(Reading time: 12 - 23 minutes)

அறையை தாயார் செய்த பின் வசு, உத்ராவை தேடி வந்தார். உத்ராவும் நகைகளை கழட்டி வைத்து, பின் குளித்து மெல்லிய ஜரிகை கரை போட்ட ஜார்ஜெட் சேலையை கட்டிய படி வந்தாள். வசுவும் அவளை அமர வைத்து தலையை லேசாக பின்னி சிறிது பூ வைத்து, உத்ராவை அந்த அறையில் விட்டு  விட்டார். “ஃபானை ஸ்லோ ஸ்பீடில் வைத்து கொள்ளுங்கள்” என கூறி சென்றார்.

சுனைனாவும் தலை வலி என்று போய் படுத்து விட்டார். அவருக்கு தன் மூத்த மகளைப் பற்றிய கவலையே இருந்தது. எங்கு போய் என்ன செய்கிறாளோ? எங்கே இருக்கிறாள் என்று தெரிந்தாலாவது நிம்மதியாக இருக்குமே என்ற எண்ணத்தில் உறக்கம் வராமல் புரண்டு படுத்தபடி இருந்தார். பால்கிகும் அவ்வாறே இருந்தது. நாம் தான் பெண்ணை சரியாக வளர்க்கவில்லையோ என்று எண்ணியவாறே படுத்து இருந்தார். பெண்களுக்கு சுதந்திரம் கொடுத்து தான் வளர்த்து இருந்தார். இல்லை நாம் தான் அதிகமான சுதந்திரம் கொடுத்து விட்டோமோ என்ற எண்ணம்மும் மேலிட்டது அவருக்கு.

அங்கு உத்ரா அறைக்குள் வந்ததும், அபிமன்யு அங்கிருந்த ஒற்றை சோபாவில் அமர்ந்து எதோ யோசனையில் இருந்ததை பார்த்தாள்.

“எந்த கோட்டையை பிடிக்க இவ்வளவு யோசனை” என்று பேச்சை ஆரம்பித்தாள் உத்ரா.

அவளை திரும்பிப் பார்த்த அபி “உன்னைப் பற்றி தான். முதலில் உன்னைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். உன் முழுப் பெயரே உத்ரா தானா இல்லை வேறு ஏதும் உடன் வருமா?

அதைக் கேட்டு உத்ராவிற்கு ரத்த அழுத்தம் உச்சத்தை எட்டியது. இவனைப் பற்றி தான் ஒவ்வொன்றும் கேட்டு கேட்டு தெரிந்து வைத்து இருக்கிறோம். இவன் என்னடா வென்றால் எனது பெயர் கூட தெரிந்து கொள்ளாமல் இருக்கிறானே, கடவுளே உனக்கே இது அடுக்குமா, என்று கடவுளிடம் சண்டைக்கு நின்றாள்.

“வெறும் உத்ரா தான்” வாய்க்குள் முனுமுனுத்தாள்

“என்ன படிச்சு இருக்க”

“இங்க என்ன வேலைக்கா ஆள் எடுக்கறிங்க?

“என் மனைவியைப் பற்றி எனக்கு தெரிய வேண்டாமா?

அப்பாடா மனைவி என்றாவது ஒப்புக் கொண்டானே என்று கொஞ்சம் சமாதானம் ஆனாள் உத்ரா.

“பாஸ்போர்ட் வைத்து இருக்கிறாயா?

“இரண்டு வருடத்திற்கு முன்பே எடுத்தாச்சு.” அதை எடுத்த பொழுது எவ்வளவு சந்தோஷமாக இருந்தது. அபி, அமெரிக்கா சென்ற இரண்டாவது வருடத்திலேயே எடுத்தது.

“எனக்கு அதிகம் லீவு இல்லை உத்ரா. இரண்டு நாட்களுக்குள் திருமணத்தை பதிவு செய்தால் தான் உனக்கு அமெரிக்கா விசா விண்ணப்பிக்க வசதியாக இருக்கும்.

அதைக் கேட்டதும் அப்பாடா என்று இருந்தது உத்தரவிற்கு. உடன் அழைத்து செல்கிறேன் என்றதே பெரும் நிம்மதியை தந்தது. அப்பா, அக்காவிற்கும், அபிக்குமான திருமணப் பேச்சை எடுக்கும் வரை, அமெரிக்க சென்று தங்க மனதளவில் தயாராகி தான் இருந்தாள் உத்ரா. இப்பொழுது உள்ள டெக்னாலஜி உலகத்தில் அமெரிக்காவும் அமிஞ்சிகரை தூரம் தான்.

எப்போழுது வேண்டுமானாலும் அம்மாவுடன் வீடியோ காலில் பார்த்துக் கொண்டே பேசிக் கொள்ளலாம்.

“சரி உத்ரா இப்பொழுது தூங்கலாம். நாளைக்கு நிறைய வேலை இருக்கிறது. குட் நைட்.” என்று கட்டிலின் ஒரு ஓரமாக படுத்துக் கொண்டான்.

உண்மையில் வேலை இருந்தது ஒரு பக்கம் இருந்தாலும், உத்ரா தனது பழைய காதலில் இருந்து வெளி வர சில காலம் பொருத்து இருக்கலாம் என்று எண்ணினான் அபிமன்யு.

உத்ராவோ, அபி தானாக தன்னை விரும்பி ஏற்க வேண்டும் என்று எண்ணியவாறு உறங்கிப் போனாள்.

மறு நாள் காலை அழகாக விடிந்தது. சுனைனா எழுந்து முகம் கழுவி வந்து, காம்பவுண் கேட்டிற்க்குள் உள்ள வாசலில் கோலம் போட எண்ணி கதவை திறந்த பொழுது வாசலில் ஒருவன் வீல் சேரில் அமர்ந்தபடி இவைரைப் பார்த்து வணக்கம் கூறினான்.

குழப்பத்தில் சுனைனாவுடன் நாமும்.

En arugil nee irunthum

தொடரும்...

Episode # 01

Episode # 03

{kunena_discuss:1170}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.