“ஆமாம்... இந்த சூரியனுக்கு ஏத்த நிலவு தான்... நீ என் நிலவு தேவதைடீ...”
“ஆகா.. அப்படியா...” என்றவள் வரிசைப்பற்கள் தெரிய சிரித்தாள்.. இருவரும் சிறிது நேரம் அப்படியே அமர்ந்திருந்தனர்... விக்ரம் அம்முவிடம்,
“கிப்ட் பிடிச்சதாடீ..”
“ம்ம்ம்... சூப்பர்..”
“அப்போ அந்த கிப்டே போதும்னு சொல்ற...”
“ஐ.... அப்போ இன்னும் கிப்ட் இருக்கா...” என குழந்தையாய் துள்ளி குதிக்க போனவளை தடுத்து நிறுத்தியவன், அருகில் இருந்த டேபிள் அடியில் ஒரு கவரை எடுத்தான்...
“ரிங் என்னோட லவ்வுக்கான கிப்ட்... இது உன் பர்த்டேக்கு...” என அவன் கொடுக்கவும், அதை வேகமாக வாங்கியவள் அதை பிரிக்க முற்பட,
“பொறு.. இது நீ தனியா பிரிச்சு பாரு..”
“ஊகூம்...”
“சொன்ன கேளுடா.. மை ஸ்வீட் நிலா இல்ல...”
“ம்ம்ம். சரி...”
“ONCE AGAIN, MANYMORE HAPPY RETURNS OF THE DAY MY SWEETHEART... LOVE U NILA...” என அவள் கைகளில் முத்தமிட்டவன்,
“நேரம் ஆச்சுடா... நீ போய் தூங்கு...” என அவன் அவளை அனுப்பி வைக்க, அவளோ அவன் எதிர்பார்க்காத நேரத்தில் அவன் இரு கன்னங்களிலும் முத்தமிட்டவள் தேங்க்ஸ் என்று கூறி ஓடிவிட்டாள்... அதை கண்டு புன்னகைத்தவன் அங்கே நின்று விட்டான்..
அம்முவுக்கு உலகையே வென்று விட்ட உணர்வு.. ஆசையாய் மோதிரத்துக்கு முத்தமிட்டவள் அவள் ரூமுக்கு சென்று அவன் தந்த கிப்ட் கவரை ஆராய்ந்தாள்...
செவ்வக வடிவில் ரெட் கலரில் PACK செய்யப்பட்ட கிப்டில் “என் அன்பு காதலிக்கு... பிறந்தநாள் பரிசு...” என எழுதப்பட்டிருந்ததை ஆசையுடன் பார்த்தாள்.. ஆவலுடன் மெதுவாய் பிரிக்க ஆரம்பித்தாள்...
டைரி போல் இருந்ததை பிரித்தால் முதல் பக்கத்தில் பல வண்ணங்களில் விக்ரம் கைப்பட எழுதிய பிறந்தநாள் வாழ்த்து அலங்கரித்தது...
அதன்பின் திருப்பிய பக்கங்களில் அனைத்திலும் அவளின் விதவிதமாக போட்டோக்கள் படதொகுப்பாய் நிரம்பியிருந்தன... ஒவ்வொரு போட்டோவிலும் ஒவ்வொரு போஸில் இருந்தாள்... அவை அனைத்தும் அவளுக்கே தெரியாமல் CASUALலாக எடுக்கப்பட்டது.. அதன் கீழே அதை குறித்து கவிதைகளும் இடம் பெற்றிருந்தன...
வாழ்த்துக்கு அடுத்த பக்கத்தில், “இந்நேரம் இது என்னனு பார்த்திருப்ப... எல்லா போட்டோவும் உனக்கு தெரியாம நானே எடுத்தது தான்... முதல் முதலாய் சின்ன சின்னதாய் கவிதை எல்லாம் ட்ரை பண்ணிருக்கேன்.. இது எல்லாம் நெட்ல சுட்டது இல்லமா.. அனைத்தும் என்னுடையதாக்கும்... சுமாரா இருந்தா அட்ஜஸ்ட் பண்ணிக்கோ...” என்று இருக்கவும் சிரித்தாள்... திருடன் என மனதினுள் செல்லமாய் திட்டினாள்...
முதல் போட்டோவில் அவள் அழகாக சிரித்து கொண்டு இருந்தாள்.. அதன் கீழே,
அனுதினமும் அழகைச்
சிந்தும் நிலவு...
புன்னகை சிந்தியது
இன்று...
அடுத்த பக்கத்தில், சிறுகோபத்தில் அமர்ந்திருந்த புகைப்படம் இருக்க, அதன் கீழே.....
விழிகள் சுருக்கி
இதழை முன்சுழித்து
கரத்தில் கன்னம் சாய்த்து
அழகாய் அமர்ந்திருந்தாய் (நீ!...)
செல்லமாய் கோபித்து கொண்டே.....!
நாளெல்லாம்
சலிக்காமல் காண்பேனடி...
என் அன்பே...
உன் செல்லக் கோபத்தை...
அடுத்த போட்டோவில் கோட்டையை பிடிப்பது போல் சிந்தித்து கொண்டிருந்தாள்... அதன் கீழே,
தோழிக்கு வாழ்த்து மடல் எழுதவே
சிந்தனையில் மூழ்கினாய் நீயடி!....
கவிதையே கவிதையை
சிந்திக்கும் அழகில்
மூழ்கிப்போனேன் நானடி!...
அதற்கடுத்த பக்கத்தில் யமுனாவை மிரட்டியபடி நின்று கொண்டிருந்தாள் அம்மு...
விரல்கள் நீட்டி...
விழிகள் உருட்டி...