(Reading time: 16 - 32 minutes)

அன்புள்ள உயிரே அன்புள்ள அன்பே

இதில் யாவுமே இங்கு நீதான் என்றால்

என்ன தான் சொல்ல சொல் நீயே

பேர் அன்பிலே ஒன்று நாம் சேர்ந்திட

வீண் வார்த்தைகள் இனி ஏன் தேடிட

என பாடலை உணர்ந்து பாடினாள் அமிர்ததரங்கிணி.... விக்ரமுக்கு வார்த்தையால் விவரிக்கமுடியாத அளவு சந்தோசமடைந்தான்...

இருவரும் ஒருவரை ஒருவர் கையணைப்பில் தங்களை மறந்திருந்தனர்...

விக்ரம் மெதுவாக தனது பேண்ட்பாக்கெட்டில் இருந்து ஒரு பொருளை எடுத்தான்... அதை கண்டவள் துள்ளி குதித்தாள்...

“ஐ... எனக்கு தெரியும்... நீங்க கிப்ட் இல்லாம வரமாட்டிங்க..” எனவும், அவளை கண்டு ரசித்து “அப்படியா..” என போலியாய் வியப்பு காட்டியவன் கையில் இருந்த சிறுபெட்டியை திறந்தான்... அதில் அழகிய வைர மோதிரம் இருந்தது...

மெல்ல அவள் கையை பிடித்தவன், அவள் கண்ணை பார்த்து கண்களாலே சம்மதம் கேட்க, அவளும் மெல்ல தலையாட்டினாள் மகிழ்ச்சியுடன்...

அவளின் மென்மையான கரங்களின் விரலில் அன்பாய் அதை அணிவித்தவன் அவள் நெற்றியில் முத்தமிட்டான்...

“இந்த மோதிரத்தை கவனித்தாயா நிலா...”

“நிலாவா..”

“ம்ம்ம்... நிலா தான்.. என் நிலா...”

“ஆனா என் பேரு அது இல்லையே..” என சிணுங்கலுடன் கேட்டவளின் தலையில் மெதுவாய் கொட்டியவன்,

“மண்டு..மண்டு.. உன் பேரோட அர்த்தம் என்னான்னு தெரியுமா..”

“என்ன..”

“அமிர்ததரங்கிணினா நிலவுனு அர்த்தம்... இப்போ சொல்லு.. நான் நிலான்னு கூப்பிடாம வேற யார் கூப்பிடறது.. எல்லோரும் உன்னை அம்மு,அமிர்தானு உன் பெற சொல்லி கூப்பிடுறாங்க, நீ என் ஸ்பெஷல்.. அப்போ நான் உன்னை ஸ்பெஷல்லா கூப்பிடனும்.. புரிஞ்சதா..”

“ம்ம்ம்.. புரிஞ்சது..” என மெல்ல புன்னைகைத்தவள் அப்போது தான் ரிங்கை கவனித்தாள்...

“வாவ்....”

“என்னாச்சு..”

“இந்த ரிங் பாருங்க V னு இருக்கு.. உங்களை மீன் பண்ற மாதிரி...”

“நல்லா பாரு.. V மட்டும் தான் தெரியுதா...” எனவும் உற்று பார்த்தவள்,

“N ஆ...” என குழம்பினாள்..

“N FOR நிலாடீ...”

“சூப்பர் மாமா.. உங்க லெட்டரும் இருக்கு, என் லெட்டரும் இருக்கு..”

“மாமான்னு கூப்பிடாதடீ.. எனக்கு ungleனு கூப்பிடறமாதிரி இருக்கு..” என சலித்து கொண்டவனை பார்த்து சிரித்தவள்...

“வேற எப்படி தான் கூப்பிடறதாம்...” எனவும்,

“விக்ரம்னு பேர் சொல்லியே கூப்பிடு...” எனவும் எதோ சொல்லகூடாத வார்த்தையை சொன்னது போல் அவள் ரியாக்ட் செய்தாள்..

“என்ன... நான்... உங்க... பேர்.. சொல்லி.. கூப்பிடணுமா...” என்றவளை விசித்திரமாய் பார்த்தான்..

“அதுல என்ன PROBLEM உனக்கு.. ஏஜ் அதிகம்னு சொல்லி என்னை கிழவன் ஆக்காத..” எனவும் சிரித்து விட்டாள்...

“சரி பாஸ்.. அப்படியே ஆகட்டும்..” என்றவளை அவன் முறைத்து பார்க்கவும்,

“என்ன... நீங்க நீங்க மட்டும் புதுசா எனக்கு பேரு வெச்சிங்க இல்ல, நானும் தனித்துவமா உங்களை கூப்பிட வேணாமா.. அதனால நான் யோசிக்கணும்..” என்றவள், “விக்கினும், விக்ரம்னும் கூப்பிட முடியாது, ஏன்ன, எல்லோரும் உங்களை அப்படி தானே கூப்பிடறாங்க.. அதையும் சுருக்கினா... என யோசித்தவள்,

“ரம்னு கூப்பிடட்ட...” என்றவளை முறைத்தான்..

“வேண்டாமா.. அதுக்கு எதுக்கு முறைக்கறீங்க பாஸ்... விம் ஓகே வா?...” என்றவள் அவனிடம் ஒரு அடியை பரிசாக வாங்கி கொண்டாள்...

“அம்மா.. தாயே.. நீ ஏதும் சொல்லி கூப்பிட வேணாம்... என் பேரை கொலை பண்ணது போதும்...” என கையெடுத்து கும்பிட்டான்.. அதை பார்த்து சிரித்தவள்,

“என்ன பண்றது மாமா... உங்க பேரு அப்படி... சரி.. ஓகே.. விக்ரம்னா சூரியன்னு அர்த்தம்...  அப்போ இந்த நிலவுக்கு ஏத்த சூரியன் நீங்கதானா...” என காதலுடன் கேட்டவளை அவள் கரத்தை பற்றி இழுத்தவன் அவளை அணைத்து கீழே அமர்ந்து தன் தோளில் சாய்த்து கொண்டான்,

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.