(Reading time: 15 - 29 minutes)

‘ம்? விழிகளில் லேசான கோபம் மின்ன எழுந்து அமர்ந்தாள்

‘ஸ்வேதா. ஹரிஷ் வந்திருக்கான் ஒரு டூ மினிட்ஸ் வந்து ஒரு ஹாய் சொல்லிட்டு போயிடேன்’ குரல் தாழ்த்தி நிதானமாகத்தான் கேட்டான் அவன்.

‘இன்னைக்கு என் பிறந்தநாள் தெரியுமா?’

‘தெரியும்டா. அதுதான் நான் நைட்டே விஷ் பண்ணேனே. உனக்குதான் நான் எது செஞ்சாலும் பிடிக்கலை. இப்போ கூட என்ன வேணும் சொல்லு செய்வோம்.’

‘எனக்கு எதுவும் வேண்டாம்’ முகம் திருப்பிக்கொண்டாள் அவள்.

‘ஸ்வேதா... ஒரு நிமிஷம்.. ஒரு நிமிஷம் நான் சொல்றதை கேளேன். நீ..’ அவன் சொல்லி முடிப்பதற்குள் சுரீரென வெடித்து உயர்ந்தது அவள் குரல்

‘எனக்கு நீங்க, உங்க கிரிக்கெட், கிரிக்கெட்டர் ஃப்ரெண்டு யாரையும் பிடிக்கலை. தயவு செய்து என்னை தனியா விடறீங்களா?

ஹாலில் அமர்ந்திருந்த ஹரிஷ் உட்பட அத்தனை பேர் காதிலும் விழுந்தது அந்த குரல். எல்லார் முகத்திலும் நிறையவே அதிர்ச்சியும் தர்மசங்கடமும், குடியேற அந்த அறையிலேயே  அப்படியே சில நிமிடங்கள் அமர்ந்துவிட்டான் ரகு.

கொஞ்ச நேரத்தில் இயல்பு நிலை வந்து விட்டாலும் ரகுவிடம் மட்டும் ஒரு தர்மசங்கடமான மௌனம் நிலவிக்கொண்டே இருந்தது.

ஹரிஷ் கிளம்பும் போது அவனுடனே அவன் தங்கி இருக்கும் ஹோட்டலுக்கு கிளம்பினான் ரகு. இந்த முறை ரகு காரை செலுத்திக்கொண்டிருக்க அருகில் அமர்ந்திருந்த ஹரீஷிடம் மெல்ல ஆரம்பித்தான் ரகு.

‘அவளுக்கு கிரிக்கெட்னாலே பிடிக்காதுடா. நீ ஒண்ணும் வித்தியாசமா நினைக்காதே ஹரிஷ்..’ ரகுவின் குரலில் நிறையவே மன்னிப்பு கேட்கும் பாவம் இருந்தது.

‘டேய்... நீ வேறே... உனக்கு ஒரு சீக்ரெட் சொல்லவா? எங்கப்பாவுக்கும் கிரிக்கெட் வேப்பங்காய்தான். இதுக்காக அவரோட எத்தனை சண்டை போட்டிருக்கேன். எவ்வளவு திட்டு வாங்கி மேலே வந்திருக்கேன். சொல்லபோனா இதுக்காக திட்டு மட்டும்தான் வாங்கி இருக்கேன். அரசியலிலே இதெல்லாம் சாதாரணம் மச்சி. நீ ஃபீல் பண்ணாதே’ என்றபடியே ரகுவின் முதுகில் செல்லமாய் ஒரு அடி  வைத்தான் ஹரிஷ்.

ரகுவின் முகத்தில் கொஞ்சம் கசப்பு கலந்த புன்னகை எழுந்தது. ‘இல்லைடா. இது வேறே.  அவளுக்கு என் மேலே வெறுப்புத்தான் அதிகமா இருக்கு. அவ மனசு தெரியாம கல்யாணம் பண்ணிட்டேன். இப்போ...’ மெலிதாய் ஒரு பெருமூச்சு அவனிடம்.

‘சரி விடு வோர்ல்ட் கப் ஜெயிச்சாச்சு தங்கச்சி கல்யாணத்துக்கும் பணம் சேர்ந்திடுச்சு. இதோட கிரிக்கெட் விட்டுடலாமான்னு யோசிக்கிறேன்.’ என்றான் ரகு  தொற்றுப்போன குரலில். ‘படிச்ச படிப்பு இருக்கு எங்கேயாவது ஒரு வேலை எப்படியும் கிடைக்கும்..’ அவன் சாலையை பார்த்துக்கொண்டே சொல்ல

‘டேய்.. உசிரை விட்டு வளரத்த கேரியர்டா..’ ஹரிஷ் சற்றே பதற

அவன் பக்கம் திரும்பி மெல்ல புன்னகைத்தான் ரகு ‘கரெக்ட்தான் உசிரை விட்டுத்தான் கேரியரை வளர்த்திட்டு இருக்கேன். அவ என்னோட உயிர்டா’ கொஞ்சம் தழுதழுத்தது ரகுவின் குரல்.

மெல்ல எழுந்த ஹரீஷின் கரம் ரகுவின் கையை அழுத்தியது. அவனிடம் சில நிமிட மௌனம். பின்னர்

‘நீ சொல்றது கரெக்ட்தான். நீ கிரிக்கெட் விட்டுடு. அதுதான் நல்லது’ என்றான் ஹரிஷ் கண்களில் கொஞ்சம் தீவிரம் படர.

ன்று இரவு. அனுராதாவின் அறைகதவு தட்டப்பட்டது.

‘பெரியப்பா உள்ளே வரலாமாமா? பிஸியா இருக்கியா?

‘நான் எப்போ பெரியப்பா பிஸியா இருந்தேன்? உள்ளே வாங்க பெரியப்பா’ புன்னகைத்தவளின் முகத்தில் நிறையவே குழப்பம் மிச்சமிருந்தது. பெரியம்மாவிடம் கூட ஹரிஷ் வந்த விஷயத்தை சொல்ல விடவில்லை பெரியப்பா.

அவள் கட்டிலில் அமர அவளருகே ஒரு நாற்காலியை இழுத்துப்போட்டுக்கொண்டு அமர்ந்தார்.

‘இது வேண்டாம் பெரியப்பா’ நேரடியாக விஷயத்துக்கு வந்தாள் அனுராதா. பெரியம்மாவுக்கு, ஷங்கருக்கு எல்லாம் இந்த கல்யாணம் பிடிக்காதுன்னு தோணுது ’

‘தெரியும். நீ இப்படி குழப்பத்திலே இருப்பேன்னு தெரியும். அதான் வந்தேன்’ என்றார் பெரியப்பா. ‘உன்கிட்டே ஒரு விஷயம் கேட்கலாமா? சில வருஷம் முன்னாடி நம்ம ஷங்கர் கீதா கல்யாணம் நடந்தது இல்லையா? அப்போ அவன் உன்கிட்டே சம்மதம் கேட்டானாமா?

சற்றே திகைப்புடன் பார்த்தாள் அனுராதா.

‘அப்போ நீ ஹைதராபாத்லே இருந்தே. நீ நிச்சயத்துக்கு கூட வரலை. கீதாவை நீ பார்த்தது கல்யாணத்திலேதான் கரெக்டா?

‘ஆமாம். அப்போ ஏதோ அவசரத்திலே நிச்சியம் நடந்து போச்சுன்னு சொன்னானே ஷங்கர்’

‘ஆமாமாம் ரொம்ப அவசரம்தான்’ அவரது குரலில் கொஞ்சம் கோபத்தின் நிழல் பதிந்து விலகியது. ஏதேதோ யோசனைகளில் அவரிடம் சில நொடி மௌனம் வந்து போனது.

விழிகளை நிமிர்த்தி அவளை பார்த்தார் பெரியப்பா ‘அவன் கல்யாணம் அவன் உரிமைன்னா. உன் கல்யாணம் உன்னோட உரிமைமா’

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.