அழகியப்ளு நிறப் புடவையில் பிங்க் பார்ட்டரோடு அதற்கேற்றாற் போல வெள்ளைக் கற்கள் தித்த டிசைனர் ஜுவல் செட் அவளை அலங்கரிக்க அவளின் அழகிய நீள முடியை அழகாய் பின்னி புடவை நிறத்திற்கேற்ற பூக்களால் அலங்கரித்திருந்னர்..அவன் அப்படியே நிற்பதை கண்டவள் மெதுவாய் அவன் புறம் பார்க்க கண்ணாடி வழியே தன்னை பார்ப்பதை உணர்த்து விழி தாழ்த்திக் கொண்டாள்..
அழகிய நேவி ப்ளு நிற ப்ளேசரில் வொய்ட் சர்ட் அணிந்து நேர்த்தியாய் மீசையை தவிர முகம் துடைத்து வைத்த பளிங்காய் இருந்தது ரகுவிற்கு..போட்டோ க்ராபர் இருப்பதை உணர்ந்து சட்டென உணர்வு பெற்றவன்,அவளருகில் வர பெண்ணவளுக்கோ பயம் அப்பிக் கொண்டது..அவரின் முன் எதாவது கூறிவிட போகிறானே என பதட்டமாய் அவனை பார்க்க அதை உணர்ந்தவன் சட்டென கண்ணடித்து இதழ் குவித்தான்..
எதிர்பாராத அவன் செய்கையில் இன்னுமாய் முகம் சிவந்து அவள் நிற்க அவளை இன்னுமாய் பதட்டமடைய வைக்குமாறே அடுத்து வந்த பதினைந்து நிமிடங்களும் இருந்தன..ரகுவையும் அவளையும் இருக்கும் அத்தனை அங்கிளிலும் நிற்க வைத்து அந்த அழகிய தருணத்தை புகைப்படமாக்கி கொண்டிருந்தார்..இறுதியாய் ரகுவின் மார்பில் தன் இரு கைகளையும் வைத்தவாறு அவள் திரும்ப ரகு அவள் இடைவளைத்தவாறு நின்றான்..புகைப்படம் முடித்தும் ரகு தன் கையை அகற்றவில்லை..போட்டோ எடுத்தவர் அவர் பாட்டுக்கு வெளியே சென்றுவிட ரகு அவளை இன்னுமாய் தன்னோடு நெருக்கினான்..
ஹணி..யூ ஆர் மை ஏஞ்சல் டீ..லுக்கிங் ஸ்டன்னிங்..என காதில் கிசுகிசுத்தவன் சட்டென அவள் கன்னத்தில் தன் முத்திரையை தித்திருந்தான்..அவசரமாய் அவனை விட்டு நகர்ந்தவள் கதவை திறக்க,வெளியே சென்றவள் திரும்பி அவன் உதட்டைச் சுட்டிக் காட்டி நகர்ந்து விட்டாள்..என்னவென கண்ணாடியில் பர்த்தவன் அவள் கன்னத்திலிருந்த பிங்க் நிற ப்ளஷ் லேசாய் அவன் உதட்டில் ஒட்டியிருந்தது..லேசாய் சிரித்தவாறே அதை துடைத்தவன் மணமேடைக்கு செல்ல தயரனான்..
அவர்களுக்கான மணப்பலகை போடப்பட்டிருக்க ரகு வந்து அமர்ந்தான்..அவன் புறம் அவனின் தாய் தந்தையும் அவர்களுக்கு எதிராய் ஹரிணியின் பெற்றோர் அமர்ந்திருந்தனர்..எதேச்சையாய் ரகு கிருஷ்ணனைப் பார்க்க அவரும் அவனை தான் பார்த்துக் கொண்டிருந்தார்..என்ன செய்வதென தெரிராமல் அவன் தலையை திருப்ப சரியாய் ஐயர் ஏதோ கூறி கவனத்தை திருப்பினார்..
மணப்பெண்ணை மேடைக்கு அழைக்க அழகிய பதுமையாய் வந்து ரகுவின் அருகில் அமர்ந்தவளை பார்த்த அனைருக்குமே மனம் நிறைந்து போனது..பெரியவர்கள் நிச்சய பத்திரிக்கையை படித்து தட்டை மாற்றிக் கொள்ள மணமக்கள் கையில் மோதித்தை கொடுத்து மாற்றிக் கொள்ள கூறினர்..
அடுத்ததாய் ஹர்ஷா ரகுவிற்கு செயின் அணிவிக்க,லஷ்மி அழகிய வைர நெக்லஸை ஹரிணிக்கு அணிவித்தார்.. அதன் பின் மணமக்களுக்கான இருக்கைகள் போடப்பட்டு விருந்தினர்கள் அவர்களை ஆசீர்வதிக்க வர நேரம் இனிமையாய் கழிந்தது..கூட்டம் குறைந்து மறுபடியுமான போட்டோ செஷன் முடிந்து இரவு உணவுக்காக செல்ல போட்டோ க்ராபர் அங்கேயும் விடுவதாய் இல்லை..இருவரையும் உணவை ஊட்டிவிட சொல்லி வளைத்து வளைத்து எடுத்து முடித்தார் ஒரு வழியாய்..
“ஹணி..”
“ம்ம் “
“இப்படியே வந்துரு டீ..”
“என்ன???”
“என்கூட நம்ம வீட்டுக்கு..”
“நந்தா!!!!!!”
“ப்ப்ச்ச் போடி சின்ன பையனை ரொம்ப தான் காய விடுறீங்க..”
“ம்ம் போதும் போதும் பக்கத்துல தான் உங்க மாமனார் இருக்காரு வேணா அவர கூட்டிட்டு போங்க”, என மெதுவாய் சிரிக்க,
“எதுக்கு மறுடியும் அடி வாங்குறதுக்காக ஏற்கனவே ஸ்டேஜ்ல பாத்தேன் கொலைவெறில பாத்தாரு..”
அவன் கூறியவாதத்தில் ஹரிணிக்கு புரையேற வேகமாய் தண்ணீரை எடுத்துக் கொடுத்தவன்,
“என்னடீ உங்கப்பாவ நீயே கலாய்க்குற”, என சீரியஸாய் கூற
நந்தா என செல்லமாய் கையில் இடித்தவளை பார்த்து ரசித்தவாறே உணவை முடித்தான்..
கிருஷ்ணணும் கண்ணணும் ஓரளவு நன்றாகவே பேச ஆரம்பித்திருக்க லஷ்மி மதுரா பற்றி கூற வேண்டியதேயில்லை..அனைவருமாய் தங்களுக்குள் கூறி விடைபெற ரகு லேசான தலைசைப்போடு கிருஷ்ணணிடம் நிறுத்திக் கொண்டான்..
வீட்டிற்கு சென்று உடைமாற்றி படுக்க வந்தவன் தன் நண்பர்கள் அனுப்பியிருந்த தங்களின் புகைப்படத்தையே இமைக்காமல் பார்த்திருந்தான்..அவனின் 25 வருட காதலை மொத்தமாய் களவாடிச் சென்றவள்..அவனின் ஒட்டுமொத்த காதலும் காதல் செய்யும் அழகிய காதலி ஆன்னும் சில நாட்களில் அவன் மனைவியாகப் போகிறாள்..அவனை பார்க்கும் போதான அவளின் வெட்க பார்வை ஒன்று போதும் அவனின் ஜென்மம் ஈடேற…அந்த புகைப்படத்தை அவளுக்கு அனுப்பிவிட்டு பதிலுக்காக காத்திருக்க அடுத்த நொடி அவளிடமிருந்து பதில் வந்தது..
ஹேப்பியஸ்ட் மொமெண்ட் நந்தா..வீ மேட் இட்..ரியலி ஹேப்பி..லவ் யூ சோ மச்ச்ச்ச்ச்..என இரு ஸ்மைலி அனுப்பியிருந்தாள்..
மனம் கொள்ளா மகிழ்ச்சி என்பார்களே ரகு அதன் அர்த்தத்தை அன்று உணர்ந்தான்..
தொடரும்
{kunena_discuss:1167}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.