அவசரமாக தனது கைப்பேசியை எடுத்து பார்த்தாள் அனுராதா. அதில் அவளது வாட்ஸ் ஆப் புகைப்படத்தில் அவளுடன் சிரித்துக்கொண்டிருந்தனர் பெரியம்மா, ஷங்கர் கீதா மூவரும்!!! உயிர் உடைந்து விழுந்த உணர்வில் அந்த புகைப்படத்தையே இமைக்காமல் பார்த்திருந்தாள் அனுராதா.
இரவு நேரம் பதினொன்று பெரியப்பா உட்பட அனைவரும் உறங்கிப்போக அவள் மட்டும் அவன் வீட்டு தோட்டத்தில் தனியாக நடந்துக்கொண்டிருந்தாள். எப்படியும் அவன் வருவான் என தெரியும் அவளுக்கு.
இரவு நேரத்திலும் ஒளி விளக்குகளுடன் மிளிர்ந்துக்கொண்டிருந்தது அந்த தோட்டம். கோவையின் அடையாளமான சிலு சிலு காற்று அவள் அனுமதி இல்லாமலே அவளை முத்தமிட்டுக்கொண்டிருந்தது. சின்ன சின்ன மழைத்துளிகள் இருவர் மீதும் விழுந்து விளையாடிக்கொண்டிருந்தன. வீடுகள் நிறைந்த அந்த பகுதியில் சாலையில் ஆள் நடமாட்டமோ, வாகனங்களோ கூட இல்லை.
‘ஒரு வாக் போலாமா அனும்மா..’ பின்னாலிருந்து அவன் குரல் கேட்க ஒரு நொடி நின்றவள்
‘ம்..’ என்று நிமிராமால் நடந்தாள்.
அவனும் அவளுடன் சேர்ந்து நடக்கலானான். மார்புக்கு குறுக்கே கைகளை கட்டிக்கொண்டு மெதுவாக அவன் நடக்க, விரல்களை பார்த்தபடியே அவள் நடந்துக்கொண்டிருந்தாள். இருவர் தோள்களும் ஒன்றோடு ஒன்று உரசிக்கொண்டே இருந்தன. யார் பேச்சை துவக்குவது என்பது அங்கே கேள்விக்குறியாகவே இருந்தது.
‘அப்படி என்றால் இந்த விவரங்கள் அவனுக்கு முன்னமே தெரிந்திருக்கிறது என்றுதானே அர்த்தம். எப்போது தெரிந்ததாம் இந்த விவரங்கள்?’ இந்த கேள்வி அவளை குடைந்தது அவளை.
நினைவுகளை சற்றே உலுக்கி பார்த்ததில் வந்தது பதில். அவள் அந்த புகைப்படத்தை வாட்ஸ் ஆப்பில் வைத்தது சில நாட்களுக்கு முன்னால். சரியாக சொல்ல வேண்டுமென்றால் அவன் அவள் வீட்டுக்கு வந்து பெரியப்பாவிடம் திருமணம் பேசிவிட்டு சென்ற பிறகு.
அன்றே பார்த்திருக்ககூடும் அவன். அப்போதே தெரிந்திருக்க வேண்டும் அவனுக்கு. அதன் பிறகு விமான நிலையத்தில் சந்தித்த போது பார்த்தும் பார்க்காதது போல் கடந்து சென்றானே இதனால்தானோ? அதன் பிறகு நான் வாட்ஸ் ஆப்பில் அனுப்பிய குறுஞ்செய்திக்கு கூட பதில்லில்லையே இதுதான் காரணமோ?
மெதுமெதுவாய் விழிகளை திருப்பி அவன் முகம் பார்த்தாள். அதில் எதையுமே கண்டுபிடிக்க முடியாத ஒரு பாவம். மௌனம் இருவருக்கும் இடையில் பனி மலையாய் உறைந்துக்கிடந்தது.
தொடரும்...
{kunena_discuss:1147}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.