(Reading time: 15 - 29 minutes)

அவனின் அம்மாவின் இறப்பிற்கு பின் அவனின் அன்னையின் மீதான அதிகப்படியான அன்பினை அவன் தமிழ் பெண்களிடமே தேடமுடியும் என உணர்ந்து தமிழ்நாட்டில் பிறந்துவளர்ந்த பெண்ணை மனைவியாக அடைவதையே இலட்ச்சியமாக கொண்டு வாழ்பவன்

எனவே ஜிம்மில் அறிமுகமான ஆதித்துடன் நடப்பை ஏர்படுத்திகொண்ட சிம்மன் அவன் தமிழ்நாடு திரும்பும் போது அவனிடம் வைத்த கோரிக்கை தனக்கு தமிழ் பெண்ணை மணமுடிக உதவுமாறு கேட்டுகொண்டான்.

ஆதித் அவனின் மொபைலில் இருந்த வர்ஷாவின் போட்டோஸ் மற்றும் அவளின் குவாளிபிகேசனை கூறி அவள் அப்ராட் சென்று வேலை பார்க்க விரும்புவதை கூறி அவளின் ரெஸ்யூமையும் சென்ட் செய்தவன் அவளுக்கு ஏற்கனவே காம்பஸ் இன்டர்வியூவில் தேர்வாகியிருந்த கம்பெனியின் டையப் கம்பெனி என்று கூறி அவளுக்கு வேளைக்கு ஆபர் தருவதாக அணுகச் சொன்னான் ஆதித் .மேலும் தன்னை தெரிந்ததாக அவளிடம் காட்டிக்கொள்ளகூடாது என்றும் தற்சயலாக அவளை சந்திப்பதுபோல் சந்தித்து அவளின் அன்பிற்கு பாத்திரமானவனாக மாறி அவளை கல்யாணம் செய்துகொள்வது அவன் சமத்து என்று கூறி தொடர்பை துண்டித்தான் ஆதித் .

ஆதித்துக்கு தெரியும் சிம்மன் வெஸ்டர்ன் கலாச்சரத்தின்படி வளர்ந்திருந்தாலும் அவனின் அம்மாவின் வளர்ப்பு அவனை அவர் இறந்ததுக்குபின்னும் தடம் புரளாமல் நல்லவனாக இருக்கவைதிருப்பதை பார்த்தவன் தன்னை விட வர்ஷாவிற்கு அவன் பொருத்தமானவன் என்றும் சிம்மனின் அழகும் ஆளுமையும் கட்டாயம் தன்னை மறந்து அவளை அவனுடன் இனைய வைக்கும் என்ற நம்பிக்கை கொடுத்தது .

மேலும் சிம்மவிஷ்ணுவிற்கு அவளின் புகைபடத்தை பார்த்ததுமே அவளை பிடித்துவிட்டது என்பதை அவனின் வார்த்தைகள் மூலம் தெரிந்துகொண்டான் மேலும் அவளின் குணா இயல்பை தான் கூறியதுமே அவள் மேல் நல்ல அபிப்ராயமும் என்னால் காயப்பட்டவள் என்றமுறையில் அவளின் துயர்துடைக்க அவனின் ஆர்வம் உந்துவதையும் அவனின் பேச்சிலிருந்து உணர்ந்து கொண்ட ஆதித் கண்டிப்பாக சிம்மன் அவளின் மனதில் இடம் பிடித்துவிடுவான் என்ற நம்பிக்கை உண்டானது அது மிகுந்த நிம்மதியை கொடுத்தது ஆதித்துக்கு

நீண்டநேரத்திற்குபின் கடற்கரையில் இருந்து அவனின் மன வெம்மையை குறைதுகொண்டவன் தனது காரை வந்தடைதான்.

காரில் ஏறியதும் அழகுநிலாவை காரில் இருந்து வீட்டில் இறக்கிவிடும் போது அவள் முகத்தில் இருந்த கலக்கத்தை ஒருநிமிடம் நின்ruறுபார்த்தவனுக்கு அப்பொழுது அவளை ஆறுதல் படுத்தும் மனநிலை இல்லாமல் வந்துவிட்டதை இப்பொழுது நினைத்த ஆதித்துக்கு வருத்தமாக இருந்தது

ஏன் பேபி நான் உன்னை முதலிலேயே சந்திக்காமல் போனேன் அப்படி சந்தித்திருந்தால் வர்சாவின் ஆர்வமான பார்வையில் சலனம் ஆகி அவளிடம் காதலை கூறி அதன் பின் அவளை ஒதுக்கிய குற்றவுணர்வுக்கு ஆளாகாமல் இருந்திருப்பேனே என்று தனக்குள்ளேயே புலம்பியபடி வந்தவனின் கண்களின் வழியில் இருந்த பார் தென்பட்டது

இன்று தனக்கிருகும் மனநிலையில் அதை சிறிது அருந்தி தன்னை மறந்தால் என்ன என்ற எண்ணம் உருவானது அவனின் கார் அந்த பாரின் வாசலில் சென்று நின்றது .

என்றுமே அளவாக அருந்தும் அவன் இன்று கொஞ்சம் அதிகமாகவே அருந்திவிட்டான் இருந்தாலும் தள்ளாட்டம் இல்லாமல் தெளிவாகவே எழுந்து காரினை எடுத்து கொண்டு அவனின் பங்களாவை நோக்கி விரைந்தான்

வர்ஷாவின் வீட்டில் அவளின் அப்பா கூறிய செய்தி அவளுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது .என்ன வர்ஷா அப்பா சொல்றேன்ல பதிலே சொல்லாமல் இருக்க என்று கேட்டார் அவளின் தந்தை .

டாட் நீங்க என்னிடம் அந்த மினிஸ்டர் மகன் நரேனை கல்யாணம் செய்ய சம்மதமா என்று கேட்டகவில்லை .அவங்க சம்பந்தம் பேசவந்தாங்க நான் சரின்னு சொல்லிட்டேன் அடுத்தமாசம் கல்யாணம் அப்படின்னு உங்க முடிவை சொல்றீங்க என்றால் என்ன அர்த்தம்.

அவள் அவ்வாறு சொல்லியதும் வர்ஷா, இது எவ்வளவு பெரிய ஆபர் தெரியுமா? என் மகள் அதிர்ஷ்டசாலி அதனால்தான் இவ்வளவு பெரிய இடத்தில் இருந்து என் பெண்ணை கேட்டுவந்திருகிரார்கள் என்று நானே சந்தோசத்தில் திக்குமுக்காடி போய் இருக்கிறேன் இந்த மாதிரி ஒரு வசதியான செல்வாக்கான குடும்ப சம்பந்தத்தை வேண்டாம் என்று சொல்ல நான் என்ன முட்டாளா? நீ அந்த ஆதித்தை விரும்புவதாக சொன்ன, அந்த ஆதித்ராஜ் இப்போ எல்லோரையும் திரும்பி பார்க்கவைக்கும் அளவு பெருசா வளர்ந்து வரும் பிஸ்னஸ்மேனைதான் என் மகள் கல்யாணம் செய்யவிரும்புகிறாள் என்று சம்மதம் கூறினேன் ஆனால் திடீர்னு அவனுக்கு வேற ஒரு பெண்ணுடன் கல்யாணம் முடிந்துவிட்டது .

அதுதான் அவன் உனக்கு இல்லன்னு ஆகிவிட்டதே எனவே இப்போ உனக்கு இவனை மணப்பதற்கு என்ன தடை? என்று கேட்டார்.

அவர் அவ்வாறு கூறியதும் அப்பா நானே நொந்து போயிருக்கிறேன் ஆதித்தை நான் மறக்க எனக்கு கொஞ்சம் அவகாசம் தேவை. அவனை நான் மறந்தபின் வேறு ஒரு கல்யாணம் செய்வதாக இருந்தாலும் இந்த நரேனை மட்டும் கட்டாயம் என் லைப் பார்ட்னராக நான் கட்டாயம் தேர்ந்தெடுக்க மாட்டேன். அவன் சரியான பொம்பளை பொறுக்கி எனக்கு அப்படி பட்டவன் வேண்டாம் என கூறினாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.