(Reading time: 13 - 26 minutes)

தொடர்கதை - மீள முடியாமல் உன்னுள்..! - 09 - பிரதீபா சுந்தர்

Meela mudiyaamal unnul

சில்சீ நண்பர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...!! வாழ்க வளமுடன்.

Oh... My... God…. !!!” 

ககன் கூவியதுடன் நிற்காமல், கார் சீட்டில் உட்கார்ந்தபடியே துள்ளினான்.

“ஹா... ஹா... ஹா...” என்று சிரிக்கும் ககனின் முகத்தில் சந்தோஷம் கட்டுக்கடங்காமல் பொங்கிப் பெருகியது... முகமே பிரகாசமாக மாற... வாய் மூடாமல் புன்னகையுடனேயே கண்களை மூடி... நெஞ்சில் கை வைத்தபடி  நிம்மதியான பெருமூச்சு விட்டான். “தாரா... தா...ரா...”என்று ஆனந்தமாக முணுமுணுத்துக்கொண்டு.

அவனின் சந்தோஷத்தில், அவன் தெளிவடைந்து விட்டான் என்பது விளங்கினாலும், ககனின் வாய் வழியாக கேட்க ஆவலுடன் காத்திருந்தான், உதய்.

சிறிது நேரம் தனது சந்தோஷத்தை அனுபவித்த பிறகு, ஒருவழியாக உதய் என்றொரு ஜீவன் அருகிலிருப்பதை உணர்ந்த ககன், உதய்யின் தோளை சுற்றி கைகளைப் போட்டபடி, “மச்சி... I’m so happy machi.. இந்தபொண்ணு தான்டா அந்த சிக்னல் பொண்ணு.. ஒரு வழியா கண்டுபிடிச்சாச்சு.. ஹப்பா... தேவுடா...” என்று குதூகலித்தவாறு இறுக்கினான்.

“ஹே.. சூப்பர் டியுட்... செம நியூஸ்... வாழ்த்துக்கள்...! சரி சரி.. எப்படி கண்டுபிடிச்ச டியுட்...?!”

“வேற எப்படி... அவளோட குரலை வெச்சி தான்... “

“அது எப்படி டியுட்... அவ்வளவு நேரம் பேசின.. இவ்வளோ நேரம் கழிச்சு ரியாக்ட் பண்ற.. ஹா.. ஹா...”

“ஓவரா பேசாதீங்க உதய் சார்... அப்போ எனக்கு பயங்கர டென்ஷன்... கொஞ்சம் மிஸ் ஆகி இருந்தாலும், that car would have hit her… அதான் அவ குரல் என் மனசுல பதிஞ்சாலும், நான் உணர அவ்வளோ நேரம் ஆகி இருக்கு..”

“நோ டியுட்.. அந்த காரை பத்தி மட்டும் பேசாத.. அதுவும் அந்த கார் ஓட்டின பொண்ணு பத்தி பேசவே பேசாத.. எனக்கு செம அலர்ஜி ஆகுது...”என்று கொஞ்சம் கோபமாக சொல்வதுபோல் சொன்னான், உதய்.

“இப்போ நீ தான் அந்த பொண்ண பத்தி பேச ஆரம்பிக்கற உதி...”என்று கூறி சிரித்துவிட்டு... “பட் மச்சி.. அவ என்னோட எதிர்கால மச்சினி... சோ.. கொஞ்சம் ஜாக்கிரதையாவே பேசு..”என்று கெத்தாக கூறி, தொண்டையை செருமிக்கொண்டான்...

ககனிடம் வினோதமான பார்வையை செலுத்திய உதய், தலையை குலுக்கிக்கொண்டு கார் ஊட்டுவதில் கவனமானான்.

உதய்யிடம் சாதாரணமாக கூறிவிட்டாலும், அடுத்து தாராவை எப்படி, எங்கே சந்திப்பது..  என்று ஒரே குழப்பமாக இருந்தது.

“நம்ப பிளான்படி அவங்க வண்டி பின்னாடியே போயிருந்தா, அட்லீஸ்ட் அவங்க வீடாவது தெரிஞ்சியிருக்கும்.. இப்போ எங்கே போய் தேடறது...” என்று ககன் புலம்ப ஆரம்பிக்க.. 

“ஏன் டியுட்... நீ தான் டக்கு டக்குன்னு வண்டி நம்பர் நோட் பண்ணிடுவியே.. அவங்க கார் நம்பர்கூட பார்த்துட்ட தானே... அதை வெச்சி ஈஸியா கண்டுபிடிக்கலாமே....”

“கண்டுபிடிக்கலாம் தான்... ஆனா எனக்கு தான் இண்டரெஸ்ட் இல்லை... பாப்போம்.. இன்னும் கொஞ்ச நாள்..”.

கன் அவ்வாறு சொல்லி கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் முடிந்துவிட்டன... தொழிலில் மிகவும் பொறுப்பான பதவியில் இருந்தவனுக்கு.. அவனுக்கென்று கொஞ்ச நேரம் கிடைப்பதே அரிதாகிவிட்ட இந்த நாட்களில், அவன் எங்கு செல்ல நேரிட்டாலும் அவனின் பார்வை கழுகுப் பார்வையாக மாறி, அவனின் தாரகையை தேடத் தொடங்கிவிடும்.. இருந்தும் அவனால் தாராவையோ காவ்யாவையோ எங்கேயும் காண இயலவில்லை.. உதய்யும் ‘ககன் தாராவை கரெக்ட்பண்ணிட்டா.. அடிக்கடி காவ்யாவை பார்க்கவேண்டி இருக்குமே’ என்று நினைத்து நினைத்தே காவ்யாவை மறக்காமல் இருந்தான்.

தற்கிடையில்.. டாலியை ககனுக்கு மணமுடிக்க வேண்டும் என்று திரு. மற்றும் திருமதி. ஈஸ்வரப்பு விரும்பியதால்... ககனிடம் அவர்கள் விருப்பம் கேட்க.. தாராவை மனதில் வைத்துக்கொண்டு.. சொல்லவும் முடியாமல், மெல்லவும் முடியாமல் திணறிய ககன், வேலையை சாக்காக வைத்து இன்னும் ஓராண்டு கழித்து பேசிக்கொள்ளலாம் என்று முடிவாக கூறி விட்டான். இந்த விஷயத்தை, இந்த திருமணப்பேச்சை பற்றி அறிந்து, விருப்பு மறுப்பு என்று எதுவும் கூறாமல், தனது மருத்துவ தொழிலை மட்டுமே செய்துக் கொண்டிருந்த டாலியிடம் பக்குவமாக கூறும் பொறுப்பும் ககனையே சேர்ந்துவிட்டது.

கண்ணாடியை கையாள்வதுபோல் மிகவும் கவனமாக கையாள வேண்டியது, டாலியின் மனது. அதனால்.. எப்படி அவளின் மனது மேலும் புண்படாதவாறு தனது மறுப்பை தெரிவிப்பது என்று ககன் தன்னையே குழப்பிக்கொண்டு உதய்யிடம் புலம்பிக்கொண்டிருந்தான்.

அப்பொழுது உதய் கூறிய ஒரு யோசனை.. அவனே எதிர் பார்க்காத அளவிற்கு ஹிட்(hit) ஆகிவிட.. ஏற்கனவே ககனின் தாயின் மனதில் இடம் பிடித்துவிட்ட உதய்யை, ஈஷ்வரப்பு இல்லத்தில் ஒரு உறுப்பினராக.. டாலியின் தத்து-அண்ணனாக மாற்றி விட்டது.!!

உதய்யின்.. ககனுக்கான அந்த வார்த்தைகள், இதோ அவனின் வாய்மொழியாகவே...

“டியூட்... எனக்கு என்னவோ நீ தேவையில்லாம டென்ஷன் எடுக்கறியோனு தோணுது... நீ வேணா மேகன்கிட்ட ஐடியா கேளேன்.. எப்படி டாலிய ஹான்டில் பண்ணனும்னு, he knows better than you people, I think.... அவனுக்கு கூட டாலி பத்தி ஏதாவது விருப்பம் இருந்துச்சுனா சொல்லுவான்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.