(Reading time: 10 - 20 minutes)

தொடர்கதை - என் நிலவு தேவதை – 16 - தேவிஸ்ரீ

En nilavu devathai

ர்த்டே பார்ட்டி படு உற்சாகமாக நடந்து கொண்டு இருந்தது.. பின் அனைவரும் டின்னர் முடித்து கொண்டு ஒவ்வொருவராக கிளம்பினர்.. அம்மு அனைவருக்கும் விடைகொடுத்து அனுப்பி வைத்தாள்.. கடைசியாக பரத் அவள் அருகில் வந்தான்.. அவன் நண்பன் திலக் உடனிருந்தான்... பரத் தன் முகத்தில் மிக மிஞ்சிய வருத்தத்தை பிரதிபளித்தபடி,

“அப்போ நான் கிளம்புறேன் அமிர்தா...”

“என்னாச்சி.. ஏன் முகம் ஒரு மாதிரியா இருக்கு?..” என அம்மு கேட்டாள்.

“ஒன்னும் இல்ல.. நான் கிளம்பறேன்..” என கூறிவிட்டு வேகமாய் அவ்விடம் விட்டு வெளியே சென்றான் பரத்..

என்னாச்சு இவனுக்கு என குழப்பத்துடன் திரும்பியவள் திலக்கை கேள்வியாய் நோக்கினாள்..

“ஒண்ணுமில்லை.. அவன் அப்செட்ல இருக்கான்.. நான் நாளைக்கு என்னனு சொல்றேன்.. bye..” என்றவன் அங்கிருந்து கிளம்பினான்.. அம்முவுக்கு ஒன்றும் புரியவில்லை.. பின் விக்ரம் அவளை அழைக்கவும் அவனிடம் சென்றவள் பரத்தை மறந்தே விட்டாள்..

அன்றிரவு மொட்டைமாடியில் விக்ரமும் அம்முவும் அருகருகில் நின்று கொண்டிருந்தனர்.. சிலுசிலுவென காற்று வீசிக்கொண்டு இருந்தது.. அந்த தென்றலை இருவரும் மௌனமாய் ரசித்தனர்... அம்முவின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை..

“என்ன பேபி.. ஹாப்பியா...?..”

“ரொம்ப ரொம்ப ஹாப்பி...” என்றவள் அவன் கன்னத்தில் முத்தமிட அவன் புன்னகைத்து கொண்டான்...

“இவ்ளோ சர்ப்ரைஸ் தருவிங்கன்னு நான் எதிர்பார்க்கவே இல்லை...” என்றவள் அவள் கையில் இருந்த மோதிரத்தை ஆசையுடனும் காதலுடனும் பார்த்தாள்.. பின் அவன் தோளில் உரிமையாய் சாய்ந்து கொண்டாள்.. அதை கண்டு மகிழ்ச்சியுடன் அவளை மெல்ல அணைத்து கொண்டான்..

“உன்கிட்ட இன்னுமொரு முக்கியமான விஷயம் சொல்லணும்.. 6 மன்த் வேலை விஷயமா மும்பை போகணும்..”

“என்ன்னனன.... 6 மாசமா.... அதெல்லாம் முடியாது...”

“ஹேய்.. சொன்னா புரிந்துகோ.. வேலை ரொம்ப important.. அதான்...”

“உங்களுக்கென்ன ஈசியா சொல்லிட்டிங்க.. எனக்கு தான் கஷ்டமா இருக்கு.. சரி.. எப்போ கிளம்பனும்? நடுவுல டைம் கிடைச்சா வருவீங்களா?..”

“சரியா தெரியல.. அங்க பிரான்ச்ல கொஞ்சம் problem.. சித்தப்பா தனியா இருக்காரு.. அவரே பாத்துக்கறேன்னு சொல்றாரு.. எனக்கு தான் மனசு கேட்கமாட்டிங்கிது.. நிலைமை எப்போ சீராகுதோ அப்போ வந்துடறேன்.. சரியா?..”

“நான் உங்களை ரொம்ப miss பண்ணுவேன்..” என அவள் கூறியதை கேட்டு அவன் புன்னகைக்க..

“சிரிக்காதிங்க.. என் நிலைமையை பார்த்தா சிரிப்பு வருதா உங்களுக்கு...”

“அதெல்லாம் ஒன்னும் இல்ல.. உன் கோபமான இந்த முகத்தை பார்க்கனும்னு ஆசை அதான்..” என்பதை கேட்டு,

“க்கும்...” என சலித்து கொண்டாள் அம்மு...

டுத்தநாள் காலை... அம்முவும் மித்ராவும் காலேஜ்க்கு போகவும், அங்கு பரத் அவர்களை பார்த்து தனது இருப்பிடத்தில் அமர்ந்து கொண்டான்... அவர்கள் கிளாஸ்ஸில் நுழையவும், பரத் மித்ராவை பார்வையால் ஏக்கமாய் பார்க்க, மித்ரா அவனை கவனிக்கவே இல்லை.. ஆனால் அம்மு அதை கவனித்துவிட்டு புரியாமல் யோசிக்க, அதை கண்ட பரத், ம்ம்ம்.. இதுதானே நான் எதிர்பார்த்தேன்.. என மனதினுள் நினைத்தான்..

வகுப்பு ஆரம்பிக்கவும் இதை எல்லாம் மறந்து பாடத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்தாள் அம்மு.. வகுப்பு முடிந்ததும் அம்முவும் மித்ராவும் கான்டீன் பக்கம் சென்றனர்.. பரத்தும் திலக்கும் அவர்களை பின் தொடர்ந்து அவர்களுக்கு எதிர்ப்புறமாய் உள்ள அடுத்த டேபிளில் அமர்ந்தனர்..

அம்மு வழக்கம் போல் சமோசாவையும் ஜீலேபியையும் வாங்கி சாப்பிட, மித்ராவும் அவளை திட்டிக்கொண்டே இருந்தாள்.. அப்போது அங்கு வந்த ரூபா மித்ராவை ஒரு வேலையாய் அழைக்க, அம்முவை சாப்பிட்டு விட்டு சீக்கிரம் வருமாறு சொல்லி விட்டு ரூபாவோடு கிளம்பினாள் மித்ரா... இதற்காகவே காத்திருந்த திலக் தன் நாடகத்தை ஆரம்பித்தான்...

“டேய் feel பண்ணாதடா பரத்..” என திலக் சமாதானப்படுத்த, பரத்தோ சோகமாய் அமர்ந்திருந்தான்... அம்முவும் அவர்களை கண்டு அவர்கள் பக்கம் சென்றாள்..

“என்னாச்சி திலக்..”

“ஒன்னும் இல்லை.. நீ போ அமிர்தா..”

“என்ன ஒண்ணும்மில்லை... நேத்து எங்க வீட்டுலயும் இப்படிதான் இருந்தான்.. என்ன ஆச்சின்னு இப்போ சொல்றீங்களா இல்லையா...”

“ஒன்னும் இல்லை.. லவ் failure...”

அதை கேட்டு அம்மு கண்களை விரித்தாள்.. பரத் பணக்கார வீட்டு பையன் தான்.. ஆனால் அதற்காக பந்தா காண்பிக்கமாட்டான்.. பெண்களிடமும் அவன் பேசுவது குறைவு.. ஏன், அவனுக்கு பெண் தோழியே கிடையாது.. படிப்பில் சுமார்தான்.. ஆனால் எப்போதும் அமைதியாக இருப்பான்...அப்படிபட்டவன் ஒரு பெண்ணை நேசித்து அதுவும் failure என்னும்போது அம்முவுக்கு பாவமாய் இருந்தது...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.