அழகிய வாடாமல்லி நிறப் பட்டுப்புடவையில் கழுத்தில் நீளச் செயினும் காதில் ஜிமிக்கியுமாய் வந்தவள் மூவருக்கும் பொதுவாய் வணக்கம் கூற,லஷ்மி அவளை தன்னருகில் அமர்த்திக் கொண்டார்..
“எப்படிடா இருக்க??”
“நல்லாயிருக்கேன் ஆன்ட்டி..”
“இன்னும் என்ன ஆன்ட்டி அத்தைநு அழகா கூப்டு..”,என செல்லமாய் கன்னம் கிள்ள பார்த்திருந்த மதுராவிற்கு நெஞ்சம் நிறைந்து விட்டிருந்தது..ஹரிணியும் ரகுவும் விரும்பினார்கள் என்றாலும் மதுராவிற்கு முதலிலிருந்தே அவன் குடும்பத்தில் தன் மகளை எப்படி நடத்துவார்களோ என்ற கவலை இருந்து கொண்டேதான் இருந்தது..இப்போது அதுவும் மறைந்து மனம் நிம்மதியடைந்தது…
“சின்னஞ்சிறுசுங்க ஆசப்பட்டாங்க எனக்கும் இவன் கல்யாணத்துல பெருசா எந்த கண்டீஷனும் இருந்ததில்ல..சோ உங்களுக்கும் சம்மதம்னா கையோட தேதி குறிச்சுடுவோம் என்ன சொல்றீங்க??”, என கண்ணன் வெளிப்படையாய் கேட்க,
ஹரிணியின் தந்தை ஒன்றும் கூறமுடியாமல் தலையசைத்தார்..”ஏற்கனவே ஜோசியர்ட்ட பேசி இரண்டு மூணு தேதி பாத்துருக்கோம் உங்களுக்கு எது வசதிபடுதுனு பாத்து சொல்லுங்க அதையே முடிச்சுரலாம்..”என லஷ்மி மதுராவிடம் பேப்பரை கொடுத்தார்..
“அங்கிள் அப்பறம் மத்த விஷயங்களெல்லாம் இப்போவே பேசிட்டா..”, என ஹர்ஷா இழுக்க,
“இங்கபாருங்க தம்பி இந்த வரதட்சணையெல்லாம் வாங்குறது எனக்கு சுத்தமா பிடிக்காது..உங்க பொண்ணுக்கு நீங்க என்ன விரும்புறீங்களோ போடுங்க மத்தபடி கல்யாண செலவும் ரெண்டு பேருமா ஷேர் பண்ணிக்கலாம்..கல்யாணம் முடிஞ்சு ஒரு வாரம் இல்ல பத்து நாள்ல என் பிஸினஸ் சர்க்கிள்க்காக ஒரு க்ரண்ட் ரிசெப்ஷன் வைக்கணும் அது என் பொறுப்பு..
மத்தபடி பேச பெருசா ஒண்ணுமில்லப்பா..இந்த செகண்ட்ல இருந்து உன் தங்கச்சி எங்க வீட்டு பொண்ணு கவலைய விடு “,என பலமாய் சிரிக்க ரகுவிற்கும் ஹரிணிக்கும் அப்பாடா என்றிருந்தது..
அனைவருக்குமாய் சிற்றுண்டி பரிமாற பேச்சும் சிரிப்புமாய் நேரம் கழிந்தது..ஆனால் ரகுவும் கிருஷ்ணணும் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ளகூடவில்லை..ரகு மறந்தும் அவர்புறம் திரும்புவதாய் இல்லை..பெரியவர்கள் பேசிக் கொண்டிருக்க ஹர்ஷா,ரகுவிற்கு வீட்டை சுற்றி காட்டுமாறு ஹரிணியை அனுப்பி வைத்தான்..
அவள் மாடியேற அவளிடமிருந்து விழியகற்றாமல் பின் தொடர்ந்தான் அவளவன்..
பேருக்காய் அறைகளை நோட்டமிட்டவன்,
“ஓய் பொண்டாட்டி..”
அழகாய் முகம் சிவந்தவள்,அவனை ஏறிட கைநீட்டி தன்புறம் அழைத்தான்..தன் கையை அவனோடு சேர்த்தவள் அவனருகில் செல்ல இன்னுமாய் தன்னோடு சேர்த்துக் கொண்டான்..அவன் மார்பில் இரு கையையும் பதித்தவளாய் அவனின் கைச் சிறைக்குள் அவளிருக்க அவள் காதின் கம்மலை அசைத்து ரசித்தவனாய்,
“லவ் யூ டீ ஹணி..”
சிரிப்பையே பதிலாய் அளித்தவள் நிமிர்ந்து அவனை பார்க்க,நெற்றியில் அழுத்தமாய் இதழ் பதித்து விடுவித்தான்..
“சீக்கிரமா நம்ம வீட்டுக்கு வந்துரு ஹணி இதுக்குமேலலா பொறுக்க முடியாது.நல்ல வேளை என் மாமனார் எதாவது மாஸ்டர் ப்ளான் போட்டு கவுத்திருவாரோனு பாத்தேன்..கொஞ்சமே கொஞ்சம் நல்லவருதான் போல “,என்றவனின் கையில் சட்டென லேசாய் அவள் அடிக்க,
“என்னடீ கல்யாணத்துக்கு முன்னாடியே அடிக்குற???”
“ம்ம் நீங்க கூடதான் கல்யாணத்துக்கு முன்னாடியே என்ன கட்டிபிடிக்குறீங்க நா எதாவது சொன்னேனா???”
“ரொம்ப தேறீட்ட ஹணி..என் நிலைமை கஷ்டம்தான்..ம்ம்..”
“சரி வாங்க கீழே போலாம்..தேட போறாங்க..”
சரிங்க என அவள் போலவே கூறி கீழே அழைத்துச் சென்றான்…அதற்குள் பெரியவர்களும் கிளம்ப தயாராய் இருக்க அனைவருமாய் விடைபெற்றுச் சென்றனர்..
“அந்த புள்ள ராஜா மாதிரி இருக்கு இல்லடா ஹர்ஷா..ஆனா கொஞ்சம்கூட அந்த தலைக்கணமே இல்ல பாரேன் நா கூட அவங்க அம்மா அப்பா எப்படியிருப்பாங்களோனு நினைச்சேன்..”
“ம்ம் ஆமாம்மா..ஹரிணிகேத்த நல்ல இடம்தான் அமைஞ்சுருக்கு..என்னப்பா???”
ம்ம் ஆமா ஆமா..என்றவர் எழுந்து சென்றுவிட ஹரிணிக்கு முகம் வாடிப் போனது..
“அப்பாவ பத்தி தெரிஞ்சும் இப்போ எதுக்கு டல் அடிக்குற ஹரிணிம்மா..அவரு சந்தோஷம் வருத்தம் எதையுமே வெளிக் காட்டிக்க மாட்டாருநு உனக்கு தெரியாதா??ஆனா அவங்க பேசிட்டு போன விதத்துல இப்போ அவரு தான் உண்மையாவே ரொம்ப சந்தோஷமா இருப்பாரு..கவலபடாத டா..”
“ம்ம் அண்ணா ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் உன்னால மட்டும் தான் இதெல்லாம் நடக்குது..”என்ற தங்கையை வாஞ்சையாய் தோள் சய்த்துக் கொண்டான்…