(Reading time: 16 - 32 minutes)

“கேக் கட் பண்ண வேண்டாமா..” என அவன் கூறவும் தான் அங்கு இருந்த கேக்கை கண்டாள்.. அவளுக்கு பிடித்த சாக்லேட் சர்ப்ரைஸ் கேக்... அதன் மேலே “ஹாப்பி பர்த்டே ஸ்வீட்ஹார்ட்..” என எழுதி இருந்ததை கண்டு முகம் மலர்ந்தாள்.. அவளையே பார்த்து கொண்டு இருந்தவன் அவள் புன்னகையை கண்டு மகிழ்ச்சியடைந்தான்...

விக்ரம் பிறந்தநாள் பாட்டு பாட, அமிர்தா புன்னகையுடன் கேக் கட் செய்தாள்.. அவனுக்கு ஊட்ட முயற்சிக்கையில் அவன் அதை மறுத்து அவளுக்கு ஊட்டி விட, அவள் மற்றொரு கேக் துண்டை அவனுக்கு அவள் கையால் ஊட்டினாள்...

“ஓகே.. எங்க என் கிப்ட்...எங்க என் கிப்ட்...” என பரபரத்தவளை விநோதமாக பார்த்தபடி,

“ஹலோ.. அதன் இவ்ளோ decarate பண்ணி கேக் வாங்கி வெச்சு கட் பண்ணியாச்சே.. இன்னும் என்ன...” என அவன் கிண்டலுடன் கேட்கவும் அவள்,

“ஹான்.. நீங்க பொய் சொல்றீங்க..”

“ஹேய் நான் உண்மையா தான் சொல்றேன்.. என்கிட்ட கிப்ட் இருக்கானு நீயே பாரு..” என கையை விரித்து காண்பித்தான்.. அவளும் எங்காவது ஒளித்து வைத்திருப்பானா என்று சுற்றியும் முற்றியும் பார்த்தவள் அது போல் இல்லாததை கண்டு சோர்ந்து போனாள்..

“இப்போ என்ன ஆயிடுச்சின்னு நீ முகத்தை இப்படி வெச்சிருக்க..” என அவன் அதட்டினான்..

“உண்மையாலுமே கிப்ட் இல்லையா..” என வருத்தத்துடன் கேட்டவளை பார்த்து மனம் மாறியவன்,

“அதுக்கு முன்னாடி ஒரு வேலை இருக்கு..” என அவள் முன்னே வந்தான்,

அவள் இரு கைகளையும் பற்றியவன், அவள் கண்களை பார்த்தான், பின் அவளிடம் பேச ஆரம்பித்தான்..

“நான் முதல்முதலா உன்னை காலேஜ் ஹாஸ்டலில் தான் பார்த்தேன்.. அப்போ என் தங்கை மித்ரா, என் நந்தினி அத்தை மாதிரி நீ இருக்கறதா சொன்னதை கேட்டு உன்னை பாக்கலாமுன்னு வந்தேன்.. அப்போ நீ என்னை பாத்தியானு தெரியாது.. நான் உன்னை பார்த்தேன்.. அதிர்ச்சியாயிட்டேன்.. நீ என் அத்தையை போலவே இருந்தாய்.. அப்புறம் அடிக்கடி உன் முகம் என் கண் முன்னே வந்து வந்து போகும், தூக்கமே வராது.. எனக்கு என் அத்தையை ரொம்ப பிடிக்கும்.. அதனாலதான் அடிக்கடி உன்னை பத்தியே நினைக்கிறேன்னு நினைச்சி என்னை நானே சமாதானம் பண்ணிக்கிட்டேன்.. ஆனாலும் உன்னை என்னால பாக்காம இருக்க முடியல.. அப்புறம் உனக்கே தெரியாம அப்பப்போ உன்னை பார்க்க காலேஜூக்கு வருவேன்.. முதலில் சாதாரணமா இருந்தது போல தான் தெரிந்தது.. ஆனா நாள் ஆகஆகத்தான் எனக்கு நீ என் அத்தை மாதிரி இருக்கறதுனால தான் எனக்கு உன் மேல ஈர்ப்புனு நான் நினைத்தது தப்புன்னு புரிந்தது...உன்னை பிடிச்சிருக்குன்னு என் மனசுக்கு தெளிவா புரிந்தது..” இதை எல்லாம் விக்ரம் சொல்வதை ஆச்சர்யத்துடன் கேட்டு கொண்டு இருந்தாள் அம்மு..  

“உன்னை பார்க்காம என்னால இருக்கவே முடியாது.. எப்பவும் உன் சிரிச்ச முகம் என் கண் முன்னாடி வந்துக்கிட்டே இருக்கும்.. கண்ணடிச்சிட்டு, குறும்புத்தனம் பண்ணிக்கிட்டு, சிரிச்சிக்கிட்டு, கோவிச்சிக்கிட்டு, சண்டைபண்ணிக்கிட்டு, சேட்டை பண்ற உன்னோட இந்த முகம் இருக்கே.... என்னை தூங்கவே விடாது.. எப்படி உன்னை பார்த்து லவ் பண்ணேன்னு எனக்கே தெரியலை...” என குறும்பாக கூறி சிரித்தவனை பார்த்து அதிர்ச்சியிலும் ஆனந்தத்திலும் கண்ணை விரித்தாள்....

“யெஸ் மை டியர் ஸ்வீட்ஹார்ட்... நீ யோசிக்கிறது சரி தான்.... நான் உன்னை ரொம்ப ரொம்ப ரொம்ப காதலிக்கிறேன் நிலா….” என நிறுத்தி நிதானமாக ஒவ்வொரு வார்த்தையாக மெதுவாய் கூறினான்...

சொல்லி விட்டான்... சொல்லியே விட்டான்... அவள்மீது அவனுக்கு இருக்கும் காதலை சொல்லியே விட்டான்... அம்முவுக்கு மகிழ்ச்சியில் கண்கள் கலங்கின... அவள் இதை எதிர்பார்க்கவில்லை.. சத்தியமாக எதிர்பார்க்கவில்லை... இந்த காதலுக்காக அவள் ஏங்கி தவித்தது உண்மைதான்... விக்ரம் இவ்வளவு சீக்கிரம் தன் காதலை அவளிடம் ஒப்புக்கொள்வான் என அவள் நினைக்கவில்லை... சந்தோசத்தில் அவன் மார்பில் சாய்ந்துக்கொண்டாள்...

“என்ன.. பதிலே காணோம்..” என குறும்பாய் கேட்டவனை பார்த்து சிரித்தவள்...

“ம்ம்ம்... என்ன சொல்லணும்..” என கேலியுடன் அவள் வினவ..

“ஏண்டி சொல்லமாட்ட... நீ நான் கெஞ்சனும்னு நினைக்கிற... ம்ம்ம்... நடத்து.. நடத்து..”

“நீங்க என்ன ஒன்னும் டீ போட்டு பேச வேண்டாம்...”

“வேற எப்படிங்க பாட்டி கூப்பிடறது...” எனவும்,

“உங்களை...” என கடுப்பாகியவள்.. அவன் காதலுடன் பார்க்கவும்  அவனை கோபமாய் பார்த்தாள்... அதை கண்டவன்,

“வேற என்னடி பண்ண சொல்ற.. நான் கூப்பிடாம வேற யார் கூப்பிடனும்னு எதிர்பார்க்கிற...” என சற்று கோபமாகவே கேட்டான்.. அதை கேட்டவள் அதில் நியாயம் இருப்பது போல் தோன்றவும் கோபம் தணிந்தாள்...

“இப்போ என்ன.. நீங்க எப்படியோ ஒன்னு கூப்பிடுங்க... நான் ஏதும் சொல்லல...” என்றவள், சரியான அடாவடி.. என முணுமுணுத்தாள்... அதை கேட்டு ரசித்தவன்,

“என்னடி முணுமுணுக்குற..” என அதட்டவும்,

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.