(Reading time: 9 - 18 minutes)

தே மனக்குமுறலோடு இருந்த கல்யாணியும் யோசனைகளுக்கு மத்தியிலேயே, மகனின் அறைக்குச் சென்று கதவைத் தட்டிட, கதவைத் திறந்தவன் முகம் எவ்வித உணர்ச்சிகளுக்கும் இடம் கொடுக்காமல் இருப்பதைக் கண்டவர்,

“கண்ணா… காபி….” என அவனிடம் நீட்ட,

“நான் ஃப்ரெஷ் ஆகிட்டு வரேன்…” என்றபடி அவன் செல்ல, அறைக்குள் நுழைந்திட்டவரின் கண்களில் தென்பட்டது அப்புத்தகம்…

புத்தக அட்டையில் இருப்பவளைக் கண்டதுமே மனமானது பதைபதைத்திட, அதை குனிந்து எடுத்தவர், அவளினைப் பார்த்திட, அவரின் விழிநீரின் இடைவெளியில் அழகாய் காட்சியளித்தாள் அவள்…

புத்தகத்தினை தூக்கி தன் எதிரே வைத்து பார்த்துக்கொண்டே இருக்க, அந்நேரம் கௌஷிக்கும் ஃப்ரெஷ் ஆகிவிட்டு வர, புத்தகத்தில் இருந்தவளையும், மகனையும் இணைத்து பொருத்தம் பார்த்திட்டது அத்தாயுள்ளம்…

என்ன பொருத்தம் பார்த்து என்ன செய்திட?... விதியானது சதி செய்து கொண்டிருக்கிறதே… இதற்கு பொறுப்பாளியாக யாரை ஆக்குவது?...

வேதனையோடு அவர் புத்தகத்தினை கீழே இறக்கிட,

“கொடுங்கம்மா….” அவன் காபியை வேண்டி கை நீட்டினான்…

அவர் அமைதியாக இருக்கவே, அவரை கவனித்திட்டான் அவன்… அவரின் கைகளிலிருந்திட்ட புத்தகம் அவனுக்கு அவரின் அமைதியினை புரியவைத்திட, அவன் தனது கைகளை நீட்டினான்…

கல்யாணியும் புத்தகத்தினை நீட்ட, அவன் அதனை மறுத்திட்டான்…

புருவத்தை உயர்த்திய தாயிடம், “காபிம்மா…” என அவன் கேட்டிட, அவரின் மனம் தவித்தது…

“கண்ணா…”

அவர் மென்மையாக அழைத்திட,

“சொல்லுங்கம்மா…” என்றான் அவன்…

“கோபமாவது என் மேல பட்டுடு கண்ணா… இல்ல நாலு வார்த்தை திட்டியாவது உன் மனபாரத்தை இறக்கி வச்சிடு கண்ணா…”

அவன் நா தழுதழுக்க கூறிட, தாயினை கூர்மையாக பார்த்திட்டான் அவன்…

“உங்க மேல கோபம் எனக்கு எப்பவுமே வந்ததில்லைம்மா… என்மேல தான் கோபம் எனக்கு….”

அவனும் உணர்ச்சிவசப்பட்டவனாய் கூற, அவருக்கு தொண்டை அடைத்தது…

“திட்டணும்னாலும் என்னை நானே தான் திட்டிக்கணும்மா…”

“கண்ணா?....”

“சொல்லுங்கம்மா…”

“இந்த புத்தகம்?...”

அவர் கேள்வியாய் நிறுத்திட, தாயின் அருகே சென்றவன், அவரின் கரங்களைப் பிடித்துக்கொண்டு,

“உங்ககிட்ட ஒரு விஷயம் சில நாட்களாகவே சொல்லணும்னு நினைச்சேன்ம்மா… ஆனா ஏனோ என்னால சொல்லவே முடியலை… ஆனா அது உங்களுக்கு நான் சொல்லாமலே தெரிஞ்சிருச்சு… என்னை மன்னிச்சிடுங்கம்மா…” என மன்னிப்புக்கேட்க,

“கண்ணா !!!!...” என உணர்ச்சிவசப்பட்டார் கல்யாணி…

“இந்த புத்தகத்தைத் தீண்ட எனக்கு உரிமை இல்லம்மா…”

அவன் வார்த்தைகளில் இருந்திட்ட வலி அவனின் முகத்தில் அவன் காட்டிடவில்லையெனினும் அவருக்கு அது தெரிந்து தான் இருந்தது…

“இல்ல கண்ணா… எல்லாமே என்னால தான?....”

அவரின் விழிகளில் விழிநீர் இப்பவோ அப்பவோ என விழத்தயாராக, அவரின் விரல்களை கெட்டியாக பிடித்துக்கொண்டான் அவன்…

“எல்லாமே என்னால தான்ம்மா…” என அந்த அழுத்தம் அவருக்கு சொல்லாமல் சொல்லிட, அவனும் வாய்விட்டே அதனைக்கூறிட,

“அவ பாவம் கண்ணா… நான்…. நான்…. என்னால….”

அவர் மேற்கொண்டு பேச முடியாது திணறிட, தாயின் கன்னம் வழிந்திட்ட விழிநீர் கண்டு பதறியவன்,

“அம்மா… !!!!....” என திகைத்தவன்,

“முதல் முறையா உங்க கண்ணுல கண்ணீரைப் பார்க்குறேன்ம்மா… அதும் என்னால…” என அவன் உடைந்து போக,

“இல்ல கண்ணா… நான் அழலை…” என்றவர் சட்டென தன் விழிநீரை துடைக்க முயல, அவனே மென்மையாக துடைத்துவிட்டு தாயின் முகம் பற்றி,

“இனி உங்களை அழவிடமாட்டேன்மா… எப்பவுமே…” என உறுதியுடன் கூறிட, மகனை அணைத்துக்கொண்டார் கல்யாணி உள்ளுக்குள் நொறுங்கியவராய்…

தாயை அணைத்திருந்தவனின் விழிகளில் தன்னை மீறி கண்ணீர் உதயமாக, அதனை அடக்க முயன்றான்… முடிந்திடவில்லை…

முதன் முதலில் அவன் கண்ட தோல்வியாய், தாயின் அழுகை, பூக்குமுன்னே வாடிய காதல், தனது விழிநீர் என வரிசையாய் ஓரே கணத்தில் நிகழ,

கண்களின் ஓரமாய் திரண்டிருந்த ஒற்றை நீர்த்துளியை பட்டென தட்டிவிட்டான் அவன் இறுக்கமான முகம் கொண்டவனாய்…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.