(Reading time: 9 - 18 minutes)

ப்போ எதுக்குடா இப்படி கோபப்படுற?..”

சாரு தீபனை அதட்டி கேட்டிட,

“கோபமா உன் மேல கொலைவெறியில இருக்குறேன் நான்…” என்றான் தீபன் கைகளை மடக்கி முறுக்கிக்கொண்டு…

அவள் எதுவும் பேசாது அமைதியாய் இருந்திட,

“அவங்க என்ன சொன்னாங்கன்னு சொல்லு…”

“அதான் அப்பவே சொன்னேனே… என்ன சொல்லணுமோ அதை சொன்னாங்க…”

“அவங்க யாரு சொல்லுறதுக்கு?...”

தீபன் சட்டெனக் கேட்டுவிட, சாரு ஒரு வார்த்தைக்கூட பேசவில்லை..

அவளின் அமைதி அவன் செய்த தவறை சுட்டிக்காட்டிட, சாருவின் முகத்தைப் பார்க்க முடியாது தவித்திட்டான் அவன்…

“அக்கா….”

அவன் அழைப்பு அவள் காதில் எட்டியது போலவே அவள் காட்டிக்கொள்ளவில்லை…

“சாரு சாரி… ஏதோ தெரியாம…”

அவன் தடுமாற, “யாருன்னு உனக்குத் தெரியாதுல்ல தீபா?...” என்றாள் அவள் விரக்தியோடு…

“அய்யோ சாரி… சாரு…”

அவன் மனமார மன்னிப்பினை வேண்டிட, அவள் தமையனின் அருகே வந்தாள்…

“உனக்குப் பிடிக்கலைன்னு எனக்கு புரியுது… ஆனா, ஒரு விஷயம் நீ புரிஞ்சிக்கணும் தீபா நீ… அவங்க பெரியவங்க… அவங்க வயசுக்காவது நாம மரியாதை கொடுக்கணும்…. புரிஞ்சதா?...”

அவள் அழுத்தம் திருத்தமாக கூறிட, அவன் தலைகுனிந்தான் மெல்ல…

“சாரி சாரு…” என்றவன், “அவங்க கண்டிப்பா நீ காயப்படுற மாதிரி தான் சொல்லியிருக்குறாங்க… அதை நீ சொல்லலைன்னாலும், நேத்து நடந்ததை வச்சுப் பார்த்தா அப்படித்தான் தெரியுது…” என உறுதியாக கூற,

“காயமா?... இல்லடா…”

அவள் புன்னகைத்துக்கொண்டே கூற,

“என் சாரு முகம், குரல் எப்படி இருக்கும்னு எனக்குத் தெரியும்… நீ பொய் சொல்லுறடி…”

“இதுல பொய் சொல்லி எனக்கென்ன ஆகப்போகுது சொல்லு?...”

“வேற என்ன?.. சம்பந்தப்பட்டவங்களை காயப்படுத்த மனசில்லாம, நீ காயத்தை முழுசா அனுபவிக்கிற அப்படித்தான?...”

“……”

“நீ கௌஷிக் சார்கிட்ட முதல்ல இதப்பத்தி பேசு…”

சொல்லியவன் சட்டென தன் போனை நீட்டிட, அவள் திகைத்தாள்…

“என்ன பார்க்குற?... பிடி… பேசு…”

“எதுக்கு?...”

“எதுக்கா?... நீ இப்போ பட்டுட்டிருக்கியே காயம் அது இல்லாம போகணும்னா நீ பேசிதான் ஆகணும்…”

“அதுக்கு அவசியமே இல்ல தீபா…”

அவன் தன் புருவங்களை உயர்த்திட,

“ஆமா தீபா… நான் காயமும் படலை… அந்த காயத்துக்கு மருந்தும் அவர் இல்லை…”

“என்ன உளறுற?...”

“நாங்க இரண்டு பேரும் சேர்ந்து ஒரு அட் பண்ணினோம்… அதைத் தாண்டி எங்களுக்குள்ளே எதுவுமே இல்ல… இருக்குறதும் நல்லதில்லைன்னு விதி இருக்குறப்போ அதை மாத்த நான் யாரு?...”

“என்னடி சொல்லுற?...”

“இன்னைக்கு ஒரு சாங்க் கம்போசிங்க் இருக்கு… அதுக்கு ரெடி ஆகப்போறேன்…”

சொல்லியவள் நிற்காமல் செல்ல, அவளின் முன்னே சென்று வழி மறித்தான் வேகமாய்…

“நில்லுடி… கேட்குறதுக்கு பதில் சொல்லாம நீ பாட்டுக்குப் போற?...”

அவனை ஒரு நிமிடம் நின்று நிதானமாக பார்த்திட்டவளின் விழி லேசாக கலங்கிட,

“என் காதல் பூக்குறதுக்கு முன்னேயே வாடிப்போச்சு… இனி அது உயிர் பிழைக்கிறதுக்கு வாய்ப்பே இல்லன்னு தெள்ளத் தெளிவா சொன்னாதான் வழி விடுவியா தீபா?...”

என்றவளின் குரல் தடுமாற ஆரம்பித்திட, அதிர்ச்சியில் உறைந்து போனான் தீபன்…”

அவளின் கண்களின் ஓரம் நீர்த்துளி உதயமாக ஆரம்பித்திட, “இனி நான் போகலாமா?...” எனக் கேட்ட மாத்திரமே, தமக்கையை அணைத்துக்கொண்டான் அவன்…

அவனையும் மீறி கண்களில் கண்ணீர் நிறைந்திட,

“முதல் தோல்வி… அதுவும் காதலில்…”

அவளின் மனமானது உள்ளிருந்து உரைத்திட, உதடுகளை அழுந்த கடித்தவள், தனது மைவிழியின் ஓரம் இருந்திட்ட நீர்த்திவலையை தட்டி விட்டாள் சட்டென… முகத்தில் உண்டான இறுக்கத்துடன்…

“முகம் பார்த்திட காத்திருக்கும் மலராய்… தன்னவனின் வருகையை எதிர்நோக்கி…”

Episode # 14

Episode # 16

{kunena_discuss:1162}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.