(Reading time: 18 - 36 minutes)

26. என் சிப்பிக்குள் நீ முத்து - தமிழ் தென்றல்

En sippikkul nee muthu

வன் விரும்பி ரசித்த அந்த இனிமையான பொழுதை சரயூவின் புலம்பல் புரட்டி போட்டது.  நாள் முழுவதும் மனைவி கொடுத்திருந்த இன்ப அதிர்ச்சிகளை விரட்டியடித்தது அவளின் வார்த்தைகள்.

ரெண்டாவது கொலை?!

இதெப்படி சாத்தியம்! சரயூ கொலை செய்திருப்பாளா? அவனறிந்த சரயூ தவறை கண்டால் அதை தட்டி கேட்கும் துணிவுள்ளவள்.  அப்படிபட்டவள் சந்தர்ப்ப சூழ்நிலையால் கொலையே செய்திருந்தாலும், அதற்கான தண்டனையை ஏற்றிருப்பாளே! ஒரு வேளை கொலையும் செய்துவிட்டு அதை யாருக்கும் தெரியாது மறைத்து வைத்திருக்கிறாளோ? என்ற மாத்திரத்தில் ரவிகுமாரின் வளர்ப்பை சந்தேகிக்கவும் முடியவில்லை.

இந்த கொலைதான் தன்னவளின் இயல்பை மாற்றிவிட்டதா?!   

அப்படியென்றாலும் அந்த கொலைக்கும் தனக்கும் என்ன சம்மந்தம்? எதனால் அவனை கொல்ல வந்தாள்?

சரயூ விட்டு சென்ற இருவரிகளில் அவனிடத்தில் ஓராயிரம் கேள்விகள் எழுந்து கொண்டன.

கொலையை பற்றிய ஆராய்ச்சி ஒரு புறமெனில் காதலினால் மனம் கொண்ட துடிப்பு மறுபுறம்.  ஏதோ காரணத்தினால் கொலை செய்து அதை மறைத்து வைக்கப்பட்டிருக்க.... அது வெளிவரும் நாள், அதற்கான தண்டனைக்குள்ளாக வேண்டுமே! தன்னுடையவளுக்கு சிறை வாசமா! நினைக்கும் போதே நெஞ்சு வெடித்தது.

தூக்கமில்லாது வலியும் யோசனையுமாய் கழிந்த இரவின் முடிவில் ஜெய்யும் தங்களுடைய வாழ்க்கையை பற்றிய ஒரு முடிவுக்கு வந்திருந்தான்.

“ஹலோ அங்கிள்! நான் ஜெய் பேசுற”

“குட் மார்னிங் ஜெய்! எப்படியிருக்க?”

“நான் நல்லாயிருக்க அங்கிள்! நீங்க எப்படியிருக்கீங்க?”

“எனக்கென்ன குறை? உன்னோட ஆண்டி, இந்த வயசுலயும் அவளோட புருஷனை விழுந்து விழுந்து கவனிக்குறா...மீதி காலைத்தை அவளோட காதலை ரசிச்சிக்கிட்டே ஓட்டிருவேன்” மனைவி மீதான காதலும் பெருமையுமாக சொன்னார் நாதன்.

“ரிடையரானுலும் போலீஸ் கமிஷ்னருக்கு, ஆண்டி, வீட்ல ட்யூடியை போட்டுட்டாங்க போல”

மனைவியை விட்டு கொடுக்காது, “நான் சர்வீஸுல இருந்தப்பவும் வீட்ல காதல் ட்யூடியை பார்க்க தவறினதில்ல ஜெய்!” என்றவர்,

“அதிருக்கட்டும்.... என்ன? புது மாப்பிள்ளைக்கு, காலையிலயே இந்த கிழவனோட ஞாபகம் வந்திருக்கு?”

அவரிடம் பேசிதான் ஆக வேண்டுமென்றாலும் ஒருவித தயக்கம் வந்து ஒட்டி கொள்ள, “உங்க உதவி தேவைபடுது அங்கிள்...அதான்....” என்று இழுக்க...

“எங்கிட்ட என்ன தயக்கம் ஜெய்? என்னை உன்னோட அப்பாவ நினைச்சு...எதுவானாலும் சொல்லு, கண்டிப்பா முடிஞ்சதை செய்வேன்”

“இது கொஞ்சம் சென்சிடிவான விஷயம்...அதனால உங்க டிபார்ட்மெண்ட்ல யாரையாவது ரெகமெண்ட் பண்ண முடியுமா? கேஸ் ஃபைல் பண்ணாம தனிபட்ட முறைல ஹெல்ப் செய்ற மாதிரி இருந்தா நல்லாயிருக்கும்....”

ஜெய்யின் குரலிலிருந்த வித்தியாசைத்தை உணர்ந்தவராக....அவனிடம் எதையும் தோன்டி துருவாது, “நாளைக்கு ஏ.சி.பி.யை போய் பாரு ஜெய்! நான் அவங்கிட்ட சொல்லிட்ற....அவனை முழுசா நம்பலாம்! ரொம்ப நல்லவ ஆனா கொஞ்ச ஹூமரஸ்“

இதற்கு விடிவு காணாமல் சரயூவிடம் எந்த மாற்றமும் இருக்காதென்பதை புரிந்து கொண்டவன்... எவ்வளவு விரைவில் விடை காண முடியுமே அவ்வளவு நல்லது என்றிருந்தான்.

அதனால், “அங்கிள்! இன்னைக்கே அவரை பார்க்க முடியாதா?”

சிறிது நேரம் யோசித்தவர், “உன்னோட அவசரம் புரியுது! 11 மணிக்கு கமிஷ்னர் ஆஃபிஸ்ல இருக்க மாதிரி போயிடு...நான் அவங்கிட்ட பேசுற”

“கண்டிப்பா! தேங்க்ஸ் அ லாட் அங்கிள்”

“தேங்க்ஸுக்கு பதிலா இந்த வார கடைசில், உன்னோட பொண்டாட்டிய வீட்டுக்கு அழைச்சிட்டு வா! நாள் முழுக்க, எங்களோட ஸ்பெண்ட் செய்ற மாதிரி வரனும் ஜெய்” அன்பு கட்டளையிட்டார்.

நாதனிடம் பேசிவிட்டு வந்தவனின் கண்கள், சாப்பிட்டு கொண்டிருந்த மனைவியை ஆராய்ந்தது.

அழுததினால் வீங்கியிருந்த முகமும் தடித்து சிவந்திருந்த இமைகளுமாக அவளைக் காண வலித்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.