(Reading time: 10 - 19 minutes)

தொடர்கதை - சாத்திரம் பேசுகிறாய் .... கண்ணம்மா – 26 - ஜெய்

Saathiram pesugiraai kanamma

காவலாளிகள் அறியாமல் மாடி ஏறிய பாரதி மெதுவாக முதல் தளத்திற்கு சென்று அங்கிருந்த அறையைத் திறந்தவள் அதிர்ந்து நின்றாள்...  அந்த அறை ஏதோ படப்பிடிப்பு அறை போல காட்சியளித்தது.... அதற்கு தேவையான அத்தனை கருவிகளும் அங்கிருந்தன.... ஏனோ பாரதிக்கு அதை நல்ல விதமாக எடுத்துக்கொள்ள முடியவில்லை... அந்த அறையில் தப்பு இருப்பதாகவே தோன்றியது...

அறையின் உள் நுழைவதற்கு முன் திடீரென்று யாரேனும் வந்துவிட்டால் தப்புவதற்கு வழி இருக்கிறதா என்று ஆராய, அந்த அறையிலிருந்த ஜன்னலை மெதுவாகத் திறக்க அது அவள் ஏறி வந்த பகுதியைக் காட்டியது....

மெதுவாக ஜன்னல், அறைக்கதவு அனைத்தையும் மூடிவிட்டு, கர்ட்டனையும் மூடிவிட்டு விளக்கை on செய்தாள்.... அந்த ரூமை சுற்றி பார்க்க அவளுக்கு உடம்பு கூச ஆரம்பித்தது... அறை சுவர் மன்மத காவியங்கள் படங்களாகத் தொங்கிக்கொண்டிருந்தன.... போதாக்குறைக்கு சிலைகளாகவும் அறையெங்கும் நிற்க வைக்கப்பட்டிருந்தது.... இந்தாளு பெரிய மதன காமராஜன் போலயே.... என்று நினைத்தபடியே கட்டில் அருகிலிருந்த மேசையை ஆராய ஆரம்பித்தாள்.... அதில் பெரிதாக ஒன்றும் கிடைக்கவில்லை...

அங்கிருந்த அலமாரிகளிலும் ஆண்களுக்கான உடைகளும் மேக்அப் சாதனங்களுமே இருந்தன.... பாரதி அந்த அறையை இரண்டு மூன்று முறை சல்லடை போட்டு சலித்தும் அவளுக்கு ஒன்றும் கிடைக்கவில்லை... ஆனால் அவளால் அப்படி சாதாரணமாக அந்த அறையைக் கடக்க முடியவில்லை... அங்கு ஏதோ தப்பிருப்பது போலவே அவளுக்கு தோன்றிக்கொண்டிருந்தது.... மறுபடியும் அலமாரிகளில் தேட ஆரம்பிக்க சாரங்கனிடமிருந்து மெசேஜ் வந்தது... அவன் நரேஷின் வீட்டிலிருந்து வெளியில் வந்துவிட்டதாக அந்த மெசேஜில் இருந்தது..... பாரதி உடனடியாக சாரங்கனைத் தொடர்பு கொண்டாள்....

“சொல்லு பாரதி.. வேலைய முடிச்சுட்டியா.... எங்க இருக்க....”

“இல்லை சாரங்கா.... இங்க காவல் ரொம்ப பலமா இருக்கு.... உள்ள நுழையவே ஒரு மணிநேரம் ஆயிடுச்சு....”

“அடிப்பாவி உள்ள இருந்துட்டேவா பேசற... மொதல்ல போனை off பண்ணு.....”

“சப்பாணி.... சவுண்ட்டைக் குறை.... இங்க உள்ள யாரும் இல்லை... எல்லாம் சுத்தி வெளியதான் காவலுக்கு இருக்காங்க....”

“அடியேய் அந்த நரேஷ் அங்க அங்க CC TV வச்சிருப்பான்... நீ மொதல்ல போனை கட் பண்ணு...”

“இல்லடா உள்ள நுழையும்போதே jammer வச்சு செக் பண்ணிட்டுதான் வந்தேன்....”

“சரி எதாச்சும் மாட்டிச்சா....”

“இப்போதாண்டா மோதல் ரூம் உள்ளயே வந்தேன்.... பாலு மகேந்திரா பட ஷூட்டிங் மாதிரி ஏகப்பட்ட காமெரா, லைட் ஸ்டான்டுன்னு ரூமே ஒரு மார்கமா இருக்கு....”

“விடாத பாரதி... ரூம் மொத்தமும் ரெகார்ட் பண்ணிக்கோ... இன்னும் எத்தனை ரூம்ஸ் இருக்கு செக் பண்ண....”

“வீடு அவ்ளோ பெரிசா இல்லை சப்பாணி... மேல ஒரு 3 ரூம், கீழ ஒரு மூணு ரூம் இருக்கலாம்....”

“சரி நான் கிளம்பி அங்க வர்றவா...”

“வேணாம்டா நானே பார்த்துப்பேன்... சப்போஸ் மாட்டிக்கிட்டாலும் ஒருத்தர் வெளிய இருக்கறது முக்கியம்....”

“சரி நீ எல்லா டாகுமென்ட்ஸும் எடுத்துட்டியா...”

“ஹ்ம்ம் எல்லாம் எடுத்தாச்சு பாரதி.... நீ மத்த அறைகளையும் மடமடன்னு செக் பண்ணிட்டு கிளம்பற வழியைப் பாரு....”

“இல்லடா சப்பாணி... எனக்கு என்னவோ இந்த ரூம்ல ஏதோ தப்பா இருக்கறா மாதிரியே இருக்கு... ஆனா ஒரு விஷயமும் மாட்ட மாட்டேங்குது....”

“நீ அந்த நரேஷை சாதாரண ஆளா நினைக்காத... பயங்கர மூளைக்காரன்.... எல்லாரும் எங்க ஆதாரங்களை ஒளிச்சு வைப்பாங்களோ அங்க அவன் வைக்க மாட்டான்.... so அந்த ரூம்ல வித்தியாசமா என்ன பொருள் இருக்குன்னு பாரு....”

“இங்க இருக்கறதுலையே வித்யாசமான பொருள்ன்னா அது கட்டில்தான்.... இந்த நரேஷ் செம்ம ரசனைக்காரண்டா.... கட்டில் செம்மையா இருக்கு... ஒரு குடும்பமே படுத்து உருளலாம் போல....”

“அப்போ அதுலதான் விஷயம் இருக்கு..”

“கட்டில்ல என்னடா விஷயம் இருக்கும்...அப்படியே இருந்தாலும்... நான் மட்டுமே அதை செக் செய்ய முடியாது சப்பாணி... மெத்தைய தூக்கவே நாலு ஆளு தேவைப்படும்....”

“பக்கி அந்த கட்டில நல்லா செக் பண்ணு... கண்டிப்பா அதைத் திறக்க எதானும் வழி இருக்கும்... இங்க வீட்டுல முருகன் சிலை மாதிரி அங்க ஏதானும் இருக்கான்னு பாரு.....”

“சரி சப்பாணி நான் பார்க்கிறேன்... நீ வீட்டுக்கு போறியா....”

“ஆமாம் பாரதி... நான் போயிட்டு இதுவரை எடுத்த டீடைல்ஸ் எல்லாத்தையும் copy பண்றேன்.....”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.