(Reading time: 13 - 25 minutes)

ஒரு சிறு புன்னகையுடன், “அதெல்லாம் ஒன்றும் வேண்டாம் மாமா, அவங்க செய்ததும் பெரிய விஷயம் தான். அதற்கு பெரிய மனது வேண்டும்.” என்று பூமியை பாராட்டவே செய்தான்.  

அடுத்து பால்கியை பார்த்து “யாருக்கு யார் என்று கடவுள் முடிவு செய்து வைத்து இருப்பார். அதை மாற்ற நாம் யார். இதை புரிந்து கொண்டால் வாழ்க்கை சுமுகமாகிவிடும் மாமா” என்று அவரிடம் ஆரம்பித்து உத்ராவிடம் முடித்தான்.

அதை இவன் புரிந்து கொண்டால் சரி தான் என்று உத்ரா நினைத்துக் கொண்டு இருந்தாள்.

“சரி மாமா அதித்யாவை அதிக நேரம் காக்க வைக்க வேண்டாம், நீங்க வந்து அவரிடம் பேசுங்கள். அவர் பேசியதை பார்க்கும் பொழுது, அவர் பூமிஜாவை நன்றாக வைத்துக் கொள்வார் என்று தான் நினைக்கிறன்.” என்று ஆதிக்கு நற்சான்றிதழ் வழங்கினான் அபி.

ஒருவழியாக பால்கியும் சமாதானமாகி வெளியே வந்தார் ஆதியை வரவேற்க. அப்படியே காவல் நிலையத்தில் கொடுத்த புகாரை, திருப்பி வாங்க குமாரை அனுப்பினார்.

டுத்து வேலைகள் மடமடவென்று நடந்தது. அபி, உத்ராவின் திருமண பதிவு, உத்ராவின் விசா ஏற்பாடுகள், ஆதித்யா, பூமிஜாவின் வரவேற்ப்பு விருந்து என்று நேரம் இறக்கை கட்டி பறந்தது.

அபி, உத்ரா அமெரிக்கா கிளம்பும் நாளும் வந்தது. இந்த ஒரு வாரத்திற்குள், அபியும் உத்ராவும் மனம் விட்டு பேசிக் கொள்ள நேரம் அதிகமாக கிடைக்கவில்லை. நடுவில் உறவினர் வீட்டில் விருந்து என்றும் நேரம் போனதால்.

அபி, உத்ரா அமெரிக்கா கிளம்பிய தினமே, ஆதியும், பூமியும் தேனிலவிற்க்காக சுவிஸ் கிளம்பினர், சுவிஸ் ஏர் வேசில்.

அபியும் உத்ராவும் எமிரேட்ஸில் கிளம்பினர். இவர்கள் திருமணதிற்க்காக, அபியுடன் வேலை பார்க்கும் நண்பர்கள்  அனைவரும் சேர்ந்து, இவர்களுக்கு திருமண பரிசாக இவர்கள் டிக்கெட் செலவை ஏற்றுக் கொண்டிருந்தனர். அதனால் விமானத்தில் பிசினஸ் கிளாசில் டிக்கெட் புக் செய்திருந்தனர்.

ஏர்போர்டில் அம்மா, அப்பாவிடம் ஆசி பெற்று,விடை பெற்றனர். இரண்டு மணி நேரம் முன்பாகவே பூமிஜா கிளம்பி சென்றிருந்ததால், அபியும், உத்ராவும் செக்கின் செய்தனர்.

உத்ரா முன்பே காலேஜிலிருந்து சிங்கப்பூர் டூர் சென்று இருந்ததால் முதலில் பெரியதாக ஒன்றும் தெரியவில்லை. ஆனால் பிசினஸ் கிளாசில் என்பதால், செக்கின் செய்வதிலிருந்தே, எல்லாவற்றிலும் தனி மரியாதை இருந்தது. பரிசோதனை எல்லாம் முடித்து வந்து காத்திருக்கும் லவுஞ்ம், நன்றாக இருந்தது. அதிக கூட்டம் இல்லாமல், சாப்பாட்டு வகைகள் வரிசையாக அடுக்கப்பட்டு, எதை வேண்டுமானாலும் எடுத்து சாப்பிடும் வகையில், குளிர் பானங்களும் அங்கிருந்த கண்ணாடி குளிர் சாதனப் பெட்டியில் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது. ம்ம் நன்றாகத் தான் இருக்கிறது என்று நினைத்துக் கொண்டாள் உத்ரா.

இதுவரை பெரிதாக ஒன்றும் பேசவில்லை அபிம்ன்யுவுடன். இரண்டு குளிர் பானங்களுடன் வந்து, அவளிடம் ஒன்றை கொடுத்துவிட்டு, அவளுக்கு அடுத்து இருந்த இருக்கையில் அமர்ந்தான் அபி.

“சரி இப்போ சொல்லு என்ன படிச்சு இருக்க? அபி ஆரம்பித்தான்.

“இப்போ தான் எம்.பி.ஏ. முடித்தேன். ஆனா அதுக்காக என்னை வேலைக்கு எல்லாம் போக சொல்லக் கூடாது” பதிலுடன் தனது முடிவையும் கூறினாள்.

“ஏன், வேலைக்கு போக உனக்கு பிடிக்காதா?

“அடுத்தவங்க சொல்றதை கேட்க பிடிக்காது. வேலைக்கு போனா எவனோ சொல்றதை கேட்கணுமே”

“வேலைக்கு போற இடத்தில் அடுத்தவர் பேச்சை கேட்காமல், உன் பேச்சை யார் கேட்பார்கள். அப்படி என்றால் மாடு மேய்க்கத் தான் போகனும். உனக்கு ஓகேவா அது தான் நீ சொன்ன பேச்சைக் கேட்கும்.” சொல்லும் போதே, உதட்டோரம் தோன்றிய சிரிப்பை கட்டுபடுத்தியபடியே கூறினான் அபி.

“ஹலோ, கொஞ்சம் நிறுத்தறீங்களா, நீங்க எதோ அமெரிக்காவில் ஐ.டி. கம்பெனியில் வேலை பார்ப்பதா சொன்னாங்க, அங்க மாட்டுப் பண்ணை தான் வச்சு இருக்கீங்களா?

“சரி அப்படியே நான் மாட்டுப் பண்ணை வைத்து இருந்தால் நீ என்ன செய்வாய்?

“நீங்களே மாட்டுப் பண்ணை வைத்து இருந்தால், அது நம்மோடது தானே. அதனால் அதை பார்த்துக் கொள்வதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை.” தயங்காமல் பதில் கூறினாள் உத்ரா.

அந்நேரம் அவர்களை விமானத்தில் ஏறும் அழைப்பு வர இருவரும் கிளம்பினர். அந்த விமானம் இரண்டு அடுக்கு கொண்டதாக இருந்தது. கீழ் தளத்தில் எக்கானமி பயணிகளும், மேல் தளத்தில் முதல் வகுப்பு பயணிகளும் இருந்தனர். இவர்கள் தங்கி இருந்த லவுன்ச் விமான நிலையத்தின் இரண்டாம் தளத்தில் இருந்ததால் அங்கிருந்தே விமானத்தில் ஏறும் பாதையை இணைத்து இருந்தனர். அடுத்த வகுப்பு பயணிகளை பார்க்கவே முடியாதபடி இருந்தது.

விமானத்தினுள் முதல் வகுப்பு என்பதால், அணைத்து வசதிகளும் கொண்டதாக இருந்தது. தனித் தனி டிவி, அதில் 80 சானல்கள், அமரும் இருக்கையை, படுக்கையாக மாற்றும் வசதி என சகல வசதியும் நிறைந்ததாக இருந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.