(Reading time: 11 - 21 minutes)

“ப்ச்ச்..”

“இல்ல டீ மனசு சமாதானமே ஆக மாட்டேங்குது..சத்யமா என்கிட்ட இருக்குற ஒரே கெட்ட பழக்கம் ஒண்ணு பிடிக்கலனா அது மறுபடியும் மனசுல பதியுறது கஷ்டம்..”

“நந்தா விடுங்கனு சொல்லிட்டேனே..அட்லீஸ்ட் கல்யாணத்துக்கப்பறம் நா எங்க வீட்டுக்கு போய்ட்டு வரலாம் தான???”

“ஹணி ஏன் இப்படிலா பேசுற??அவ்ளோ மோசமானவனா நா??”

“அப்படியில்ல நந்தா உங்களுக்கு பிடிக்கலனு நீங்க என்னையும் போக கூடாதுநு சொல்லலாம் ஆனா சொல்லலையே சோ வருங்காலம் எல்லாம் மாறும்னு நம்ப வேண்டியதுதான்..திரும்ப திரும்ப அயே பேசி மனக்கஷ்டம் தான் வரும் ப்ளீஸ்ப்பா விட்டுருங்க..”

தன்னவனுக்காய் அழகாய் விட்டுக் கொடுத்தாள் தன் விருப்பத்தை..மேலும் மேலும் வாதாடுவதை விட தன் விருப்பத்தை மதித்து அவனே விரைவில் மாறுவான் என்று நம்பினாள்..

“நீ ஏண்டீ இப்படி இருக்க??”

“பொழைக்க தெரியாதவளா இருக்கேன்னு சொல்றீங்க??அப்போ ஸ்ட்ரிக்டான பொண்டாட்டியா மாறிட வேண்டியதுதான்..”

“ஹே நோ நோ ஹணி டியர் இதுதான் என் ஹணிக்கு அழகு..இப்படியே இரு..”

ம்ம் பாக்கலாம் என்றவள் அவனைப் பார்த்து சிரிக்க தோள்பற்றி தன்னோடு சேர்த்துக் கொண்டான்..

தொடரும்

Episode # 09

Episode # 11

{kunena_discuss:1167}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.