(Reading time: 12 - 23 minutes)

தொடர்கதை - என் நிலவு தேவதை – 09 - தேவிஸ்ரீ

En nilavu devathai

பாலு கங்காதரனிடம் விவரத்தைகூற நினைத்து பின் அவ்வெண்ணத்தை கைவிட்டான்.. பிறகு  விக்ரமின் வீட்டிற்கு வெளியே மறைவாக நின்றுகொண்டு இருந்தான்.. அவனுக்கு அவன் செய்த வேலை வெற்றிகரமாக முடிந்ததா? என தெரிந்துக்கொண்டு அங்கிருந்து செல்லவேண்டும் என நினைத்தான்.. அவன் முதுகில் ஒரு கை விழுந்தது.. திடுக்கிட்டு திரும்பினான் பாலு..

அமிர்தாவின் அறையில் அம்முவும்,மித்துவும் சுற்றி என்ன நடக்கின்றது என தெரியாமல், நன்றாக உறங்கிக்கொண்டிருந்தனர்.. விக்ரமும் மித்துவை தேடி அம்முவின் அறைக்குள் நுழைந்தான்..

கங்காதரனோ தூங்காமல் பாலுவிடமிருந்து நல்லசெய்தியை எதிர்பார்த்து காத்திருந்தான்..

தாயம்மாவுக்கு தூக்கம் வரவில்லை.. மாறாக ஏதோ இனம்புரியாத ஒன்று அவரது மனதை பிசைந்தது.. ஏதோ தவறு நடக்க போகிறது என அவரது உள்ளுணர்வுக்கு புரியவும் அவரறையை விட்டு வெளிவந்து அம்முவின் அறைக்கு செல்ல முற்பட்டார்..

பாலுவின் முதுகில் கை வைத்தது வேறுயாரும் அல்ல.. இன்ஸ்பெக்டர் ரிஷிதான்.. பாலு எப்போது விக்ரம் வீட்டிற்குள் நுழைந்தானோ அப்போதே அமிர்தாவின் பாதுகாப்பிற்காக போடப்பட்ட ரோந்து பணியில் இருந்த போலிஸ் அவனை பின் தொடர்ந்து அவன் செய்த வேலையை ரிஷிக்கு தகவல் தந்தவர் உடனே ஏசி டெக்னீசியனையும், எதற்கும் இருக்கட்டும் என தீயணைப்புதுறைக்கும் தகவல் கூறினார்.. பாலுவும் மாட்டிக்கொண்டான்..

விக்ரம் அம்முவின் அறைக்குள் நுழைந்ததும் அதிர்ந்தான்.. அங்கு தாயம்மாவுடன் போலிஸ் நின்றுகொண்டு இருந்தார்..  தாயம்மா இரு பெண்களையும் எழுப்பி வெளிவர சொன்னவர் பின் போலிஸ் டெக்னீசனை அழைத்து ஏசியை சரி செய்ய முற்பட்டார்.. ஆனால் அதற்குள் ஏசியிலிருந்து சார்ட்சர்க்யூட்டாகி திடீரென அறை முழுதும் தீப்பிடிக்க ஆரம்பித்தது.. பின் அனைவரும் அறையை விட்டு வெளிவரவும் தீயணைப்பு துறையினர் அங்கு வந்து தீயை அணைத்து நிலமையை சீராக்கினார்.. பின் அனைவருக்கும் நன்றி சொல்லி வெளியனுப்பிய தாயம்மா பெண்களை நோக்கி திரும்ப.. அங்கு விக்ரமும், இரு பெண்களும்  அதிர்ச்சியுடன் கேள்வியாய் தாயம்மாவை நோக்கினர்..

“ம்ம்ம்.. நீங்க என்ன நினைக்கறீங்கனு புரியுது.. நான் பொறுமையா சொல்றேன், வாங்க” என அனைவரையும் உட்கார வைத்தார்..

“நான் அமிர்தாவை பார்க்க அவளறைக்கு போன போது, ஏசியிலிருந்து புகை வந்ததை பார்த்தேன்.. அப்போது என்ன பண்றதுனே தெரியல, அப்போ ரோந்து பணியில் இருந்த போலிஸ் விசில் சத்தம் கேட்டு அவர்கிட்ட போய் விவரம் சொல்லவும், அவர்தான் டெக்னீசனையும், தீயணைப்புக்கும் தகவல் சொல்லி சரி பண்ணினார்.. சரி.. எதைபற்றியும் கவலைப்பட வேண்டாம்.. நான் எல்லோருக்கும்  சூடா காபி எடுத்துட்டு வரேன்.. கொஞ்சம் தெம்பா இருக்கும்” என்றவர் சமையலறையை நோக்கி சென்றார்..

இங்கு விக்ரமோ அதிர்ச்சியில் இருந்தான்.. ஒருவேளை தாயம்மா சரியான நேரத்தில் வராமல் இருந்திருந்தால்.. அவன் உடல் நடுங்கியது.. அவன் உயிரே மித்ராவும், நிலாவும்தான்.. அவர்களுக்கு ஏதாவது ஒன்று நடந்தால் அவனால் தாங்க முடியுமா.. உடனே மித்ராவை தன் தோளில் சாய்த்து மெல்ல அணைத்துக் கொண்டான்.. பின் அப்படியே தன் நிலாவின் பக்கம் திரும்பியவன் அவள் கையை ஆறுதலாக பிடித்துக் கொண்டான்..

தாயம்மா பெருமூச்சுவிட்டார்.. சிறிது நேரத்திற்குமுன் நடந்ததை நினைத்துப் பார்த்தார்.. அவர் அமிர்தாவின் அறையினுள் நுழைந்ததும் போலிஸைப்பார்த்து திடுக்கிட்டார்.. பின் விவரத்தை அவர்மூலம் கேட்டு அதிர்ந்தார்.. அப்போது விக்ரம் வந்ததை கண்டு அவனிடம் ஓரளவு சரியாய் பொய் சொல்லி முடித்தும்விட்டார்.. இப்போதைக்கு யாருக்கும் விவரம் தெரியாமல் இருப்பதே நல்லது என நினைத்தார்.. வீட்டிலுருப்பவர்களுக்கு பொறுத்தவரை இது தற்செயலாய் நடந்த ஆக்சிடெண்ட்.. ஆனால் உண்மை என்னவென்றால் இது வெல்பிளான்டு அட்டெம்ட் ஆப் மர்டர்..

 அனைவருக்கும் காபி கலந்து எடுத்துக் கொண்டு சென்றவர், அனைவரையும் பருக வைத்து, பின் மித்ரா அறைக்குள் அம்முவை தூங்க அனுப்பியவர் விக்ரம் பக்கம் திரும்பினார்..

“ரொம்ப ரொம்ப நன்றி தாயம்மா..”

“எனக்கு எதுக்குப்பா நன்றி எல்லாம்.. அம்முவை பாதுகாப்பது என் கடமை.. மித்ராவும் என் பொண்ணு மாதிரிதான்.. எதையும் நினைக்காம போய் தூங்குப்பா..போ..”

“சரிங்கம்மா..” என்றவன் தூங்க சென்றான்..  

தாயம்மா உடனே தன் அறைக்கு சென்று தன் மொபைலை எடுத்து ரிஷிக்கு டயல் செய்தார்..

“வணக்கம் ரிஷி.. நான் தாயம்மா..”

“சொல்லுங்கம்மா.. மிஸ் அமிர்ததரங்கிணி என்ன பண்றாங்க..”

“அவ பத்திரமா இருக்கா.. தூங்குறா.. ரொம்ப நன்றிப்பா.. அந்த போலிஸ் சரியான நேரத்தில் வரலைனா.. என்னால நினைச்சுகூட பார்க்கமுடியல..”

“நன்றி எல்லாம் சொல்லாதிங்கமா.. இது என் கடமை..”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.