(Reading time: 10 - 19 minutes)

“ஓகேடா... அப்படியே மயிலுக்கு போன் பண்ணி பிரச்சனை எதுவும் இல்லையேன்னு கேட்டுக்கோ.....”

“சூப்பர்டி பக்கி... இதுவரைக்கும் நீ பெசினதுலையே என் காதுக்கு இனிமையா இருந்தது கடைசியா நீ சொன்ன லைன்தான்....”

“ஜொள்ளைக் குறை.... ஜொள்ளைக் குறை.... மயிலைப் பார்க்கிறேன்னு மந்திக்கிட்ட மாட்டிக்காதடா.... அந்த நாராயணன் ஆளுங்க அங்கதான் சுத்திக்கிட்டு இருக்காங்க....”

“உன் கரி நாக்கை வச்சியா... நீ மொதோ போனை வச்சுட்டு போன வேலையைப் பாரு.....”

சாரங்கனிடம் பேசியபிறகு அந்த அறையை மறுபடியும் ஒரு முறை பாரதி ஆராய அந்தக் கட்டில் தவிர வேறெதுவும் வித்தியாசமாக இல்லை... அதிலிருந்த மெத்தையை தூக்க முடியுமா என்று பார்க்க அதை அசைக்கக்கூட முடியவில்லை... கட்டிலும் எந்தப் பக்கமும் திறக்க முடியாதபடி நாற்புறமும் சட்டங்கள் இருந்தன...

பின்னர் அங்கு மாட்டியிருந்த படங்கள் ஒவ்வொன்றாக ஆராய அதிலும் வித்தியாசமாக ஒன்றும் தெரியவில்லை.... பின்னர் சிலைகளை ஆராய ஆரம்பித்தாள்....

அங்கிருந்த அனைத்து சிலைகளும் ஏதோ ஒரு வகையில் ஒன்றுக்கொன்று தொடர்பு உடையதாக இருந்தது... அனைத்து சிலைகளும் ரதிமன்மத சிலைகளாக இருந்தாலும், ஏதோ குறிப்பிட்ட குறியீடு அதில் இருப்பதாகவே தோன்றியது... மேலும் உன்னிப்பாக பார்க்க அனைத்து சிலைகளிலும் அச்சிலையின்  ஏதோ ஒரு பாகத்தில் எண் ஒன்று குறிப்பிடப்பட்டு இருந்தது....

அங்கிருந்த ஐந்து  சிலைகளிலும் இருந்த எண்களை தனியாக குறித்துக்கொண்டாள்.... அந்த எண்களோ இல்லை அதன் கூட்டுத் தொகையோ,எங்கேனும் தென்படுகிறதா என்று பார்க்க எங்கும் தென்படவில்லை.... தான் எதோ யோசிக்கத் தவருவதாகத் தோன்ற தான் இதுவரை கண்டுபிடித்ததை சாரங்கனுக்கு அனுப்ப, அவன் அந்த எண்களுக்கு நேராக அதற்குண்டான ஆங்கில எழுத்துகளைப் போடுமாறுக் கூற clock என்ற வார்த்தை வந்தது... மனசுக்குள்ளேயே சாரங்கனைப் பாராட்டி அங்கிருந்த கடிகாரத்தை பார்க்க அதில் ஒரே ஒரு எண் மட்டும் வித்தியாசமாக இருந்ததாகத் தோன்ற பாரதி சென்று அதைத் தொட அந்த கடிகாரத்தின் நடுவில் நான்கு இலக்க எண் ஒன்று தோன்றி இருபது நொடியில் மறைந்தது.... நல்லவேளையாக பாரதி அனைத்தையும் ரெகார்ட் செய்து வந்ததால்.... உடனடியாக அந்த எண்ணை பார்த்துவிட்டு அங்கிருந்த சிலைகளில் இருந்த எண்களைத் தொட கட்டில் இரண்டாகப் பிரிந்து அதனுள் ஒரு பொக்கிஷத்தையே பாரதிக்கு காட்டியது...

அதன் உள்ளிருந்த பொருட்களைப் பார்க்க பார்க்க பாரதிக்கு நரேஷை கொல்லும் வெறி வந்தது... உடனடியாக மதியைத் தொடர்புகொண்ட பாரதி தான் பார்த்த அனைத்தையும் அவரிடம் கூற, அனைத்தையும் ரெகார்ட் செய்துகொண்டு உடனடியாக அவ்விடத்தை விட்டு வெளியேறுமாறு மதி கூறினார்....அடுத்த இரண்டு மணிநேரத்தில் மற்ற அறைகளையும் ஆராய்ந்துவிட்டு வந்த வழியே வெளியேறினாள் பாரதி.....

ங்கு சாரங்கன் வீட்டிற்கு சென்று கொண்டிருக்கும்போது அவனுடைய கைப்பேசி அழைத்தது....

“சாரங்கன் தம்பி நீங்க எங்க இருக்கீங்க...”

“வீட்டுக்குப் போயிட்டு இருக்கேன் மணி.... என்ன விஷயம் சொல்லு....”

“தம்பி இன்னிக்கு நைட் கோடௌன்லேர்ந்து நாலாம் நம்பர் ரேஷன் கடைக்கு சர்க்கரையும், அரிசியும் அனுப்பறாங்க... அதை அந்த கவுன்சிலர் மடக்கி KLM கல்யாண சத்திரத்துக்கு அனுப்பப்போறதா தகவல் கிடைச்சிருக்கு....”

“ஓ அந்த சத்திரம் நாராயணன்துதானே....”

“ஆமாம் தம்பி... போன முறையும் அவனுக்குத் தெரிஞ்சவங்க வீட்டுக் கல்யாணம் அப்படின்னுதான் வந்த சரக்கையெல்லாம் ஆட்டைய போட்டு எடுத்திக்கிட்டான்... இப்போ மறுபடியும் அதே பண்ணப்போறான்.... ஏற்கனவே அரசாங்கம் இலவசமா கொடுக்கற பருப்பை எல்லாம் நிறுத்திடுச்சு... இப்போக் கிடைக்கற ஒண்ணு ரெண்டு சாமானையும் எடுத்துட்டா ஏழைங்க பாவம் என்னப்பண்ணுவாங்க.....”

“கவலைப்படாத மணி... இதுதான் கடைசி தடவைன்னு நினைச்சுக்கோ... நான் மதி சார்க்கிட்ட பேசிட்டு என்ன பண்ணலாம்ன்னு சொல்றேன்... உனக்கு எந்த இடத்துல அவங்க லாரியை மடக்கப்போறாங்கன்னு விவரம் எதாச்சும் கிடைச்சுதா....”

“கூட்டுரோடு தாண்டி வர்ற சந்துல மடக்கறதா இருக்கான்....”

“சூப்பர் மணி.... நான் இன்னும் பத்து நிமிஷத்துல உன்னைக் கூப்பிடறேன்...”

சாரங்கன் மதியை அழைத்து மணி சொன்ன விவரத்தைக் கூற மதி சாரங்கனை கிளம்பி கூட்டு ரோடிற்கு வந்து அங்கு நடப்பதை கண்காணிக்கும்படி கூற அதன்படி சாரங்கன் மணியை அங்கு வரச்சொல்லிவிட்டு கிளம்பினான்....

சாரங்கன் அந்த இடத்தை அணுகும்போது ஏற்கனவே மணி அங்கு வந்து காத்திருந்தான்....

“மணி வந்து ரொம்ப நேரம் ஆச்சா....”

“இல்லை தம்பி இப்போதான் அஞ்சு நிமிஷம் முன்னாடி வந்தேன்....”

“வா அந்த டீக்கடைல போய் நின்னுட்டு என்ன நடக்குதுன்னு பார்க்கலாம்....”

“இங்க வேணாம் தம்பி... ஏற்கனவே அந்தக் கடைல அந்த கவுன்சிலர் ஆளுங்க நின்னுட்டு இருக்காங்க....”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.