(Reading time: 26 - 52 minutes)

அவளா? எவப்பா..? வேலம்மா ஒன்பதுமணிக்கே வீட்டுக்கு போய்விட்டாளே. அதென்ன வேலைகாரினாலும் வயதில் பெரியவங்களை அவ.. இவனு.. பேசுறது என்று வேண்டுமென்றே அவனை சீண்டினாள்.

அவள் அவ்வாறு கேட்டதும் அம்மா....! நான் ஒன்றும் வேலம்மாளை கேட்கவில்லை அவங்க இந்நேரம் போயிருப்பார்கள் என்று தெரியும் அழகுநிலாவை கேட்டேன் என்று கூறினான்.

மனதிற்குள் சிரித்தபடி அப்படிவா வழிக்கு! என்று நினைத்தபடி, அவளுக்கு மாத்திரை மருந்தின் காரணமாகவோ அல்லது இன்னைக்கு நிகழ்ந்த அசம்பாவிதத்தின் காரணமாக ஓய்ந்துபோய் பேசிக்கொண்டிருக்கும்போதே தூங்கிட்டா என்றாள்.

சாப்பிடாமலையா? மாத்திரைவேறு போடனுமே! என்று கூறியவனை பார்த்து புன்னகையுடன் அதெல்லாம் சாப்பிடவைத்து மாத்திரை போடவச்சாச்சு. என் பொறுப்பில் இருப்பவளை நான் கவனிக்காமல் இருப்பேனா...!.

உன்னை பார்த்தால் ரொம்ப டையர்ட் ஆக தெரிகிறது போய் தூங்கி ரெஸ்ட் எடு அப்பத்தான் காலையில் எழுந்துக்க முடியும். இன்று உனக்கு ரொம்ப அலைச்சல் வேற என்றபடி அவன் சாப்பிட்டத்தை ஒதுக்க ஆரம்பித்தாள்.

அவனும் எழுந்து மாடியில் இருக்கும் தனது அறைக்கு போகும் போது, அழகுநிலா இருந்த அறையை கடப்பதற்கான நேரத்தில் அவனின் கால் சற்று தயங்கியது தன அம்மா என்ன செய்கிறார்கள் என்று திரும்பிப்பார்த்தான் அப்பொழுது ஜானகி சமையல் அறைக்குல் செல்வதை பார்த்தவன், நிலா இருந்த அறையின் கதவை தள்ளிப்பார்த்தான் அது திறந்ததும் டக்கென உள்நுழைந்தவன் அவள் விழித்திருந்தால் அவளால் தனக்கும் வர்ஷாவிற்கும் இடையில் விழுந்த விரிசலுக்கு அவளை காய்ச்சி எடுக்க நினைத்து அவளின் படுக்கை அருகில் சென்றான்.

ஆனால் அவளோ ஆழ்ந்த் உறக்கத்தில் குழந்தைபோல் முகத்தை வைத்துக்கொண்டு பால்நிற கால்களின் தரிசனத்தோடு குமரிகளுக்குரிய வளைவு நெளிவுகளுடன் தூங்கும் அழகில் ஈர்க்கப்பட்டு, அவளை கோவிக்கவந்தவன் மெய்மறந்து ஒருநிமிடம் நின்று அவளின் அழகைய் ரசித்து பின் தன தவறு புரிய தன்மேலேயே கோபம் கொண்டு விருட்டென்று அவளின் அறையைவிட்டுவேளியேறி தனது அறைக்கு விரைந்தான்.

ஆனால் அங்கு வந்தபின்பும் அவனின் மனதை சாந்திப்படுத்த அவனுக்கு இயலவில்லை. அவன் ஒன்றும் குடிக்கு அடிமையானவன் கிடையாது இருந்தபோதும் எப்பொழுதாவது தொழில் நிமித்தம் நடக்கும் பார்ட்டிகளில் இலேசாக சிப் செய்ய ஆரம்பித்தவன் இப்பொழுது அவனுடைய கடினமான பொழுதுகளில் தான் பார்த்து பார்த்து வடிவமைத்த தன துணையுடன் வாழ்க்கை தொடங்க வாங்கிய வீட்டிற்குச் சென்று தனது அறையில் கொஞ்சம் குடிக்க ஆரம்பித்திருந்தான்.

இன்றும் அதேபோல் அவனது மனம் வர்ஷாவினால் அடைந்த ஏமாற்றம், அது ஏற்படக் காரணமான அழ்குநிலாவின் மேல் உருவான தடுமாற்றம், திரும்பவும் மாதேஷின் முன் உண்டான அவமானம் போன்ற அழுத்தத்தால் அதை குறைக்க குடியை கையில் எடுக்க மனம் பரபரத்தது. அவனின் அந்த வீட்டுச்சாவியை கையில் கூட அங்கு செல்வதற்காக எடுத்துவிட்டான்

ஆனால்.. நாளை காலையில் தனக்காக் தன பிறந்தநாள் ஆசிவழங்க தன அம்மா ஆசையுடன் இருப்பது நினைவில்வர சாவியை அது இருந்த இடத்திலேயே வைத்தவன் தனது வீட்டின் மொட்டை மாடியில் ஒரு பகுதியில் உருவாகியிருந்த ஜிம்மிற்கு சென்று அவன் உடல் நோகும் வரை காட்டுத்தனமாக பயிற்சி மேற்கொண்டான். பின் சேர்ந்தநிலையில் குளித்து பெட்டில்விழுந்தவன் உடல் ஓய்விற்குச் சென்றாலும் அவனின் நினைவுகள் கனவுகளாகி அவனின் கண்முன் விரிந்தது .

றுநாள் காலை தன்னை எழுப்பிய கை பிடித்து தூக்கத்தில் தன்னை நோக்கி இழுத்தான் ஆதித். அது கனவென்ற நினைப்பில், ஆனால் அச்சோ..! என்றவள் அவன் இழுத்தவேகத்தில் அவனின்மேல் விழுந்த நிலா தனது காயத்தில் அவன் உடல் உரசியதால் ஆ....என்ற சத்தத்துடன் விடுபட போராடினாள்.

அதில் முழித்தவன் தன மேல் முகத்தை வலியால் சுளித்தபடி தன கையணைவிலிருந்து விடுபட போராடிக்கொண்டிருந்த அழ்குநிலாவை பார்த்ததும் வேகமாக தன பிடியை தளர்த்தினான்.

உடனே வில்லில் இருந்து விடுபட்ட அம்புபோல் பிடியில் இருந்து தன்னை இழுத்தபடி கட்டிலில் இருந்து குதித்தவள் கீழே விழுவதுபோல் சென்று கடைசி நிமிடத்தில் அழுத்த முயன்று கால்ஊன்றி நின்றவள் அவனை கோபமாகப் பார்த்து பேச முயன்றாள்.

அவளை முந்திக்கொண்ட ஆதித், யேய்... என் ரூமிற்குள் எப்படி நீ வரலாம். அறிவில்லாமல் இப்படித்தான் கொஞ்சம் இடம்கொடுத்தால் மடத்தை பிடிக்கும் வேலையை நீ பார்கிற, இந்த அம்மா உன்னை எப்படி இங்கே வரவிட்டார்கள் என்றவள் அவள் பதில் கூற வருவதைக் கேட்காமல் அவன் ரூமைவிட்டு வெளியே வந்தவன் அம்மா என்று கத்தினான்.

பூஜைஅறையில் சாமிக்கு பூப்போட்டுக்கொண்டு இருந்த ஜானகியும் விரைந்து ஹாலுக்கு வர அங்கு சோபாவில் சற்றுமுன் வந்து அமர்ந்து அன்றைய நியூஸ் பேப்பர் வாசித்துக்கொண்டிருந்த வேலாயுதமும் என்ன என்ற பார்வையை தாங்கியபடி அண்ணாந்து அவனை பார்த்தனர்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.