(Reading time: 11 - 22 minutes)

தொடர்கதை - என் அருகில் நீ இருந்தும்!!! - 04 - பூஜா பாண்டியன்

En arugil nee irunthum

துபாய் ஏர்போர்டில் திருதிருவென விழித்த படி நின்று கொண்டிருந்தாள் உத்ரா. எல்லாம் தெரியாத முகங்கள். அங்கேயே சிறிது தூரம் நடந்து சென்று பார்த்தாள். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை அபிமன்யுவை காணவில்லை. திருவிழாவில் சென்று தொலைப்பது போல் இங்கு வந்து தன்னை தொலைத்து விட்டானோ என்று தோன்றியது.

கையில் பாஸ்போர்ட் இல்லாமல் இப்படி அந்நிய தேசத்தில் நிற்பதே கிரிமினல் குற்றம். ஏதேதோ தோன்றியது உத்ராவிற்கு. பிசினஸ் கிளாஸ் டிக்கெட் என்பதால், வெயிடிங் லவுன்ச் க்கு சென்று பார்த்தாள். போர்டிங் பாஸ் இல்லாமல் உள்ளே நுழைய விட மாட்டேன் என்று சொல்லி விட்டான் அங்கிருந்த காவலாளி.

போர்டிங் பாஸ் இருந்தாலாவது, வெளியேறும்  வாயில் எண்ணை தெரிந்து அதன் அருகிலாவது காத்திருக்கலாம். ஒன்றும் தெரியாமல் விழித்துக் கொண்டு இருந்தாள் உத்ரா. அபிமன்யு எங்கெல்லாம் தன்னை தேடுகிறானோ என்ற கவலை வேறு உண்டானது.

சற்று தூரத்தில் இருந்த உதவி மையத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தாள் உத்ரா.

“இங்க என்னடா செய்யற, உன்னை எங்கெல்லாம் தேடினேன் தெரியுமா” என்ற அபியின் குரலைக் கேட்ட பின்பே உத்ராவிற்கு போன உயிர் திரும்பி வந்தது போன்று இருந்தது. இருந்தாலும் அவனிடம் அதை காட்டிக் கொள்ளாமல்

“என்ன, என்னை தொலைத்து விடும் ஐடியாவா” என்று குறும்பாகவே கேட்டாள் உத்ரா.

“அது அவ்வளவு ஈஸியா என்ன? அவனும் குறும்பாகவே பதில் கேள்வி கேட்டு, அவர்கள் கிளம்ப வேண்டிய வாயிலை நோக்கி அழைத்துச் சென்றான்.

“நாம கொஞ்ச நேரம் அங்கு லவுஞ்சில் காத்திருக்கலாமா? என உத்ரா கேட்க

“நமக்கு அதிக நேரம் இல்லை உத்ரா.  கண்டிப்பாக போக வேண்டுமா?

“சரி நாம் விமானத்திற்கு செல்லலாம். அடுத்த முறை பார்த்துக் கொள்கிறேன்”

“யாரை உத்ரா? என ஐயமாக அபி கேட்க

“எனக்கு  பிடித்த நடிகர் ஆரியா. அவரோட ஒரு  செல்ஃபி எடுத்துக் கொள்ளலாம் என்று நினைத்தேன்.”

“நான் உன்னைக் காணோம் என்று பதறி வந்தால், நீ என்னவோ கூலா ஹீரோ கூட செல்பி எடுக்கப் போகிறேன் என்று சொல்ற. நீ, இப்போ தான் இப்படியா, இல்லை எப்பவுமே இப்படி தானா உத்ரா.” என்று சற்று எரிச்சலுடன் கேட்க.

“என்ன பாஸ், கொஞ்சம் பொறாமையா இருக்கோ?  

அதற்குள் விமானத்தில் ஏற அழைப்பு வர இருவரும் கிளம்பினர். இம்முறை உத்ரா , அபிமன்யுவின் கைகளை பிடித்துக் கொண்டாள். மறுமுறை தொலைந்து போக விரும்பவில்லை. ஆனால் அவள் கையில் இருந்த நடுக்கத்தை உணர்ந்த அபி

“ரொம்ப பயந்தது விட்டாயா உத்ரா? உன்னோட கை இப்படி நடுங்குது. எதோ ஐஸில் வைத்தது போல் கை இவ்வளவு சில்லென்று இருக்கு.” என்று பரிதாபத்தோடு  அபி கேட்க...

“பாடி தான் ஸ்ட்ராங், பேஸ்மென்ட் கொஞ்சம் வீக் தான் பாஸ்” என்று அதற்கும் வடிவேலு ஜோக் அடித்தபடி கிளம்பினாள் உத்ரா.

விமானத்தில் ஏறி அமர்ந்த பின், “அது என்ன? என்னை பாஸ் என்று கூப்பிடுகிறாய் , நான் என்ன கொள்ளை கூட்ட தலைவனா? இல்லை உன்னோட ஆபிஸ் மேல் அதிகாரியா? என்று அபி கேட்க....

“உங்கள எப்படி கூப்பிடுவது என்று இன்னும் யோசித்துக் கொண்டே இருக்கேன். எப்படி கூப்பிட்டால் உங்களுக்குப் பிடிக்கும், நீங்களே சொல்லுங்களேன் பாஸ்.”

“ஆபிஸில் எல்லோரும், சித்தார்த் என்று தான் கூப்பிடுவார்கள், அதனால் நீ அபிமன்யு என்றே கூப்பிடு.”

“ஷாட்டா அபின்னு கூப்பிடவா?

“அஸ் யூ விஷ்,” என்று அங்கிருந்த டிவியை ஆன் செய்து எதோ பார்க்க ஆரம்பித்து விட்டான் அத்துடன் பேச்சு முடிந்தது என்று.

அந்த 14 மணி நேர பயணத்தில் பெரிதாக இருவரும் பேசிக் கொள்ளவில்லை.

நியுவாக் எர்போர்டை அவர்கள் அடைந்த பொழுது இரவு ஒன்பதரை ஆகி இருந்தது. பரிசோதனை வரிசையில் நின்று கொண்டிருந்த பொழுது “இது நியுயார்க் இல்லையா?  நியுவாக் என்று போட்டு இருக்கு.” என்று அங்கிருந்த பெயர் பலகையைப் பார்த்துக் கேட்டாள் உத்ரா.

“என்னோட அலுவலகம் தான் நியுயார்க்கில் இருக்கிறது உத்ரா, நம்ம வீடு நியூ ஜெர்சியில் இருக்கு. நம்ம வீட்டில் இருந்து பக்கம் என்றால் இந்த ஏர்போர்ட் தான்.” என்று விளக்கி கூறினான் அபி.

எல்லா பரிசோதனைகளும் முடிந்து அவர்கள் வெளியே வந்த பொழுது, அவர்களை வரவேற்க, அபிமன்யுவின் நண்பன் உத்தமனும் , அவன் மனைவி தேவ சேனாவும், அவர்களின் மகன் வருணும் இருந்தனர். அவர்களுக்கு உத்ராவை அறிமுகம் செய்து வைத்தான் அபிமன்யு.

ஒரு சாக்லேட்டை கொடுத்தும், உத்தரவின் நெருங்கிய தோழனாகி விட்டான் வருண். அமெரிக்க உச்சரிப்பில், ஆங்கிலத்தில் பேசியபடியே வந்தான். உத்ராவைப் பற்றி ஆயிரம் கேள்விகள் கேட்டபடி வந்தான், வழி நெடுக்கும். சிறிது நேரத்தில் உறங்கியும் போனான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.