(Reading time: 13 - 26 minutes)

உதி அண்ட் டீம் ஒரு மணிக்கு வந்து சார்ஜ் எடுத்த அப்பறம் எங்க டீம் கிளம்பினோம்.... இன்னும்...” என்று ககன் விளக்க..... அவனின் முதுகுக்கு பின்னால் வந்து நின்று கழுத்துப்பகுதியை மசாஜ் செய்தபடியே கேட்டுக்கொண்டிருந்தார், அவனின் அம்மா.

பேசிக்கொண்டே இருந்தவன் சட்டென்று அமைதியாகிவிட.. என்னவென்று புரியாமல் அவனின் முகத்தை பார்த்தார்... அவனின் கவனமோ அங்கிருந்து தெரிந்த சாலையில் இருந்தது.. என்னவென்று அவரும் அங்கே பார்க்க...  இவர்கள் வீட்டு பக்கவாட்டு சாலையின் ஓரமாக.. ஒரு பெண் பாதி அமர்ந்தவாறு ஒரு காலின் ஷூ லேஸ் கட்டிக்கொண்டிருக்க... இன்னொரு பெண், அவளின் பின்னால் வந்து, ஒரு முறை சுற்றும் முற்றும் பார்த்து விட்டு... வலது கால் முட்டியால், குனிந்திருந்தவளின் பின்பக்கம் லேசாக இடிக்க... அரைகுறை பேலன்சில் ஆடிக்கொண்டிருந்த அவள், முழுதாக முன்பக்கம் விழ... இடித்தவளோ ஓடியே போய் விட்டாள்.... 

அம்மாவும் மகனும் இந்த காட்சியை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க... விழுந்தவள், ஓடியவளை துரத்த.. இவர்கள் இருவரும் வயிறு குலுங்க சிரித்தனர்... “நாட்டி(naughty) கேர்ள்...”என்று கூறிக்கொண்டே திரும்பி ககனின் முகத்தை பார்த்த அவனின் தாய்க்கு, அதில் சிரிப்பை தாண்டிய ஏதோ ஒன்று இருப்பதாக தோன்றியது. ‘வெறும் ரசனைதானோ...’ என்று நினைத்தவருக்கு ‘அதுக்கும் மேலே...’என்று உணர்த்தினான் அவரின் சீமந்த புத்திரன்.

“அம்மா... நான் உங்கள கொஞ்ச நேரம் கழிச்சு பார்க்கறேன் ம்மா.. Now I need to follow her...”என்று கூறியபடி, கையில் கிடைத்த டீஷர்ட்டை அணிந்தபடி துள்ளிக் குடித்து ஓடினான்...

அவனின் அம்மாவோ “ஹை.... மாட்டிக்கிட்டான்...... என் பையன் மாட்டிக்கிட்டான்” என்று தனக்குள் கூறியபடி, தன் கணவரிடம் பகிர்ந்துக்கொள்ள வேகமாக சென்றார்.

ங்கே.. இங்கேவென்று... அவனது வீடு இருந்த தெருவிலயே நடை பயிற்சி செய்வதுபோல் சுற்றி சுற்றி வந்தபடி அப்பெண்களை தேடியவனுக்கு.... ஒரு அரைமணிநேரம் கழித்தே தரிசனம் தந்தார்கள் அவர்கள். அதுவும் எங்கே...! அவனது அம்மாவும் டாலியும் நடனப்பயிற்சி மற்றும் உடற்பயிற்சிக்கு செல்லும் ஸ்டுடியோவின் வாசலில்...!!

அவர்களை கண்டுபிடித்தவுடன்... இதுவரை இருந்த படபடப்பு பலமடங்காக.. கண்டும் காணாமல் செல்வது போல் சென்றவனனுக்கு.. அந்த நேரம் பார்த்து போன் வர வேண்டுமா..!!!

‘who’s that disturbance?!’ என்று போனை எடுத்து பார்த்தவன், அழைப்பது அவனின் தாய் என்றவுடன்... திருட்டு முழி முழித்தபடி... அவன் நின்றுக்கொண்டிருந்த இடத்திலிருந்தே தெரியும் அவனின் வீட்டை திரும்பிப் பார்த்தான்...

அவனின் செயலுக்கு பதில்செயலாக.. அவர்கள் வீட்டு மொட்டை மாடியில் நின்றுக்கொண்டிருந்த அவனின் அம்மா.. அப்பா.. மற்றும் அவனின் பிரியத்திற்குரிய அத்தை மகள் டாலி, மூவரும் ஆர்வமாக கை அசைத்தனர்... இதில் டாலி, போனை எடுத்து பேசுமாறு செய்கை செய்ய.. வேறு வழி இல்லாமல் அட்டென்ட் செய்தான்.       

“என்ன ககி அத்தான்... ரெண்டுபேர்ல யாருக்கு ரூட் விடறீங்க...?! பர்பிளா ப்ளாக்கா..?! எனக்கு ப்ளாக் தான் பிடிச்சு இருக்கு... சீக்கரம் சொல்லுங்க அத்தான்... அவங்ககிட்ட போய் பேச போறீங்களா...?! நானும் வரவா?!”என்று ககன் பேசுவதற்கு சந்தர்ப்பமே தராமல் கேள்வி கேட்ட டாலி...

அவளிடம் இருந்து போனை பிடுங்கி... “ஏன் தயங்கற ககி... தைரியமா போய் பேசு.. நான் உங்க அம்மாவை பார்த்த அன்னிக்கே ப்ரபோஸ் பண்ணிட்டேன்... ஆனா என் பசங்க ரெண்டுமே ரொம்ப தத்தி....” என்ற அவனின் தந்தை...

“டாலி எல்லாம் சொன்னா ககி கண்ணா... அவளுக்கு உதி சொன்னானாம்... அப்பாகிட்ட நீ வந்து சொல்லிக்கோ.. இப்போ மறுபடி நீ அந்த பொண்ண மிஸ் பண்ணிடாத.. நானும் டாலியும் டான்ஸ் கிளாசுக்கு கிளம்ப போறோம்.. அதுக்குள்ள நீ பேசி, எங்களுக்கு இன்ட்ரோ குடு..” என்ற அவனின் தாய்...  

மூவரின் பேச்சிலிருந்தும் ககனுக்கு புரிந்ததென்னவோ... ‘அவனின் காதலுக்கு, அவன் வீட்டில் பச்சைக்கொடி....!’ தாரா என்ன சொல்லுவளோ என்பதுதான் இப்போதைக்கு அவனின் குழப்பம்.

ஒரு முடிவுடன் எல்லா குழப்பங்களையும் ஓரம் கட்டிவிட்டு, இன்றே நேரடியாக தாராவிடம் பேசிவிடவேண்டும் என்ற நினைத்து அவளை நோக்கி சென்றான்.

இவன் அவர்களை நெருங்குவதற்கு முன், இவனை கவனித்துவிட்ட காவ்யா, “அக்கா... அத்திம் வந்தாச்சு....”என்றுவிட்டு நமுட்டு சிரிப்பு சிரித்தாள். கடந்த இரு மாதங்களாய் இப்படியே சொல்லி சொல்லி ஏமாத்தியவள் தான் என்பதால்.. இந்தமுறை காவ்யாவின் வார்த்தைகளை டீலில் விட்டாள், தாரா...

“ஆமாம் டீ... மச்சினிய பார்க்காம கண்ணு பூத்து போச்சாம்... உன் அத்திம்க்கு... அதான் உன்னை பார்க்க.. ஜாக்கிங் டிரஸ்ல ஓடி வந்துட்டார்....முதல் நாள் லேட் ஆகக்கூடாதுன்னு சொல்லி ஒரு மணிநேரம் முன்னாடியே வந்து தேவுடு காக்க வெச்சிட்டு... உனக்கு கிண்டல் வேறயா... போ.. உன் சைட் அடிக்கற வேலைய ஒழுங்கா பாரு” என்று தாரா கடுப்புடன் கின்டல் அடிக்க.... அவளின் பின்னால் நெருங்கிவிட்ட ககனை கவனிக்கவே இல்லை...

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.