(Reading time: 15 - 29 minutes)

டுத்ததாய் அவர்கள் கொடுத்த தேதிகளை தங்கள் ஜோசியரிடம் காட்ட இரண்டு மாதத்திற்கு பின் வந்த முகூர்த்தம் நன்றாக இருப்பதாய் குறித்துக் கொடுத்தார்..இரு வீட்டு பெரியவர்களும் கலந்து பேசி வரும் முகூர்த்ததில் நிச்சயதார்த்தத்தை முடித்துக் கொள்ளலாம் என முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளை ஆரம்பித்தனர்..

அன்று நிச்சய புடவை எடுப்பதற்காக ஹரிணி குடும்பத்தையும் அழைக்க கிருஷ்ணன் ஏதேதோ காரணம் சொல்லி வராமல் போக ஹரிணி தன் அன்னையோடும் அண்ணியோடும் சென்றாள்..

ரகுவும் அன்று மீட்டிங் இருப்பதால் வரவில்லை என கூறிவிட அவன் அப்பாவும் அம்மாவும் வந்திருந்னர்..

பட்டுப்புடவை செக்ஷனுக்குச் சென்று லஷ்மி அவளுக்குப் பிடித்ததாய் எடுத்துக் கொள்ள சொல்ல,புடவையை பார்க்க ஆரம்பிக்கும் போது சரியாய் அவள் போன் சிணுங்கியது..ரகுதான் அழைத்திருந்தான்..ஒருபுறம் லஷ்மி மறுபுறம் மதுரா அமர்ந்திருக்க என்னசெய்வதென தெரியாமல் முழித்தவள் பாவமாய் அஞ்சலியை பார்க்க,

நீ போய் பேசிட்டு வா ஹரிணி நாங்க பாத்து வைக்குறோம் என்று கூறி அனுப்பி வைத்தாள்..

“ஹலோ..”

“ஹணி ஏன் இவ்ளோ நேரம் போன் எடுக்க???”

“நந்தா அம்மா அத்தையும் பக்கத்துல இருக்கும்போது நா என்ன பேசுறது??இப்போ கூட தள்ளி வந்து தான் பேசுறேன்..”

“அதான் கல்யாணமே நடக்க போதே டீ அப்பறம் என்ன பேச வேண்டியதுதான???”

“ப்ச்ச் அதெல்லாம் முடியாது எனக்கு ஒருமாதிரி ஷையா இருக்கு..”

“ஐயோ என் குடும்ப குத்துவிளக்கே இதுக்காக தான் லவ் யூ சோ மச்..”

“மீட்டிங்நு ஆபீஸ் போய்ட்டு இப்படி கடலை போடுறதுக்கு நீங்களும் எங்களோட வந்துருக்கலாம்ல??”

“அடிப்பாவி..இன்னும் ஃபைவ் மினிட்ஸ்ல மீட்டிங் சரி அதுகுள்ள உன்கிட்ட பேசலாமேநு பண்ணேன்..சரி சொல்லு என்ன கலர் புடவை எடுத்த??”

“இன்னும் எடுக்கலைப்பா..என்ன எடுக்குறதுன்னே தெரில..”

“ம்ம் எனக்கு என்ன கலர் ப்ளேசர் எடுக்கலாம்???”

“எனக்கே இன்னும் எதை எடுக்கநு தெரில இதுல உங்களுக்கா???”

“சீக்கிரம் சொல்லு ஹணி.”

“ம்ம் ப்ளேசர் ரெண்டே கலர் ப்ளாக் ஆர் ப்ளு..நேவி ப்ளு வித் வொய்ட் ஷர்ட் நல்லாயிருக்கும் அது ஓ.கே வா???”

“ம்ம் நாட் பேட் அப்போ நீயும் ப்ளு பேஸ்ல சாரி எடூத்துரு ஓ.கே தான??”

“எப்படி நந்தா இப்படியெல்லாம் யோசிக்குறீங்க???புல்லரிக்குது..”

“இதெல்லாம் நீயே என்கிட்ட கேட்டு போய்ருக்கனும்..நீ போனை அலராத்துக்காவது யூஸ் பண்ணுவியானு தெரில..அதான் நானே பண்ணேன் சரி பை..முடிஞ்சா போட்டோ அனுப்பு. லவ் யூ டீ..பை..”

“நந்தா..”

“ம்ம் சொல்லு ஹணி..”

“லவ் யூ டூ..”

“ஹே என்ன சொன்ன எனக்கு சரியா கேக்கல..”

லவ் யூ லவ் யூ லவ் யூ பை..என அவள் அழைப்பை துண்டித்துவிட குறுஞ்செய்தியில் தன் பதிலை முத்தங்களாய் அனுப்பினான் ரகு..

அதன்பின் அவன் கூறிவாறே நேவி ப்ளு நிற சேலையில் பிங்க் நிற அகன்ற பார்டர் கொண்ட புவையை செலெக்ட் செய்தாள்..அவனுக்கு புடவையை போட்டோ எடுத்து அனுப்பிவிட்டு புடவையை பில் போட்டு வாங்கிக் கொண்டனர்..அதன் பின் நிச்சையதார்த்த மோதிரம் வாங்கிக் கொண்டு அனைவருமாய் விடைபெற்று கிளம்பினர்..

நிச்சயத்தை ஹோட்டலில் வைத்துக் கொள்ளலாம் அதுவும் என் பொறுப்பு என கண்ணன் கூறிவிட ஹரிணி வட்டாரத்தில் நெருங்கிய சொந்தங்களை மட்டும் அழைக்க முடிவெடுத்னர்..

ந்த அழகிய நாளும் வந்தது..மாலை ஆறு மணிக்கு நிச்சயதார்த்த நேரம் குறிக்கப்பட்டிருக்க கிருஷ்ணன் மதுரா ஹர்ஷா மூவரும் 5 மணியளவிலேயே ஹோட்டலை அடைந்திருந்தனர்..

அழகிய த்ரீ ஸ்டார் ஹோட்டல் சிட்டியின் மைய பகுதியில் கம்பீரமாய் அமைந்திருக்க அதன் அந்த ப்ரம்மாண்டமே முதல் முறையாய் கிருஷ்ணனை இறங்கி வர வைத்தது..தன் மகள் வாழப் போகும் உயரத்தை நினைத்து மனம் உவகை கொண்டது..இருப்பினும் எதையும் காட்டிக் கொள்ளாமல் கண்ணணோடு சென்று பேச ஆரம்பித்தார்..மதுரா மணமேடையில் வேலையை கவனிக்க அங்கு மணமகன் அறையில் ரகு தயாராகிக் கொண்டிருந்தான்..அவ்வப்போது ஹரிணிக்கு மெசேஜ் அனுப்ப எதற்குமே பதில்லை..

அப்படி என்னதான் பண்றா பார்லர்ல..நானே ரெடி ஆய்ட்டேன் எப்போ தான் வருவா இவ என புலம்பிக் கொண்டிருக்க,போட்டாக்ராபர் கதவை தட்டி உள்ளே நுழைந்து போட்டா எடுத்துக் கொள்ளலாமா எனக் கேட்க அதில் கவனம் செலுத்தலானான்..

ஒரு பத்து பதினைந்து நிமிடங்கள் கழிய போட்டோக்ராபர் ஒரு நிமிடம் என்றவாறு வெளியே செல்ல கண்ணாடியில் மறுபடியுமாய் தன்னை சரிபார்த்தவன் கதவு திறக்கும் ஓசையில் கண்ணாடி வழியே பார்க்க,போட்டோக்ராபரை தொடர்ந்து வந்வளை கண்டு சிலையென நின்றுவிட்டான்..

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.