரியாம இழுத்ததுக்கு கற்பே பறிபோனதை போல் முறைச்சு பார்க்கிறதபாரு என்று நினைத்தபடி அவளின் பார்வைக்கு எதிபார்வை கொடுத்தபடி தன ரூமிற்குள் சென்று கதவை மூடிக்கொண்டான்.

அழகுநிலாவை பார்த்து ஜானகி, குளிச்சுட்டு நேற்று போட்ட நைட்டியுடனேயே இருகிறாய் நீ, வா வந்து ட்ரெஸ் மாத்து என்றாள். ஆண்டி நேற்று நான் உடுத்தியிருந்த சேலையெல்லாம் மண் மற்றும் இரத்தக்கரையாக இருந்ததே நேற்று எனக்கு கொடுத்த மெடிசின் டோஸ் அதிகம் காரணமாகவும் அடிபட்டதால் இரத்தம் வெளியேறியதாலோ என்னவோ என்னை அறியாமல் அதை துவைத்துப் போடாமல் உறங்கிவிட்டேன். பாத்ரூமில் குளிக்கும் போது நான் துவைப்பதற்காக அங்கு கழட்டிவைத்திருந்த என் சேரியை பார்த்தேன் காணவில்லை என்று அவளின் அருகில் வந்தவள் கவலையுடன் கூறினாள்.

அதற்கு ஜானகி அதையெல்லாம் நேற்று இரவே வேலம்மாள் துவைத்து காயவைத்து விட்டால் ஆனால் உன் சேலையில் சில இடத்தில் கிளிசல்களும் இரத்தக்கறையும் உள்ளது அதை உடுத்த முடியாது. உன் சட்டைக்கு மேட்ச்சாக என்னிடம் உள்ள சேலையை எடுத்து நீ தங்கியிருக்கும் ரூமின் கட்டிலில் வைத்திருக்கிறேன் போய் அதை உடுத்திக்கொண்டுவா நான் நீ வைப்ப்தற்கு பூ எடுத்துவருகிறேன் என்றாள்.

அழகுநிலாவிற்கு அவளின் தற்போதைய சூழலின் காரணமாக அவளின் அந்த உதவியை மறுக்கமுடியவில்லை மேலும் நான் இவர்களின் இந்த அன்பிற்கும் உதவும் குணத்திற்கும் என்ன கைமாறு செய்யப்போகிறேன். நாம் ஏதோ ஓர் வகையில் இவர்களிடம் நன்றிக்கடன் பட்டுக்கொண்டே போகிறேனே... என்று நினைத்தபடி அவள் தங்கயிருந்த அறைக்கு வந்து கதவை தாழிட்டவள், கட்டிலில் இருந்த தன சட்டைக்கு பொருத்தமாக எடுத்துவைத்திருந்த சில்க் காட்டன் புடவையை கையில் எடுத்தாள், அந்த சேலையின் விலை அதிகமாக இருக்கும் என்று தெரிந்தது. ஆனாலும் உடுத்துவதற்கு நீட்டான பினிசிங் இருக்கும் என எண்ணிக்கொண்டவள் இவ்வளவு காஸ்ட்லி சேலையை எப்படி உடுத்துவது என்று தயங்கிக்கொண்டே, அதை உடுத்தி கண்ணாடிமுன் நின்று தலை சீவுவதற்காக சீப்பை எடுத்து சீவ முயன்றபோது அவள் தலையில் இருந்த காயம் சீவ முடியாமல் வழியையும் கை தூக்கி சீவமுடியாமல் சோல்டரில் உள்ள இரத்தக்கட்டு வேறு படுத்தியதாலும் விரித்துவிட்ட கூந்தலை பின்னமுடியாமல் ஒரு ரப்பர் பேண்டை மட்டும் கஸ்ட்டப்படுப்போட்டுவிட்டு ஜானகியிடம் வந்தாள் அழகி.

அவளுக்காக பூவை எடுத்துவைத்திருந்த ஜானகி அவள் வரும்போது அவளின் அழகை கண்டு தன மகனுக்கு பொருத்தமான அழகுடன் உள்ளால் என்று மனதிற்குள் நினைத்தவள், அவளின் நீண்டமுடியை பின்னாமல் போன்டிடேய்ல் போட்டு வந்ததை கண்டவள் என்ன அழகி தலையை பின்னவில்லையா? பின்னி பூவைத்தால் அழகாக இருக்கும் இந்தக்காலத்தில் இவ்வளவு நீளமாக முடியுடைய பெண்களை பார்ப்பது அரிது என்று கூறினாள்.

அவள் அவ்வாறு கூறியதும் உங்களுடைய இந்த பாராட்டுக்கு காரணமானவர்கள் என் அம்மாதான் ஆண்டி. கீழே ஒன்றுபோல இல்லை கொஞ்சம் லெவல் செய்து வெட்டிக்கொள்கிறேன் என்றால் கூட அலோவ் பண்ணமாட்டாங்க என்றவள், எனக்கும் சேலை உடுத்தி பின்னல் போட்டு பூ வைக்கத்தான் ஆசை ஆனால் என் தலையில் உள்ள காயத்தாலும் சோல்டரின் வலியின் காரணத்தாலும் என்னால் பின்னமுடியவில்லை என்று கூறினாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.