(Reading time: 13 - 25 minutes)

ஏன்டா பேசமாட்ட அண்ணணும் தங்கச்சியுமா சேர்ந்து என்ன எங்கேயும் போகவிடாம உக்கார வச்சுட்டு இப்போ கிண்டல் பண்றியா??

விடு மச்சான் என் தங்கச்சி செய்ற பிரியாணிக்காகவே நீ என்ன வேணா பண்ணலாம்..ஆப்ட்ரால் தொப்பைதான வந்துட்டு போகுது விடு..

ம்ம் பேசுவடா பேசுவ இருடி இந்த வருஷத்துக்குள்ள அம்மாகிட்ட சொல்லி உனக்கு கல்யாணத்தை பண்ணல நா என் பேரை மாத்திக்குறேன்..

ம்ம் அடப் போடா பொண்ணுங்கள பாத்தா எனக்கும் ஆகல என்னப்பாத்தா பொண்ணுங்களுக்கும் ஆகமாட்டேங்குது..துப்பாக்கிய எடுத்தோமா தப்பு பண்றவன பொட்டுநு போட்டோமாநு இருக்கனும் அதைவிட்டுட்டு இந்த கையில பூங்கொத்து தூக்கிட்டு துப்பட்டா பின்னாடி ஓட்றதெல்லாம் நமக்கு வேணாம்..

ஏன்டா காமெடியகூட எதுக்கு இப்போ இவ்ளோ விரைப்பா பேசிட்டு இருக்க??வர வர நீ ஒரு சிட்டி ரோபோவா மாறிட்டு இருக்க..

சரி ஷாலினி எப்படியிருக்கா??இப்போ எத்தனாவது மந்த்??

ம்ம் நல்லாயிருக்காடா..7வது மாசம்   அடுத்தவாரம் சீமந்தம் இருக்கு ஒழுங்கா வந்து சேரு அவ உன்னைதான் ரொம்ப எதிர்பார்ப்பா..இப்போலா அவ பேமிலிய ரொம்ப மிஸ் பண்றா..அதனால சீமந்தத்துக்கு அப்பறம் அப்பா அம்மாவ இங்கேயே தங்க சொல்லிருக்கேன்..

ம்ம் பாவம் சின்ன பொண்ணு தான அதுவும் இந்தமாதிரி நேரத்துல எவ்ளோபேர் இருந்தாலும் அவங்க அம்மா மாதிரி வருமா..அவங்க பேரண்ட்ஸ் ரெண்டு பேருமே இறந்து அவ துடிச்சதைப் பாத்தத நினைச்சா இப்பவும் கஷ்டமாயிருக்கு..நல்லவேளையா நம்ம கண்லபட்டா..நிறையவே இழப்பை சந்திச்சுட்டா டா அதனாலதான் உன்மேல உயிரா இருக்கா..வெளில நா உன்ன கிண்டல் பண்ணாலும் அவளுக்காக தான் உன்னை எதிலையும் இன்வால்வ் பண்ண மாட்றேன்..கொஞ்சம் வருஷம் போட்டும் அவளே புரிஞ்சுப்பா..

உண்மைதான் தமிழ்..அவ அம்மா அப்பாவோட இழப்பு அவளை மொத்தமாவே உடைச்சுருச்சு..கொஞ்சம் கொஞ்சாமா அவ தேறி வந்துருக்கானா நீயும் ஒரு முக்கிய காரணம்..அவளுக்காக மட்டும்தான்டா நானும் எல்லாத்தையும் விட்டுக் கொடுத்து போய்ட்டு இருக்கேன்..சரி அதெல்லாம் ஈவ்னிங் பேசுவோம் நா போய் நீ கேட்ட பைலை எடுத்துட்டு வரேன் என வெளியே செல்ல தன் இருக்கையில் பின் சாய்ந்து சோம்பல் முறித்து தன் சிஸ்டத்தை உயிர்பித்தான் தமிழ்..

மிழ்ச்செல்வனின் குடும்பம் நடுத்தரவார்க்கம்…தந்தை கேசவன் வங்கி உழியராய் இருந்து ஓய்வு பெற்றவர்..தாய் சரோஜா குடும்பத்தலைவி..அண்ணன் வெற்றிமாறன் சிறிய அளவில் பிஸினஸ் செய்து வருகிறான்..அவன் மனைவி ராஜி பள்ளி ஆசிரியை இவர்களுக்கு காவியா என்ற 5 வயது செல்லமகள்..இவ்வளவுதான் தமிழின் உலகம் .வேலைப்பளுவின் காரணமாய் அவ்வளவாய் ஊருக்குச் செல்ல மாட்டான் அவன் தந்தை நண்பர் ஒருவரால் சென்னையில் எப்போதோ வாங்கிய சிறிய வீட்டை ஓரளவு ரெணோவேட் செய்து அங்கே தங்கியிருந்தான்.. குழந்தையின் விடுமுறை காலத்தில் அனைவரும் வந்து ஒரு மாதம் தங்கிவிட்டு செல்வர்..தமிழுக்கு வயது 30ஐ தொட்டிருக்க இரண்டு வருடங்களாகவே திருமணப் பேச்சு கிடைக்கும் போதெல்லாம் அடிபட்டுக் கொண்டேயிருந்தது..ஆனால் ஏனோ அவனுக்கு திருமணம் என்ற ஒன்றைப் பற்றி சிந்தனையே இல்லாமல் இருந்தது..விருப்பமில்லாமல் பெரியவர்களுக்காக திருமணம் செய்வதில் துளியும் நாட்டமில்லை..

ஹரிஷ் அந்த பைலோடு உள்ளே வந்தான்..இந்தா தமிழ் இதுதான் நம்மோட இப்போதைய டார்கெட்..பேரு குணா..வடசென்னைல பெரிய கை..கஞ்சா,கள்ளகடத்தல்நு 30க்கு மேல கேஸ் இருக்கு ஆனா ஒரு சாட்சி கூட இல்ல..இதெல்லாம் பத்தாதுனு அவன் ஏரியா பசங்கள வச்சு லவ் பண்றமாதிரி நடிச்சு பொண்ணுங்கள வீட்டவிட்டு வர வச்சு கடத்த முயற்சி பண்ணிருக்கான்..கடைசி நேரத்துல ஏதோ காரணத்துக்காக ப்ளான் ஸ்டாப் பண்ணிட்டான்..ஆனா ஒரு பொண்ண மட்டும்..17 வயசு பொண்ணுடா இவனுங்களெல்லாம் இன்னும் உயிரோட இருக்குறத பாத்தாதான் கடவுள் நம்பிக்கையே குறையுது..

ம்ம் ஏன் கவலைப்படுற அதான் என்ன அனுப்பிடாரே நம்பி கடவுளை கும்பிடு..நீ கடைசியா சொன்ன ஒரு விஷயத்துக்காகவே இனி அவன் இந்த பூமில இருக்கக் கூடாது..என்ற குரலில் சிங்கத்தின் கர்ஜனனை இருந்தது..

தமிழ் எந்தளவு நேர்மையானவனோ அதேயளவு கோபகாரனும் கூட தனக்கு சரியென தோன்றுவதை சட்டென செய்து முடிப்பவன்..அதை யாரும் குறை கூறி தப்பாக பேசினால் அவர் யாராய் இருந்தாலும் அதற்கு மேல் அதை மாற்றிக் கொள்ள மாட்டான்....ஏனெனில் தன் மேல் அத்தனை நம்பிக்கை வைத்திருந்தான்..எக்காலத்திலும் நல்லவர்களுக்கு தன்னால் ஒரு தீமையும் நடக்காது என பலமாக நம்பினான்..அதுதான் அவனின் பணியிட மாற்றத்திற்கான முக்கிய காரணமும்..

டுத்து வந்த ஞாயிற்றுக்கிழமை ஷாலினிக்கு சீமந்தத்திற்காக வேண்டியவற்றை வாங்க ஹரிஷ்ஷோடு சென்றிருந்தான்..விடுமுறை தினம் ஆதலால் அந்த ஷாப்பிங் மாலில் கூட்டத்திற்கு குறைவில்லாமல் இருந்தது..ஹரிஷ் ஆர்டர் கொடுத்திருந்த வளையலுக்காக காத்திருக்க தமிழ் அவனிடம் பத்து நிமித்தில் வருவதாய் கூறிச் சென்றான்..

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.