ஆதிகாலையில் புரண்டு படுக்க முயன்ற ஆதித்தின் நெஞ்சினில் ஒன்றி அவனை கட்டிக்கொண்டு தூங்கிகொண்டிருந்த அகுநிலாவை உணர்ந்த ஆதித்தின் தூக்கம் சொல்லாமல் கொள்ளாமல் விடை பெற்றது, இரவில் அவளுடன் தான் கூடுவது போன்று கனவு கண்டது கனவல்ல நிஜம் என்பதனை அவளுடன் அவன் படுத்திருந்த நிலை உறுதிபடுத்தியது .
அந்த நிஜம் அவனுக்கு நெஞ்சினில் எல்லையில்லா சந்தோசத்தை கொடுத்தது என் பேபி என்று அவளின் நெற்றியில் அழுத்தி முத்தமிட்டான் .
அதில் உறக்கம் கலைந்த அழகுநிலா தான் அவனை கட்டிக்கொண்டு தூங்குவதை உணர்ந்து வெட்கத்துடன் விலக முயன்றால் அவளை விலகவிடாமல் பிடித்துகொண்ட ஆதித் தாங்க்ஸ் பேபி என்றான் .
அவன் எதற்கு நன்றி கூறுகிறான் என்பதனை உணர்ந்துகொண்ட அவளுக்கு மேலும் முகம் சிவந்தது எனினும் இரவு அவன் குடித்துவிட்டு வந்து அவளுடன் கூடியது அவளுக்கு வருத்தத்தை கொடுத்தது.
அவளின் முகத்தையே பார்த்துகொண்டிருந்த ஆதித்துக்கு முதலில் வெட்கத்தில் சிவந்த அவளின் முகம் பின் எதையோ யோசித்து வாடியதை கண்டவன் சாரி... பேபி என்றான் .
அவன் சொன்ன தாங்க்ஸ் ,சாரிக்கும் எந்த பதிலையும் சொல்லாமல் அவனை விட்டு விலகி தன்னை போர்வைக்குள் சுற்றியபடி எழுந்தவள் சிதறிக்கிடந்த தனது உடைகளை எடுத்துகொண்டு ரெஸ்ட்ரூமினுள் சென்று மறைந்தாள்.
அழகுநிலா அவனிடம் முகம் கொடுத்து பேச வெட்கம் கொண்டுதான் சென்று விட்டதாக நினைத்தான் ஆனால் பாவை அவளுக்கோ அவன் போதையில் தன்னை தன மனநிலை அறியாமல் ஆட்கொண்டது சற்று கோபத்தை கொடுத்தது
ஆனால் அவன் தன்னிடம் சாரி கேட்டதுமே அவள் கோபம் பரந்தோடிப் போனது ஆனால் அவனின் மீது வருத்தம் மனதின் ஓரம் இருந்தது, ஆனால் அவன் அவளை எடுத்துகொண்டது அவளுக்கு அவனின் மீது மேலும் உரிமையை அதிகப்படுத்தியது. அவளும் அவனும் ஒன்றாகிவிட்டதுபோன்ற ஒரு பிரமை அவளுக்கு உண்டானது.
அவள் சென்றதும் அவன் தனது மொபைலை எடுத்து கால் செய்து அழகுநிலாவிற்கு சர்ப்ரைஸ் கொடுப்பதற்கான வேலையை செய்த திருப்தியில் புன்னகையுடன் எழுந்தவன் அவனின் அம்மாவை ஹாஸ்பிடலில் இருந்து தனது வீட்டிற்கு கூட்டிக்கொண்டு போவதற்கு கிளம்ப நினைத்து எழும்போது அழகுநிலா தன்னை தூய்மைப் படுத்திகொண்டு தலையில் ஈரம் சொட்ட நைட்டியில் வந்தாள்.
அவளை பார்த்தவனுக்கு இரவில் போதையில் அரங்கேறிய சங்கமம் மறுபடியும் இப்பொழுது வேண்டும் என்ற தாபம் எழுந்தது. ஆனால் அவளை தொட்டால் ஹாஸ்பிடல் போவதில் தாமதமாகிவிடும் என்ற நிதர்சனத்தில் பெரு மூச்சு உண்டானது.
எனவே ரசனையுடன் அவளை பார்த்தபடி விசில் அடித்தான் அவனை பக்கா ஜென்டில்மேனாக பார்த்தவள் இப்பொழுது லோக்கல் ரவ்டிமாதிரி விசில் அடித்தபடி மேய்ச்சல் பார்வையை பாத்தது ஆச்சரியமும் அவனின் பார்வையாலேயே கூசி சிலிர்த்த அவள் வெட்கமும் கொண்டாள்.
அவளின் பாவனையில் மேலும் அவளின் பால் ஈர்க்கப்பட்ட ஆதித் ஏய் பொண்டாட்டி அசத்துரடீ.... உன் கிட்டவந்தேனா அப்படியே பச்சக்குன்னு உன் கூட ஒட்டிகுவேன் அப்புறம் ஹாஸ்பிடல் போக டைம் ஆகிடும். சோ! போய்ட்டுவந்து உன்ன வச்சுக்கிறேன் என்று அவளை பார்த்துகூறிகொண்டே பாத்ரூம் நோக்கிச் சென்றான் .
அவன் அவ்வாருகூறியதும் அவனை பார்த்து வாயை சுளித்து வக்கனைத்த்வள் வெளியில் பார்க்க டீசண்டா ஜென்டில்மேன் போல இருந்துகிட்டு இப்போ பாரு பார்வையை லோக்கல் ரவ்டிமாதிரி என்று முனுமுனுத்தாள்.
அவள் கூறியதும் ஆமாம் நானும் ரவுடிதான் அதுக்கு இப்போ என்ன செய்யணும்கிற! பொண்டாட்டிகிட்ட ரொமான்ஸ் ரவ்டியாகத்தான் நடந்துக்கிடணும் .உன்கிட்ட பொறுக்கித்தனம் பண்ண எனக்கு ரொம்ப புடுச்சிருக்கு பேபி என்று கூறியவன் ஒற்றை புருவம் தூக்கி சிரித்த படி கூறியவன் கண்ணடித்துவிட்டு கிளம்பச் சென்றான் .
----தொடரும்----
{kunena_discuss:1144}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.