(Reading time: 16 - 32 minutes)

தொடர்கதை - என் நிலவு தேவதை – 14 - தேவிஸ்ரீ

En nilavu devathai

ற்போது மணி இரவு பதினொன்று ஐம்பது.. விக்ரம் அம்முவின் அறைக்குள் இருந்தான்.. தன் நிலவின் முகத்தையே கண் கொட்டாமல் பார்த்து கொண்டு இருந்தான்... அச்சு அசல் குழந்தையே தான்... வளராத குழந்தை.. பார்ப்பதற்கும் சரி, செய்கைகளிலும் சரி... இவளை கட்டிக்கிட்டு நான் என்ன பாடு பட போறேன்னு தான் தெரியல... என நினைத்து சிரித்து கொண்டான்.. பின் டைம் பார்த்தவன் அவளை மெல்ல தட்டி எழுப்பினான்..

“அம்மு.. அம்மு...”

“ம்ம்ம்....” என்றாள்.. அவளுக்கு படுக்கையை விட்டு எழவே விருப்பமில்லை... சிணுங்கி கொண்டே போர்வையை இழுத்தி போர்த்தி கொண்டு தூங்கவும்,

“எந்திரிங்க birthday baby...” என அவன் பொறுமையுடன் கூற,

“ஊகூம்...” என்றவளை பார்த்தவன், இது வேலைக்காகாது என நினைத்து,

“ஹேய் கும்பகர்ணி.. தூங்கியது போதும் எழுந்திரி...

“முடியாது போடா...”

“அடிப்பாவி.. சைடு கேப்ல டா வா போடுற.. நானும் பர்த்டே ஆச்சேனு பொறுமையா பேசுனா ரொம்ப தான் பண்றடி..”

“என்ன டீ யா...” என சண்டை போட எழுந்தாள்..

“எனக்கு தான் தெரியுமே உன்னை பத்தி.. எதை சொன்னா இப்படி தடாலுனு எழுவேனு எனக்கு தெரியாதா...”

அதை கேட்டவள் அவனை பலமாக முறைத்தாள்..

“ஓகே ஓகே.. டைம் ஆச்சு..” என்றவன் அவளின் கண்ணை ஒரு துணியால் கட்டிவிட்டு, தன் இரு கரங்களால் அவளை பூ போல் ஏந்தி சென்றான் மொட்டைமாடிக்கு... அவன் கையில் ஏந்திய அந்த நொடியில் ஒரு நிமிடம் திடுக்கிட்டவள்.. மறுகணம் அவள் மனம் மகிழ்ச்சியில் துள்ளியது... தன் மனம் கவர்ந்தவனின் கரத்தில் மிதந்தாள் அமிர்ததரங்கிணி..

“என்ன பண்றீங்க...” என கெஞ்சலுடன் கேட்டவளை ஆசையுடன் பார்த்தவன்,

“கொஞ்ச நேரம் அமைதியா இருங்க மேடம்.. பொறுமை என்றால் என்னனு உனக்கு தெரியாது தான்.. அதுக்காக பர்த்டே அன்னைக்கு கூட இப்படி அவசரப்படணுமா..”

“சரி.. சரி.. நான் ஏதும் கேக்கல..” என்றவள் வாயை மூடி கொண்டாள்.. அவளுக்கு தன் பிறந்தநாள் ஆரம்பிக்கும் சமயத்தில் விக்ரம் தன்னுடன் இருப்பதே அவளுக்கு போதுமானதாகவும், மன நிறைவையும் தந்தது.. அவளுக்கு இந்த வருட பிறந்த நாள் மறக்க முடியாத நாளாக அமைய போவதை உணர்ந்தாள்..

மொட்டைமாடிக்கு படியேறி சென்றவன், அங்கு நடுவில் நின்று அவளை பத்திரமாக கீழே இறக்கி விட்டான்..

“அப்பாடி வந்தாச்சா.. நான் கண்ணை திறக்கலாமா..” என்றவள் கண் கட்டை அவிழ்க்க முற்பட்டவளை தடுத்து நிறுத்தியவன்..

“ஊகூம்.. அவசரபடாத.. நீ இன்னும் ஒரு நிமிடம் வெயிட் பண்ணி தான் ஆகணும்..

“போங்க மாமா.. இன்னும் வெயிட் பண்ணனுமா...” என அம்மு கூறவும்,

“மாமா வா.. அன்னைக்கும் இப்படி தான் கூப்பிட்டு கடைசியில் ungleனு சொல்லிட்ட” என அலுத்து கொண்டான்.. அதை கேட்டு சிரித்தவள்,

“டைம் ஆச்சா...”

“ஆச்சு.. ஆச்சு..” என்றவன் அவள் பின்னே நின்றான்.. அவன் மூச்சுக்காற்று அவள் கழுத்தில் பட்டு குறுகுறுத்தது.. அதை உணர்ந்தவன் சத்தம் வராமல் சிரித்தான்.. பின் மெல்ல அவள் கண் கட்டை அவிழ்த்தவன், அவளை பின்னிருந்தபடியே அணைத்துக்கொண்டு, அவள் காதில்,

“பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஹனி..” என மெல்லிய குரலில் காதலுடன் அவள் கண்ணை பார்த்து கூறினான்... அம்முவின் உடல் மெல்ல நடுங்கியது.. இதுவரை விக்ரம் அவளிடம் இந்த மாதிரி காதலுடன் பேசியதில்லை.. அவள் கன்னம் சிவந்தது.. அவளை பின்னிருந்து அணைத்ததால் அவளுக்கு பேச்சே வரவில்லை.. அவன் கண்களை பார்த்தாள்.. அவன் அவளையே பார்த்துகொண்டு இருந்தான்.. திடீரென கண்ணடித்தான்.. அதை கண்டதும் சட்டென அவள் பார்வையை விலக்கியவள் அப்போது தான் தாங்கள் இருக்கும் இடத்தை சுற்றி கவனித்தாள்.. அதை கண்டு கண்களை விரித்தாள்...

ஆங்காங்கே வித விதமாய் பலூன்களை கொண்டும் அவளுக்கு பிடித்த ரோஜாக்களை கொண்டும் அழகாய் decarate செய்யப்பட்டு இருந்தது அந்த மொட்டை மாடி.. அதுமட்டும் அல்லாமல் அங்கு முழுவதும் அகல்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு அந்த இடமே பிரகாசித்தது... முன்னொரு தடவை அவளுக்கு மெழுகுவர்த்தி வெளிச்சத்தை விட அகல்விளக்கு வெளிச்சம் தான் எனக்கு பிடிக்கும் என மித்ராவிடம் சொல்லும் போது அங்கு விக்ரம் இருந்தது நினைவுக்கு வந்தது.. அதை நினைத்து புன்னகைத்தவள்.. அவன் புறம் திரும்பி அவனை கட்டிக்கொண்டாள்..

“ரொம்ப பிடிச்சிருக்கு..” என அர்த்தம்போதிந்த வார்த்தையை கூறியவளை கூர்ந்து நோக்கினான்... பின்,

“அப்படியா..” என்று அவள் நெற்றியில் முத்தமிட்டவன்,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.