(Reading time: 12 - 23 minutes)

“அது யாருனு விசாரிச்சிங்களா.. யார் அவன்..”

“நாங்க அவனை விசாரிச்சிட்டுதான் இருக்கோம்.. அவன் பேரு பாலு.. அவன்கிட்ட உண்மையை வாங்கியதும் உங்களுக்கு தகவல் சொல்றேன்.. அமிர்தாவுக்கு 24மணிநேர பாதுகாப்பு இருக்கு.. நீங்க நிம்மதியா தூங்குங்க..”

“ரொம்ப நன்றிப்பா.. வணக்கம்..” என போனை வைத்தவர் உறங்க சென்றார்..

ங்கு ரிஷியோ சத்யாவுக்கு தகவல் தந்தான்.. பின் பாலுவை விசாரிக்க ஆரம்பித்தான்.. அங்கு பாலுவை அடித்து உண்மையை வரவைக்க முயற்சி செய்த போலிஸை நிறுத்தி அவனை அமர செய்து, அவனுக்கு எதிர்புறமாய் அமர்ந்து கேள்வியை கேட்க ஆரம்பித்தான்..

“சொல்லு.. நீ எதுக்காக விக்ரம் வீட்டுக்கு போன..”

“அதுதான் உனக்கு தெரியுமே இன்ஸ்பெக்டர்.. அப்புறம் எதுக்கு கேட்குற..”

“உண்மையை உன் வாயாலயே சொல்றது உனக்கு நல்லது..”

“சரி.. நான்தான் விக்ரம் வீட்டிற்குள் நுழைந்தேன்.. அமிர்தா அறைக்குள் நுழைந்து அவளை கொல்ல ஏசியில சில பிரச்சனையை உண்டுபண்ணினேன்.. அமிர்தாவை கொல்ல டிரை பண்ணினேன்.. என்ன, அவ செத்தாளா இல்லையா..” என கூலாக கேட்டவனை அறைந்தான் ரிஷி..

“உனக்கு அமிர்தாவின் உயிர் அவ்வளவு துச்சமா போகிடுச்சா.. சொல்லு.. உன்னை அனுப்பியது யாரு? அமிர்தாவை யாரு கொல்ல நினைக்கிறாங்க?..”

“என் உயிரே போனாலும் உண்மையை உனக்கு சொல்லமாட்டேன்.. என்ன பண்ண முடியுமோ பண்ணு..”என்றவனை அடித்த ரிஷி கோபமாக வெளியே வந்தான்..

சத்யா விரைவாக போலிஸ்டேஷனுக்கு வந்தார்.. ரிஷியை அழைத்தவர் விவரம் கேட்டார்..

“அவன் விவரம் சொல்ல மாட்டிங்கிறான் சார்.. அடிவாங்கியே செத்துடுவான் போல.. ஆனாலும் யாரு அவனை அனுப்பனதுனு சொல்ல மாட்டிங்கிறான்” என புலம்பினான்..

“விசுவாசம்....”

“என்ன சார்?..”

“முதலாளிக்கு விசுவாசமாய் இருக்கிறான்..”

“ஆமாம் சார்.. இவ்வளவு விசுவாசமாய் இருக்கிறான்.. ஆனா ஒரு கெட்டவனுக்கு விசுவாசம் இருக்கிறது வேஸ்ட்..”

“சரிதான்.. இந்த விசுவாசத்தினால்தான் உண்மையான குற்றவாளி இவ்வளவு வருடமா நம்மளுக்கு தெரியாம தப்பிச்சிட்டு இருக்கான்.. அமிர்தாவின் அப்பாவை அவன் ஏன் கொல்லனும்? இப்போ அமிர்தாவையும் கொல்ல நினைக்கிற குற்றவாளி யாரு?  ஆதிநாதனுக்கு பகையாளினு யாரும் இல்லை.. ஆனாலும் அவர் கொல்லப்பட்டார்.. இப்போ அமிர்தா.. இந்த கேஸ் காம்ப்ளிகேட்டா இருக்கு..”

“கண்டிப்பா எப்படியாவது கண்டு பிடித்தே ஆகனும் சார்.. எவ்வளவு சீக்கிறம் கண்டுபிடிக்கிறமோ, அவ்வளவு சீக்கிறம் அமிர்ததரங்கிணிக்கு நல்லது..”

“சரிப்பா.. அவன் போனை செக் பண்ணியா..”

“ம்ம் பண்ணேன்.. நோ யூஸ்.. அது புதுசிம்.. இன்னிக்கு தான் வாங்கிருக்கான்.. யாருக்கும் இதுவரை அவன் கால் பண்ணல.. என இங்கு இவர்கள் பேசிக்கொண்டிருந்த நேரத்தில் கங்காதரன் வீட்டில் என்ன நடக்குதுனு பார்க்கலாம் வாங்க..

ண்ணா.. அமிர்தா தப்பிச்சிட்டா.. பாலு மாட்டிக்கிட்டான்..”

“என்னடா சொல்ற..”

“ஆமாண்ணா.. நான் தூரத்தில் இருந்து  பார்த்தேன்..”என அங்கு நடந்ததை கூறினான் தங்கவேலு.. அவன் கூறியதை கேட்ட கங்காதரனின் முகம் பயங்கரமாக மாறியது.. கோபத்தில் அருகில் இருந்த பொருட்களை உடைத்தவனை கண்டு வேலு நடுங்கினான்.. பின் சிறிது அமைதியடைந்த கங்காதரன் வேலுவிடம் திரும்பி,

“பாலு என் விசுவாசி.. அவன் உயிரே போனாலும் என் பெயர் சொல்ல மாட்டான்.. என்றவன்.. தன் அசிஸ்டண்ட் ராகவனிடம் பாலு குடும்பத்துக்கு அவர்கள் வாழ்க்கைக்கு என்ன தேவையோ அதை செய்ய சொல்லிவிட்டு வேலுவிடம் திரும்பி.,

“சேகர் எங்க இருக்கான்?..”

“அவன் ஆந்திரால வேலையா போயிருக்கான் அண்ணா..”

“அவனுக்கு போன் பண்ணி உடனே வர சொல்லு ராகவா..” நாளைக்கே கிளம்பி வரச்சொல்லு..” என தன் அசிஸ்டெண்டிடம் கூறிவிட்டு கங்காதரன் தன் அறைக்கு திரும்பினான்..  

விடியகாலை பொழுது.. கதிரவன் மெல்ல தலைகாட்டினான்.. பறவைகள் சலசலவென பறந்துக்கொண்டு தன் இரைதேட கிளம்பின.. சிறிது நேரத்தில் சூரியஒளி எங்கும் பரவ அவ்வொளி மித்ராவின் அறையில் தூங்கிக்கொண்டிருந்த அமிர்தாவின் முகத்தில் படவும் அவள் கண் முழித்தவள் திடிக்கிட்டு எழுந்தாள்.. இன்று விக்ரமின் பிறந்தநாள்.. நேற்று இரவு நடந்த பிரச்சனையில் அவள் மறந்துவிட்டாள்.. அவசரஅவசரமாய் ரெடியாகி விக்ரம் அறையினுள் நுழைந்தாள்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.