(Reading time: 11 - 21 minutes)

“அஸ்வின் உங்களுக்கு தெரியுமா நந்தா??”

“ஆங்ங்ங்.ம்ம் ஆமா ஹணி ஆபீஸ்ல கொஞ்சம் க்ளோஸ் அவன்..உன்கிட்ட கேக்கனும்னு நினைச்சுட்டே இருந்தேன் பட் மறந்துட்டேன்..அண்ட் பை தி வே..யூ ஆர் ஆசம் ஹணி..லவ் யூ..”,என அவள் காதுக்கு வலிக்காமல் கூற..

பெண்ணவளுக்கோ காதில் சூடேறியது..தேங்க் யூப்பா..

ஹணி நம்ம லைவ்ல எவ்ளோ ப்ராப்ளம் வந்தாலும் நானே உனக்கு ப்ராப்ளமா இருந்தாலும் எல்லாமே கண்டிப்பா ஒரு நாள் மாறும்..பட் நீ அதை நினைச்சு கவலபடாதடா..எப்பவும் நீ இப்படி தான் இருக்கனும்..லாஸ்ட் ஒன் மந்த் நம்ம லைவ்ல இருந்து எரேஸ் பண்ணிடுவோம்..

நீ இப்படியே ஹப்பியா அழகா சிரிச்சுட்டே இரு ஹணி..ப்ளீஸ்..நா உன்னை கஷ்டப்படுத்துறேன் எனக்கு தெரியும் ஆனா என்னால உடனே மாற முடில..ப்ளீஸ் என்ன புரிஞ்சுப்பதான???கார் ஓட்டிய படியே இடக்கையால் அவள் கையை அழுந்தபிடித்தவனின் கரத்தை ஆதரவாய் பற்றியவள்,

“நந்தா விடுங்க இப்போ ஏன் இதபத்தி பேசிகிட்டு..”

“இல்ல ஹணி இப்போ உன்னை இப்படி பாக்கும் போதுதான் இத்தனை நாள் உன்னை எவ்ளோ கஷ்டபடுத்திருக்கேன்னு தோணுது அதான்..”

“சரி விடுங்கப்பா..நானே அதையெல்லாம் மறக்கதான் ட்ரை பண்றேன்..உங்களோட நா வர்ற பர்ஸ்ட் ஔட்டிங் மூட் ஸ்பாயில் பண்ண வேணாமே..”

அதற்கு மேல் அவன் அதைப்பற்றி எதுவும் பேசவில்லை..நீண்ட நாட்களுக்குப் பிறகு இருவரும் மனம்விட்டு இயல்பாய் பேச ஆரம்பித்திருந்தனர்..அடுத்த ஒரு மணி நேரத்தில் ரிசார்ட்டை அடைய காரை பார்க் செய்துவிட்டு இருவருமாய் உள்ளே சென்றனர்..ஓரளவு விருந்தினர்கள் வந்திருக்க அவர்களை பார்த்தவர்களின் கண்களில் வியப்பு கேலி என ஏதோ தெரிந்தது..ரகுவின் நடையும் அவளருகில் உரிமையாய் இருக்க அனைவருமே தங்களுக்குள் சிரித்துக் கொண்டனர்..அதன்பின் ரகு இயல்பாய் தன் டீம்மோடு இணைந்து கொள்ள ஹரிணி தன் தோழிகளோடு சேர்ந்து கொண்டாள்..

“ஹரிணி செமயா இருக்க அதைவிட உன் என்ட்ரி தான் இன்னும் 10 நாளுக்கு ஆபீஸ்ல ஹைலைட்டா இருக்கும்..”

“ஏண்டி கிண்டல் பண்ற??”

“எது கிண்டலா??உண்மையா தான் சொல்றேன்..அங்க பாரு நம்ம மேனேஜர் ஹார்ட் ப்ரேக்கிங் ஸ்மைலி மாதிரி உக்காந்துட்டாரு பாரு..”,என சிரிக்க,

ஹரிணிக்குதான் சமாளிக்க முடியாமல் போனது..அங்கு அவனுக்குமே அதே நிலைமைதான் என்பது அவன் உடல் மொழியிலேயே தெரிந்தது..

“டேய் ஒரே காலேஜ் ப்ரெண்ட்ஸ்னு தான் சொல்லிருக்கேனே அப்பறம் ஏன்டா புதுசா ஆரம்பிக்குறீங்க???”

“மச்சான்..அஸ்வின்கிட்ட கேட்டு வீடியோ வாங்கி தரேன் பாரு..நீங்க உள்ள வந்த ஸ்டைலே சொல்லுது இது ப்ரெண்ட்ஷிப்பையும் தாண்டின ஒண்ணுநு..எதுக்கு மறைக்குற???”

ஷப்பாபாபா என நெற்றியை தடவியவன் லேசாய் வெட்கத்தில் முகத்தை திருப்ப ஆண்கள் எழுப்பிய சத்தத்தில் ஹரிணி உட்பட அனைவரும் திரும்பி பார்க்க ரகு வேகமாய் மணமகன் அறைக்குசெல்வது தெரிந்தது..

ஹரிணிக்கு இதெல்லாம் புதிதாய் ஆனால் மனதிற்கு மிகவும் பிடித்திருந்தது..முகம் சிவப்பதை மறைத்து தோழிகளோடு அமர்ந்து ஏதேதோ பேசிக் கொண்டிருந்தாள்..காதல் திருமண வரவேற்பென்பதால் நண்பர்களே அதிகமாய் இருக்க மணமக்கள் மேடையேறிய நொடியிலிருந்து கலாட்டாவுக்கு குறைவில்லாமல் இருந்தது..மணமக்களின் காதல் கதை முடிந்து அடுத்து அனைவரும் ரகுவிடம் திரும்ப,

“ரகு நீதான் செம்மையா டான்ஸ் ஆடுவியே ஆடுடா..”

“ஹே அதெல்லாம் காலேஜோட முடிஞ்சு போச்சு..இப்போ நோ வே..”

ரகு!!!ரகு!!!!ரகு என அனைவருமாய் ஆர்பரிக்க,பெண்களில் ஒருத்தி ஹே என்ன உங்க சைட் தான் ஆளு இருக்கா நாங்களும் ஹெவி காம்படீஷன் குடுப்போம் ஹரிணி நீ வா என அசால்ட்டாய் கூற,ஒரு நொடி ரகுவே அதிர்ந்து விட்டான்..

அவளோ முடியவே முடியாது என அழாத குறையாய் இருந்த இடத்தில் இறுக்கமாய் அமர யாரும் விடுவதாய் இல்லை..பிறரறியால் ரகுவை பார்க்க அவன் வா என்பதாய் தலையசைத்தான்..புடவையை சரி செய்தவாறு மேடைக்கு அவள் வர இருவரும் ஒருவருக்கொருவர் பார்த்துக் கொள்ளவேயில்லை.

.கூட்டத்தின்ஆர்பாட்டம் அதிகரிக்க அதிகரிக்க ஹரிணிக்கு படபடப்பு எகிறிக் கொண்டேயிருந்தது..அவன் வலக்கையை அவளுக்காய் நீட்ட தான் இடது கையை அவன் கரத்தில் வைத்தவள் சுதாரிக்கும் முன் பாட்டு ஆரம்பிக்க அவளை தன்புறம் சுற்றி இழுத்தவன் இடைப்பற்றி தாங்க விழி முழுவதுமாய் தன்னவனின் விழியில் கலந்திருக்க அதன்பின் நடந்தது என்னவென அவள் அறியவில்லை..உயிருள்ள பதுமையாய் அவளை தன் அசைவுகளுக்கு ஏற்றாற் போன்று  சுற்றிப் பிடித்து நடனத்தில்  லயித்திருந்தான்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.