(Reading time: 15 - 29 minutes)

அவள் அவ்வாறு கூறியதும் வசதியான வீட்டு பசங்க கொஞ்சம் அப்படி இப்படி இருக்கத்தான் செய்வாங்க. இதையெல்லாம் பெருசா நெனச்சா இதேபோல் பெரிய இடத்தில் சம்பந்தம் செய்ய முடியுமா? நான் முடிவு செஞ்சுட்டேன்! அவன்தான் என் மாப்பிள்ளை என என்று கூறியவர் அவளின் மறுப்பை காதில் வாங்காமல் சென்றுவிட்டார்.

வர்ஷவிற்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. நான் இங்கு இருந்தால்தானே என்னை கண்ட பொறுக்கியும் கல்யாணம் செய்யச்சொல்லி கட்டயபடுத்துவீங்க நான் உடனே ஒருவேலையை தேர்ந்தெடுத்து உங்களை விட்டு வெளிநாட்டு போய்விட்டால் உங்களால் என்னசெய்யமுடியும் என்று நினைத்தவள் வேகமாக தனது அறைக்குள் சென்று கதவை அடைத்தவள் தனது மடிகணினியை எடுத்துவைத்து அவளை ஏற்கனவே செலக்ட் செய்திருந்த அந்த வெளிநாட்டு கம்பெனியில் மீண்டும் ஜாப் ஆபர் கேட்டு விண்ணப்பிக்க கணினியில் மெயிலை ஓபன் செய்தபோது அதில் அவளுக்கு ஒரு அமெரிக்கன் கம்பெனியில் இருந்து மெயில் வந்திருப்பதை பார்த்தவள் யோசனையுடன் அதை கிளிக் செய்தால் வேலை தேட நினைத்து மெயிலை ஓபன் செய்தவளுக்கு வேலையில் ஜாய்ன் செய்வதற்கு உத்தரவு வந்திருப்பதை பார்த்தவள், முதலில் இன்பமாய் அதிர்ந்தாள். அதன்பின் யோசனையாக தான் விண்ணப்பிக்காமலே எப்படி தனக்கு வேலையில் சேர சொல்லி கூப்பிடுகிறார்கள் என்று ஆராய்ந்து பார்த்தவளுக்கு அந்த கம்பெனி ஏற்கனவே தான் முன்பு செலக்ட் ஆகியிருந்த கம்பெனியின் டைஅப் கம்பெனி அது என்ற கூடுதல் தகவலையும் தற்போது தொடங்கப்பட்ட இந்த கம்பெனிக்கு பணியிடங்கள் காலியாக உள்ளதையும் அதற்கு திறமைமிகுந்தவர்களை தேர்ந்தெடுக்க பார்த்தபோதுதான் உங்களின் இண்டர்வியூ ரிப்போர்ட்டை பார்த்து அதில் திருப்தியுற்று உங்களுக்கு இந்த ஆபர் வழங்கபடுவதாகவும் வேலையில் சேர விருப்பம் இருந்தால் இரண்டுநாட்களுக்குள் ரிப்போர்ட் கொடுக்கும்படி அதில் குறிப்பிடபட்டு இருந்தது

பின் தனக்கு வேலை வழங்க முன் வந்த கம்பெனியை பற்றி அலசி ஆராய்ந்தவள் அது ஒரு நல்ல ஆபர் என்பதை உறுதிபடுத்தி கொண்டவள் உடனே தான் வேலையில் ஜாய்ன் பண்ணுவதாகவும் அதற்குரிய விண்ணப்பத்தை பூர்த்திசெய்து அதை அனுப்பிய மறுநிமிடம் அவளுக்கு அடுத்த பத்து நாட்களில் கிளம்புவதற்கான புரசீஜரை மேற்கொள்ள அனைத்து தகவல்களையும் அனுப்பியது அந்த கம்பெனி. அவ்வளவு துரிதமாக அவளுக்கு அந்த வேலைக்காக ஏற்பாடு செய்ததில் சிம்ம்விஷ்ணுவின் பங்கு இன்றியமயாததை வர்ஷா அறிந்திருக்க வாய்ப்பில்லை. அவள் அது தெய்வாதீனமாக தனக்கு கடவுள் கொடுத்த வேலை அது என்று மகிழச்சியடைந்தாள். .

ஆதித் கதவை திறந்ததும் சோபாவில் அமர்ந்து டிவி பார்த்துகொண்டிருந்த அழகுநிலா, மனதினுள் அப்பாடா... வந்துட்டார் என்று நிம்மதியுடன் தான் பார்த்துகொண்டிருந்த டிவியை அணைத்துவிட்டு நான் உங்களுக்கு குடிக்க பால் எடுத்துகொண்டு வரவா என்று கேட்டாள்.

அவன் மணியை பார்த்து நைட் 12 க்கு மேலே ஆகிடுச்சு தூங்காம எதுக்கு இன்னும் எனக்காக உட்கார்ந்துகொண்டு இருகிறாய் என்று கூறியவனின் முகத்தை பார்த்தவள் அதிர்ந்தாள்

அவன் கண் இரண்டும் கோவைபழம் போல் போதையால் சிவந்திருந்தது பேசிக்கொண்டே தனது அருகில் வந்தவனின் வாயில் இருந்து வந்த ஆல்ககாலின் மனம் வேறு அவன குடித்திருகிறான் என்பதை உறுதிப்படுத்தியது.

எனவே அவள் கோபத்துடன் நீங்க குடிச்சிருக்கீங்க இந்த பழக்கம் எல்லாம் உங்ககிட்ட இருக்கும் என்று நான் நினைத்துகூட பார்த்ததில்லை, ஏன் அதித்... இந்த பழக்கம் உங்க உடல்நலத்தை கெடுத்துவிடும், இனிமேல் இதுபோல் குடிக்க மாட்டேன் என்று எனக்கு சத்தியம் செய்ங்க என்று அவனின் முன் கை நீட்டினாள் அழகுநிலா .

அவளின் உரிமையாக அந்த அதட்டலை பார்த்ததும் ஆதித் போதையில் நிதானம் இழந்தான் அவனின் கண்கள் கண்ணியமில்லாமல் அவளின் மீது அலைபாய்ந்தது அதில் ஈர்க்கப்பட்டவன் அவளின் நீட்டிய கைபிடித்து வெடுகென்று இழுத்தான்

அவனில் அந்த செயலில் அதிர்ந்து அவனின்மீது இழுத்தவேகத்தில் மோதியவளை தன்னுடன் சேர்த்து அணைத்தபடி ஷோபாவில் விழுந்தவன் வாடி என் பொண்டாட்டி, ஓகே இனி எனக்கு அந்த போதை வேண்டாம் ஆனா அதுக்கு பதிலா நீ எனக்கு போதையாக மாறனும் டீல் ஓகே வா என்று கேட்டபடி அவளை தன்னுடன் சேர்த்து இறுக்கினான்.

அவனின் வார்த்தையை கிரகித்தவளின் இதயம் வேகமாக துடித்தது. ஆதித் அவளிடம் கணவன் என்ற உரிமையை நிலைநாட்ட விரும்புவது அவளுக்கு புரிந்தது. அழகி அவனை உயிராய் நேசிப்பதுபோல் அவனும் தன மீது காதல்கொண்டு அதன்பின் இணைவதைதான் அவள் விரும்பினால் .

மேலும் இன்று இருந்த அவளின் குழப்பமான மனநிலையில் அவனின் இந்த நெருக்கத்தை அவளால் ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை. மறுத்தால் அவன் மறுபடியும் குடிப்பதை தொடர்ந்துவிடுவானோ என்ற பயத்தில் அவனை விளக்கவும் அவளால் இயலவில்லை.

மறுபில்லாத அவளின் நிலையை கண்டு மதுபோதையையும் மீறி தன மனைவியின் மீது உண்டான போதையில் அவளை கையில் அள்ளிக்கொண்டு கட்டிலை அடைந்தான்.பின் அவளையும் அடைந்தான் .

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.