“நல்லாயிருக்க மச்சா!” சுரத்தின்றி சொன்னவன்... ஆச்சரியமாக, “என்னால இன்னமும் நம்பமுடியலடா... எப்போ அமெரிக்காலிருந்து வந்த? எப்போ ஏ.சி.பியானா?” மகிழ்ச்சியும் கேலியுமாக கேட்ட நண்பனை முறைத்த ரூபின்,
“நான் என்னோட நாட்டுக்கு திரும்பி வரக்கூடாதுனு யாரும் சொல்ல முடியாதே?!” என்றுவிட்டு “அமெரிக்கா போயி இரண்டு வருஷ கழிச்சு மாமா கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணவும் பத்து நாள் லீவ்ல வந்த... கல்யாணம் முடிஞ்சு, மறுவீடு, சொந்தக்காரங்க வீட்ல விருந்துனு நேரம் அதுபாட்டுக்கு ஓட... பத்தாவது நாள் அமெரிக்கா திரும்ப எல்லாத்தையும் பேக் பண்ணிட்டு ரெடியானா, சௌமியோட அப்பா வந்து, எங்களை இங்கேயே இருக்க சொல்லிட்டாங்க... என்னால நம்பவே முடியல... ஆச்சரியமாயிருந்தது! சௌமி அப்பாக்கு நாங்க அமெரிக்கால செட்டில் ஆகனும்னு ஒரு வெறியே இருந்துச்சுனு சொல்லலாம். அவர் திடீர்னு இப்படி சொல்லவும் எனக்கு ஒன்னுமே புரியல... அப்றம்தா தெரிய வந்தது, எனக்கு பப்லிக் சர்வீஸ்ல இன்ட்ரெஸ்ட் இருக்கறது தெரிஞ்சு சௌமிதா அவங்க அப்பாவை கன்வின்ஸ் பண்ணியிருக்கானு! ரொம்ப சந்தோஷமாயிருந்தது மச்சா! அதுக்கு பிறகு கோச்சிங்க் க்ளாஸ், எக்சாம், செலக்ஷன், ட்ரெயினிங்க்னு எல்லாம் முடிஞ்சு கடைசியா போஸ்டிங்க் கிடைச்சது”
நண்பன் சொன்னதை கேட்டவனுக்கு தோன்றியதை, “யூ ஆர் லக்கி டு ஹாவ் சௌமி!” என்று வாய்விட்டு சொல்லியிருந்தான்.
“யெஸ் ஐ ஆம்! உண்மைதா சஞ்சு! சௌமி இல்லாம நான் என்னாயிருப்பேனு நினைச்சு கூட பார்க்க முடியலடா!” என்றான் குரல் கரகரக்க...
“இது சந்தோஷபட வேண்டிய விஷயம் மச்சா!!”
“ம்ம்ம்...” என்றவனின் தலை மேலும் கீழுமாக ஆடியது.
“சரி மச்சா! எனக்கொரு அப்பாயிட்மெண்ட் இருக்குடா... உன்னோட நம்பர் சொல்லு...நாம நாளைக்கு மீட் பண்லாம்”
இருவரும் கைபேசி எண்களை பகிர்ந்து கொள்ள... ரூபினை மறுதினம் வீட்டிற்கு அழைத்துவிட்டு விடைபெற்றான் ஜெய்.
“இன்னும் அரைமணிக்குள்ள எல்லாம் தயாராகிடுமா?” என்று வீட்டு வேலையாட்களை கேட்டபடி எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்வையிட்டவன், கடைசியாக மமைவியின் அறையின் முன் நின்றிருந்தான்.
கதவு திறந்திருந்தது தெரிந்தாலும், அதை தட்டிவிட்டு நிற்க.... எட்டிப்பார்த்தாள் சரயூ.
“சரூ! வீட்டுக்கு கெஸ்ட் வராங்க”
அதற்கு நானென்ன செய்ய என்பதாக அவள் பார்க்க, “இன்னும் கொஞ்ச நேரத்துல வந்திருவாங்க... நீயும் கீழ வந்து அவங்களை இன்வைட் செய்றீயா? ப்ளீஸ்...”
கல்யாணம் முடிந்த மூன்று மாதங்களில், அவள் வீட்டார், மைத்ரீயின் வீட்டார்....அதுவும் வடிவை தவிர வேறு யாரும் வீட்டிற்கு வந்ததில்லை. ஒரு வேளை யஷ்விதாவா இருக்குமா? ம்ஹீம்...அவள்தான் இங்கு போவதில்லையே... அப்படியிருக்க இன்றென்ன புதிதாக என்று வியப்பாக அவள் பார்க்க,
“வர போறவங்களை உனக்கும் தெரியும் சரூ! அவங்களை பார்த்த கண்டிப்பா சந்தோஷபடுவ. சீக்கிரம் தயாராகி வந்துருடா!” என்றுவிட்டு அவன் படியிறங்கி சென்றுவிட்டான்.
இவளுக்கும் தெரியுமா! யாராக இருக்கும்? யோசனையோடு கிளம்பி கொண்டிருந்தவள் கீழே செல்வதற்குள் கதவு தட்டபட்டது. அதை தொடர்ந்து ஜெய்யின் குரலும் கேட்க...அவசரமாக கதைவை திறந்தாள்.
“என்னடா லேட்டாயிடுச்சா? அவங்க வந்துட்டாங்க! கொஞ்ச சீக்கிரமா வாடா” என்று அவன் திரும்பவும், அவளும் தயாராகியிருக்க, அவனோடு நடந்தாள்.
‘நான் வாய் திறந்து சொல்லாமலே, எல்லாத்தையும் கண்டுபிடிச்சிடுறா. அப்பாக்கு அடுத்து இவனால மட்டும்தா முடியுது! ரெண்டு பேரும் செம ஷார்ப். இப்போ கூட ரெடியாக லேட்டாயிடுச்சானு சரியா கேட்குறா’
தனக்குள் யோசித்தபடி வந்தவளின் விழிகள் சௌமியாவை கண்டதும் விரிய, உதட்டில் சிறு புன்னகையோடு அவசரமாக படியிறங்கினாள்.
ரூபின், சௌம்யாவை வரவேற்று உபசரித்த ஜெய், “உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் காத்துட்டிருக்கு... இருங்க வரேன்” என்று மேலே சென்றான்.
என்னவாக இருக்குமென அவர்கள் பேசிக்கொண்டிருக்கையில் ஜெய்யும் சரயூவும் வருவதை கண்டவர்களுக்கு சந்தோஷம் தாளாமல் எழுந்துகொண்டனர்.
அவசரமாக நடந்தவள் ஜெய்யை தாண்டி வந்து சௌம்யாவை அணைத்து, “சௌமி!” என்று கூவினாள்.
மனைவி மூச்சுக்கு திணறுவதில் பதறியவன், “ஹே சரயூ மெதுவா!” என்றபடி சௌம்யாவின் கழுத்தை சுற்றியிருந்த அவள் கைகளை விடுவிக்க... பயத்தில் முகம் வெளிற சட்டென கைகளை உருவிக்கொண்டாள் சரயூ.
ரூபினால் சரயூ பயந்து போனதை உணர்ந்தவனுக்கு, மைதிரீயின் நிச்சயத்தன்று இவர்களின் சேட்டையும், ரூபின் வாய்க்குள் திணித்த முறுக்கும், அவனிடத்தில் இவளுக்கிருந்த தோழமையும் கண்களில் விரிய... அவளை சமாதானம் செய்யும் வழி புரியாது விழித்தான் ஜெய்.