(Reading time: 12 - 23 minutes)

“அதானே பார்த்தேன், உத்ரா என்னோட தோழி ஆச்சே, என்னிடம் எப்படி சொல்லாமல் இருந்தாள் என நினைத்தேன்.” என ஷகுன் கூறினான்.

ஷகுன் வட இந்தியாவில் இருந்து வந்து இவர்களது கல்லூரியில் படித்து, இங்கேயே வேலையும் கிடைத்து, உத்ரா வீட்டு தெருவில் வசிப்பவன். அவனிடம் தான் உத்ரா அபிமன்யுவை பற்றி கேட்டு தெரிந்து கொள்வாள்.

உத்ராவும் மேடை ஏறி வந்ததும் முதலில் ஷகுனிடம் வந்து தான் பேச ஆரம்பித்தாள். இதை பார்த்துக் கொண்டிருந்த அபிமன்யுவிற்கு தான் கொஞ்சம் எரிச்சலாக இருந்தது.

உடனே உத்ராவின் அருகில் வந்து உன்னுடைய தோழிகள் இன்னும் வரவில்லையா? என கேட்டான்.

“உங்களுடைய தோழர்களைப் போல் எதோ பேன்ட், சட்டையை மாட்டிக் கொண்டு வர முடியுமா? பெண்கள் ஆச்சே, நன்றாக உடை அணிந்து, முகத்திற்கு ஏற்ற ஒப்பனை செய்து வர வேண்டாமா? என்று அவனையே திருப்பிக் கேட்டாள் உத்ரா.

“கொஞ்சம் கம்மியாக பேசிப் பழகு உத்ரா.” என்று அபி கூற

“இதற்கு மேல் கம்மியாக பேச வேண்டுமானால் ஊமை பாஷை தான் பேச வேண்டும்.” பதில் உரைத்தாள் உத்ரா.

அதற்குள் ஜானவி வந்து விட அவர்களது உரையாடல் அத்துடன் நின்றது.

அதன் பின் பால்கியின் பிசினஸ் வட்டார தோழர்கள், விக்ரமின் கிளையன்ட் வட்டாரங்கள் என்று கூட்டம் கூடத் துவங்கியது. விக்ரம் நகரில் பெரிய லாயராக இருந்தார்.

இவர்களுக்கெல்லாம் பெரிதாக வீட்டு பெண்களை தெரியாததால் காலையில் நடந்தது போல் பெரிதாக கேள்விகள் எழவில்லை. விருந்து சுமுகமாகவே சென்றது.

மதிய உணவிற்கு பின் பால்கி தான் மனசு கேட்காமல் காவல் நிலையம் சென்று, பெரிய பெண்ணைப் பற்றி ஒரு புகார் அளித்து வந்தார். அவரால் இப்பொழுதும் நம்ப முடியவில்லை. உத்ராவாவது எப்பொழுதாவது அவர் கூறுவதை கேட்காமல் எதிர்த்து கேள்வி கேட்பாள். ஆனால் பூமிஜா பால்கியின் பேச்சுக்கு மறு பேச்சு பேச மாட்டாள்.

பால்கியின் இன்டீரியர் டெகரேஷன் தொழிலுக்கு உதவவே பி.ஆர்க் எடுத்து படித்தாள். மற்றவர்க்கு உதவுவதிலும் மிகுந்த ஆர்வம் காட்டுவாள். கண் தெரியாதோருக்கு பரிட்சை எழுத, தனக்கு கல்லூரி இருந்தாலும், லீவு போட்டு சென்று உதவி செய்வாள். அப்படிப் பட்ட பெண்ணா இன்று தன்னிடம் சொல்லாமல் சென்றாள் என்று வருத்தமாக இருந்தது பால்கிக்கு.

ஒரு வழியாக மனதை தேற்றிக் கொண்டு வந்த விருந்தினர்களை உபசரித்தார். சுனைனாவிர்க்கும் வருத்தமாகத் தான் இருந்தது. இருப்பினும் இது வருந்திக் கொண்டு இருக்கும் நேரம் இல்லை என்று உணர்ந்து அவரும் வந்தவர்களை கவனித்து அனுப்புவதில் மனதை திருப்பினார்.

இசை குழுவினரின்  இன்னிசை கச்சேரியும் இருந்தது. அவர்களுடன் சேர்ந்து அபிமன்யுவின் தோழர்களும் பாடி ஆடியபடி இருந்தனர். அதில் ஷகுன் வட இந்தியன் என்பதால் சில இந்தி பாடல்களுக்கு நடனம் ஆடியபடி இருந்தான். அதை தன் தோழிகளுடன் சேர்ந்து ரசித்துக் கொண்டு இருந்தாள் உத்ரா. ஒருவழியாய் கூட்டம் பரிசுகளை கொடுத்து முடித்து இறங்கி இருந்தனர்.

சிறிது இடைவெளியில் அபிமன்யுவின் ஒன்று விட்ட சித்தி ஒருவர் மேடை ஏறி வந்தார்.

“இவங்க தான் என்னோட சித்தி” என்று அபிமன்யு கூறியது அங்கிருந்த சத்தத்தில் காதில் விழாமல் நடனத்தை பார்த்துக் கொண்டிருந்த உத்ராவிடம், “உத்ரா” என்று சற்று சத்தமாகவே அழைத்தான் அபி.

திடுக்கிட்டு திரும்பிய உத்ராவிடம், “உன் கவனம் எங்கு இருக்கிறது? என்று கேட்டான்.

அதற்கு ஏன் இவனுக்கு இவ்வளவு கோபம் என்று புரியவில்லை உத்ராவிற்கு. “சாரி பாட்டு சத்தத்தில் கேட்டக்கவில்லை.” என்ற பொழுது மனதிற்கு சற்று வருத்தமாக இருந்தது உத்ராவிற்கு. திருமணதிற்கு பின் முதல் முறை தனது பெயரை இப்படி அதட்டுவது போலா கூப்பிடுவான் என்று இருந்தது.

அபிமன்யுவிற்க்கோ, ஒரு வேளை இவள் விரும்பியது ஷகுனாக இருக்குமோ என்று தோன்றியது. ஆனால் ஷகுனை பார்த்தால் அப்படி ஒன்றும் தெரியவில்லை. அவன் இன்று மேடையில் உத்ராவை பார்த்தும் பெரிதாக ஏமாற்றம் அடைந்தார் போல் தெரியவில்லை.

அப்பொழுது தான் உத்ரா ஒரு தலை விருப்பம் என்று சொன்னது நினைவு வந்தது அபிக்கு. அதனால் ஷகுனை பற்றி ஒரு கவலையும் இல்லை. இந்த உத்ரா தான் மனம் மாற கொஞ்சம் நேரம் கொடுக்க வேண்டும் என முடிவு செய்து கொண்டான்.

அதன் பின் கச்சேரி முடிந்து, அனைவரும் விருந்து உண்டு முடித்த பின் வீட்டிற்க்கு கிளம்பினர்.

சுனைனாவும், பால்கியும் தான் சிறிது வருத்தத்தில் இருந்தனர். இருப்பினும் சடங்குகள் முறைப்படி நடக்க வேண்டி மனதை தேற்றிக் கொண்டனர்.

அனைவரும் வீட்டிற்கு வந்த பின், மாமா குமாரும், அத்தை வசுவும் அறையை அலங்கரிக்க எண்ணினர். ஆனால் அதிக நேரம் இல்லாததால் மண்டபத்தில் இருந்து கொண்டு வந்திருந்த ரோஜாக்களில் இருந்து, இதழ்களை உதிர்த்து, படுகையில் சிலதை தூவி, ஃபான் இறக்கையில் மேலும் சில இதழ்களை போட்டு வைத்தனர். ஏ.ஸி ஓடிக் கொண்டு தான் இருந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.