(Reading time: 13 - 26 minutes)

ஏன் சொல்றேன்னா... மேகன் கூட, அவங்க எல்லாரும் ஆஸி வந்தப்போ, I found something..  He took an extra care, which is so special, about dolly… which you people did not do.  and நீ டாலி கூட பழகினதுக்கும் அவன் பழகினதுக்கும், I can say a minimum of 100 differences. Even dolly may have an idea about him...  Just find out dude… good luck to him and her” என்று சாதாரணமாக கூறிவிட்டான்.

தே விஷயத்தை, மேகனும் டாலியும் வேறு விதமாக ககனிடம் கூறும் வரையில் அவனுக்கு உதய்யின் வார்த்தைகள் மேல் நம்பிக்கை வரவில்லை.. வந்த பின்போ, உதய்யின் தொழில் ரீதியான வளர்ச்சிக்கு காரணம் விளங்கியது. பிறகு என்ன.. உதய்க்கு டாலி என்கிற ஒரு சுட்டி தங்கையும்.. அவளின் வருங்கால கணவனாக மேகனும் கிடைத்தார்கள்.

இன்னும் ஒன்று இரண்டு வருடம் கழித்து, ககனுக்கும் பெண் பார்த்து.. மேகன்-டாலி திருமணத்துடன் சேர்த்து வைத்துக்கொள்ள முடிவு செய்தார்கள்.

மேகன்-டாலி ஜோடிக்கு மிகவும் ஆர்வத்துடன் சம்மதம் தந்தது.. அவனின் அன்னையே. மேகன் இயல்பிலேயே மிகவும் சாது. அன்பாலும் புன்னகையாலுமே அனைவரையும் கட்டிபோடும் திறமை உள்ளவன். டாலியை தனது குழந்தையாகவே பார்த்துக்கொள்வான் என்று நம்பினார். அதோடு மனதில் ஏற்கனவே காயப்பட்டவள் டாலி.. ககனை போன்றே குணம் உடையவள். ஒரு காலத்தில் பட்டம்பூசியாக திரிந்தவள்.. மனதளவில் வருந்தி வருந்தியே தொட்டாச்சிணுங்கி ஆக மாறிவிட்டாள். அவளை மென்மையாக கையாண்டே மேகன் கொஞ்சம் கொஞ்சமாக சகஜமாக்கினான். அவன் மேற்படிப்பிற்காக மற்றும் பயிற்சிக்காக ஆஸ்திரேலியா செல்ல தயங்கியது, டாலியை மனதில் கொண்டுதானோ.. என்று இப்பொழுதும் அவனின் தாய்க்கு சந்தேகம்.

மேகனுக்கு, டாலி என்றாள் கொள்ளை பிரியம்...!! கடல் அளவு அன்புடன், அதையும் தாண்டிய அளவு காதல் கொண்டவன். டாலியை அவளின் பெற்றோர்களுடன் வசித்தால், அவளின் தந்தைக்கு ஆகாது என்று, எந்த ஜோசியரோ சொல்லியதால்.. பதினொரு வயதிலேயே ஹாஸ்டலில் சேர்த்துவிட்டார் ககன்-மேகனின் அத்தை.. அறியாத வயதில் காரணம் புரியாமல், அப்பெண் அழுத அழுகை இன்றும் மேகனின் கண்களில் உள்ளது.. பின் வருடம் கடக்க, அவளின் ஹாஸ்டல் வாசத்துக்கான காரணம் அறிந்தவள், அவளுக்குளேயே புழுங்கி புழுங்கி.. வருந்தி.. தாய்-தந்தை பாசத்துக்காக ஏங்கி.. மிகவும் நொந்துவிட்டாள். அதற்காகவே இன்று வரையிலும் அவனின் அத்தையிடம் பேசாதவன், மேகன்.

எட்டு வருட ஹாஸ்டல் வாழ்வுக்கு பிறகு... அவள் எம்.பி.பி.எஸ். சேரும் பொழுதுதான், அவளது மாமா குடும்பம் அதட்டி உருட்டி அவளை ஈஷ்வரப்பு இல்லத்திற்கு அழைத்து வந்தனர். ‘கரைப்பார் கரைக்க கல்லும் கரையும்’ என்பது போல... அவர்கள் அனைவரும் சேர்ந்து அவளின் மனதை மாற்ற செய்த முயற்சியில் வெற்றி கண்டனர்.  இதில் பெரும் பங்கு, மேகனின் மீதான அவளின் காதல் என்பது டாலிக்கும் நமக்குமே மட்டும் தெரிந்த உண்மை.!

தெல்லாம் நடந்துமுடிந்து இரண்டு மாதம் கடந்த பிறகு, ஒரு நாள் காலை ஏழு மணி அளவில்.. ககன், அவன் அறையின் படுக்கையில், தூக்க கலக்கத்துடன் கொட்டாவி விட்டபடி உட்கார்ந்திருந்தான்.  

அறைக்கதவை தட்டிவிட்டு ககனின் அம்மா, டிராக் சூட்டில் உள்ளே நுழைந்தார்... “குட் மார்னிங் ககி கண்ணா.... அதுக்குள்ள எழுந்தாச்சா... நைட் எப்போ வந்த கண்ணா.. இன்னும் கொஞ்ச நேரம் தூங்கி இருக்கலாமே...” என்றபடி அவனின் முன்னுச்சி முடியை கைகளால் கோதிவிட்டு, அவன் அருகில் அமர்ந்தார்.

சட்டென்று அவரின் மடியில் படுத்தபடி, “குட் மார்னிங் அம்மாபொண்ணு... இராத்திரி ரெண்டு மணி ஆய்டுச்சு ம்மா...” என்று கூறி, ஒரு முறை கொட்டாவி விட்டான். “அப்பா கிளம்புறதுக்கு முன்னாடி கொஞ்சம் பேசனும்.. அதான் எழுந்துட்டேன்...” என்றவாறு இன்னொரு கொட்டாவி விட்டான்.

“சரி சரி.. போய் பிரெஷ் ஆகிட்டு வந்து தண்ணி குடி... தொடர்ந்து கொட்டாவி வந்தா தண்ணி குடிக்கனும்னு சொல்லிருக்கேன்ல...” என்றபடி அவனுக்கு காபி எடுத்துவர கீழே சென்றார்.

இரண்டு நிமிடத்தில் ககன் புத்துணர்ச்சியுடன்... அம்மா தந்த காப்பியை ருசித்தபடி பால்கனியில் இருந்த கூடை ஊஞ்சலில் அமர்ந்து வெளியே வேடிக்கை பார்த்தான்.

“வொர்க் லோட் ரொம்ப அதிகமா கண்ணா... கொஞ்சம் டல் ஆகிட்ட மாதிரி இருக்கியே...” என்றார்.

“ஹ்ம்ம்.. கொஞ்சம் அதிகம் தான் ம்மா... ஒவ்வொரு அவுட்லெட்டா ரீபர்பிஷ் (refurbish) பண்ணறோம்ல... இன்டீரியர் டிசைனிங் டீம் நைட் முழுக்க வொர்க் பண்றாங்க... அவங்களுக்கு எங்க பசங்களும் ஹெல்ப் பண்ணினா தான் மார்னிங் பிரேக்பாஸ்டுக்கு கெஸ்ட் வரதுக்குள்ள வேலை ஆகி எல்லாம் ரெடியா இருக்கும்... உப்ப்ப்.... பசங்கள என்கரேஜ் பண்ண நாங்க யாராது இருக்கனும்ல ம்மா.. அதான்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.