பொதுவாக பிரபா, கார்கி, கதிர் மூவருமே உறங்குவதற்கு முன்பாக, அன்றைய நாளைப் பற்றி சிறிதுநேரம் பேசிவிட்டு செல்வதே வழக்கம். இன்றோ கார்கி, கதிர் இருவருமே பிரபாவின் பதிலில் குழம்பி போயிருந்தார்கள். இதுவரை அந்த வீட்டில் பெற்றோரின் பேச்சு எழுந்ததில்லை. லீலா என்பது நண்பனின் அன்னையின் பெயர் என்றுகூட நினைவில் இல்லாதபடி மறந்திருந்தனர். ஆனால் பிரபா? அது என் அம்மாவின் பேரு என்று சொல்லும்போது அவன் குரலில் ஏக்கம் இருந்ததோ?
இன்னொருபக்கம் பிரபஞ்சன். நினைக்க மறந்த நாட்களும், வாழ்ந்து முடித்த நினைவுகளும் அவன் அக்கண்களில் படமாகியதை உணர்ந்து மௌனமானான். இதற்கு ஒரே தீர்வு, உறக்கம் தான் என்றெண்ணி அவன் கண்களை இறுக மூடி உறங்க முயற்சித்து அதில் வெற்றியும்கண்டான்.
நள்ளிரவு, 3 மணி அளவில், அந்த வீட்டில் கண்ணாடி துண்டுகள் உடைவதுபோல சத்தம் பலமாக ஒலித்திட முதல் ஆளாக கண் விழித்தாள் லீலா.ஏற்கனவே புது இடம் என்பதினால் தூக்கம் வராமல் தவித்தவள், அப்போதுதான் ந்ன்கு உறங்க துவங்கினாள் அதற்குள் அப்படியொரு சத்தம்.. ஒருவேளை பிரமையோ? என்று அவள் கண்களை கசக்கி கொண்ட நொடியே மீண்டும் கண்ணாடி உடையும்சத்தம் பலமாக கேட்டது.
“கதிர்.. கார்கி.. பிரபா” எனமூவரையும் அவள் மாறி மாறி அழைக்க, என்ன நடக்கிறது என்று முன்னமே அறிந்திருந்தவர்களாய் போர்வையை தலைவரை போர்த்தி தூங்குவது போல ஒளிந்து கொண்டனர்.
“என்னத்தான் நடக்குது?” வெயிட் பண்ணுங்க சொல்லுறேன்..
ஹாய் ப்ரண்ட்ஸ் உங்க எல்லாருடைய அன்பினாலும், வாழ்த்தினாலும், எனக்கு வேலை கிடைச்சிருச்சு.. “ஆஹா அப்போ மறுபடியும் எஸ் ஆ புவின்னு”கேட்காதிங்க.. இந்த வேலைக்கு பச்சைக்கொடி காட்டிய முக்கிய காரணமே கதை எழுத டைமிங்க் இருக்குனு தான். ஆனால் இது முதல் வாரம் இல்லையா, கொஞ்சம் அதிக வேலைகள் இருந்துச்சு.. அதான் இத்துனுண்டு எபிசோட்.,. அடுத்த எபிசோட் நாளைக்கே டைப் பண்ண ஆரம்பிப்பதால், நிச்சயம் அடுத்த வாரம் கதையை சிறப்பா தொடர்வேன்.. ஒகே வா? டாட்டா
தொடரும்...
Go to Vellai pookkal ithayam engum malargave story main page
{kunena_discuss:1166}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.