“ஐயா சாமி... எதுவும் இல்லை.... உங்ககிட்ட பேசி ஜெயிக்க முடியுமா?..”
“ஹா...ஹா..ஹா..” என சிரித்தவன் அவளை காதலுடன் நோக்கினான்..
“சரி சொல்லு..”
“என்ன?..”
“எனக்கு பதில் சொல்லடி..”
“சொன்னாதான் தெரியுமா... என் மனசுல இருக்கறது உங்களுக்கு தெரியவே தெரியாது பாருங்க.. நான் எப்பவோ சொல்லிட்டேன்.. ஐயா தான் லேட்..” என பிகு செய்தாள்.. அதை கேட்டு அவன் அவளை ஆசையாக பார்த்தான்..
“இப்படியே நின்னுகிட்டு இருந்தா எப்படி..”
“வேற என்ன பண்ண சொல்ற..” என கண்ணடித்தவன், அவள் அருகே வரவும் பின்வாங்கினாள்..
“ஸ்டாப்..ஸ்டாப்..ஸ்டாப்.. நான் கிப்ட் ஏதும் இல்லையானு தான் கேட்க வந்தேன்...” என வேகவேகமாக கூறினாள்...
“நானே உனக்கு பெரிய கிப்ட் தான் வேற என்ன வேணும் உனக்கு..”
“ஐ...ஐ... இதை சொல்லி நீங்க எஸ்கேப் ஆக நான் விட மாட்டேன்.. எனக்கு கிப்ட் வேணும்.. என்ன லவ்வர் நீங்க... கேர்ள்பிரண்ட்க்கு propose பண்ணும்போது கிப்ட் தரனும், பர்த்டேக்கு கிப்ட் பண்ணனும் இது கூட இல்லேன்னா எப்படி..” என அவள் சிணுங்கலுடன் கூறியவள், அவனை பார்த்தாள்.. அவன் முகத்தில் எதோ ஒன்று வித்தியாசம் தெரிந்தது.. என்னவாக இருக்கும் என அவள் யோசிக்கையில், அருகே வந்து அவள் கையை பிடித்தவன், மெல்லிய குரலில் பாட ஆரம்பித்தான்...
நிலா நீ வானம் காற்று
மழை என் கவிதை மூச்சு
இசை துளி தேனா மலரா
திசை ஒலி பகல்.........
விக்ரம் மெதுவாக பாட ஆரம்பித்தான்.. அவனுக்கு தெரியும், இந்த பாட்டு அவளுக்கு பிடித்த பாடல் என்பது.. அது மட்டுமில்லாது, தன் காதலை உணர்த்தும் வகையில் இந்த பாடலை பாட ஆரம்பித்தான்..
அம்முவுக்கு வியப்பாக இருந்தது.. அவன் பாடுவான் என அவள் எதிர்பார்க்கவில்லை.. காதலோடு அவன் பாடுவதை அவள் ரசித்தாள்... அவன் தோளில் சாய்ந்து கொண்டு அவன் டுவதை கேட்க ஆரம்பித்தாள்..
நிலா நீ வானம் காற்று
மழை என் கவிதை மூச்சு
இசை துளி தேனா மலரா
திசை ஒலி பகல்.........
தேவதை அன்னம் பட்டாம்பூச்சி
கொஞ்சும் தமிழ் குழந்தை
சிணுங்கல் சிரிப்பு முத்தம்
மௌனம் கனவு ஏக்கம்
மேகம் மின்னல் ஓவியம்
செல்லம் பிரியம் இம்சை
இதில் யாவுமே நீதான் எனினும்
உயிர் என்றே உனை சொல்வேனே
நான் உன்னிடம்... உயிர் நீ என்னிடம்...
நாம் என்பதே... இனிமேல் மெய் சுகம்..
நிலா நீ வானம் காற்று
மழை என் கவிதை மூச்சு
இசை துளி தேனா மலரா
திசை ஒலி பகல்
பாடலை பாடி முடித்தவன் அவள் கன்னத்தில் முத்தமிட்டான்...
“கிப்ட் போதுமா...” என குறும்புடன் அவன் கேட்கவும், இவன் பாடியதை சொல்றானா.. இல்ல முத்தத்தை சொல்றானானு தெரியலையே என வெட்கப்பட்டவள் அவள் கைகளை மாலையாய் அவன் கழுத்தில் போட்டு அவளும் தன் பங்குக்கு பாட ஆரம்பித்தாள்....
அன்புள்ள மன்னா அன்புள்ள கணவா
அன்புள்ள கள்வனே அன்புள்ள கண்ணாளனே
அன்புள்ள ஒளியே அன்புள்ள தமிழே
அன்புள்ள செய்யுளே அன்புள்ள இலக்கணமே
அன்புள்ள திருக்குறளே அன்புள்ள நற்றினையே
அன்புள்ள படவா அன்புள்ள திருடா
அன்புள்ள ரசிகா அன்புள்ள கிறுக்கா
அன்புள்ள திமிரே அன்புள்ள தவறே