(Reading time: 21 - 42 minutes)

தொடர்கதை - ஒளிதருமோ என் நிலவு...? - 24 - தீபாஸ்

oten

ழ்குநிலாவை ஜானகியிருந்த வீட்டில் இறக்கிவிட்டுவிட்டு ஹாஸ்பிடலுக்கு வந்த ஆதித் அங்கு டிஸ்சார்ஜ் ஆக ஆயத்தமாக இருந்த ஜானகியிடம் வந்தான் .அவன் வந்ததும் அவனின் பின்னால் அழகுநிலா வருகிறாளா! என்று எட்டி பார்த்த ஜானகி, எங்கப்பா! என் மருமகள் என்று கேட்டார்

அம்மா அவளை வீட்டில் உங்கள் ரூமை வேலாம்மாளுடன் இருந்து ரெடிபண்ணச்சொல்லி விட்டுவிட்டு வந்திருக்கிறேன் என்றான்.

அவன் அவ்வாறு கூறியதும் ஜானகி, ரூம் கிளீன்செய்ய வேலம்மாள் மட்டும் போதும் அழகிக்கு அங்க என்ன வேலை ஆதித்? என்று கேட்டாள்

அவள் அவ்வாருகூறியதும் உங்க ரூமில் ஹாஸ்பிடல்காட் புதுசா வங்கி போட்டிருகிறேன்மா அதை உங்க ரூமில் வேலையாட்களை வைத்து செட்பன்னிகிட்டு இருக்கா.. என்று கூறினான் ஆதித்

பின்பு ஆம்புலன்சின் உதவியுடன் ஜானகி மற்றம் வேலாயுதத்தையும் சுமந்துகொண்டு ஒரு நர்சுடன் ஆம்புலன்ஸ் வீட்டை அடைந்தது.

வாசலுக்கு வந்த அழகுநிலா அத்தைக்கு ஆரத்தி எடுத்து வீட்டிற்குள் அழைத்துச்சென்றாள் ஹாஸ்பிடல் அட்மாஸ்பியரை தனது அறையில் எதிர்பார்த்திருந்த ஜானகிக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது.

ஜானகிக்கு படுக்கை விரிப்பு முதற்கொண்டு அந்த அறையின் ஜன்னல் டோர் மற்றும் டேபிள் முதலியவற்றில் வீற்றிருந்த புதிய வால்ஹங்கர் மற்றும் அறையில் அவளின் படுக்கையின் அருகில் உயரமான டீ ட்ரே அதில் வைத்திருந்த ஸ்டாண்டில் மொபைல் மற்றும் டிவி ,ஏ.சி ஆகியவைகளின் ரிமோட் மற்றும் தண்ணீர் ஜாடி மற்றும் கட்டிலின் கீழே கால் வைத்து இறங்குவதற்கு போடபட்டிருந்த அழகு வேலைபாட்டுடன் இருந்த குட்டி ஸ்டூல் மற்றும் இதமான பெர்பியூம் மணம் பெட்ரூமில் புதிதாக இடம்பெற்றிருந்த டிவி அவளது ஹாஸ்பிடல்காட் பக்கத்தில் எபோழுதும் இருக்கும் மரக்கட்டிலின் விரிப்பு மற்றும் கர்டன் அனைத்தும் பேபி பிங் கலரில் மேலும் அந்த ரூமின் வெளிவராண்டாவில் எப்பொழுதும் இருக்கும் டிவி ஷோபா செட்டுடன் புதிதாக ஜானகியை கவனித்துக்கொள்ள வந்திருக்கும் நர்சிற்கு டேபிளுடன் கூடிய வசதியாக உட்காருவதற்காக ஒரு சேருடன் ரம்மியமாக இருந்தது .

அம்மாற்றத்தை பார்த்த ஜானகி தனக்காக யோசித்து யோசித்து ரூமை மாற்றி அமைத்த அழ்குநிலாவிடம் கூறினாள், நான் வீட்டினை ஹாஸ்பிடல் காட் போட்டு மருத்துவமனைபோல மாற்றி இருப்பார்கள் என்று பயந்துகொண்டே வந்தேன் ஆனால் நீ என் ரூமை சொர்க்கம்போல ரெடிபன்னியிருகிறாயே ரொம்ப வேலையோ? என்று கேட்டாள்.

உடனே அழகுநிலா இதிலென்ன பெரிய கஷ்ட்டம் நான் மட்டுமா தனியா இதெல்லாம் செய்தேன் கூட இங்க வேலை பார்ப்பவர்களின் உதவியுடன் செய்தேன் எனச் சொல்ல, அத்தைக்காக இதுகூட நான் செய்யமாட்டேனா என்று கண் சிமிட்டி ஜானகியிடம் பதில் கூறினாள்.

அங்கிருந்த ஆதித்க்கு தனது அம்மாவிடம் கண்சிமிட்டி கொஞ்சி கொஞ்சி பேசிய அழ்குநிலாவினை பார்த்தவன் மனதினுள் என்கிட்ட இப்படி கொஞ்சி பேச மாட்டாளா! என்று நான் ஏங்கிபோய் இருக்கிறேன் இவ என்னடான என் அம்மாவிடம் மட்டும் கொஞ்சிட்டிருக்கா என்று அவளையே பார்த்துகொண்டிருந்தான்.

அப்பொழுது ஜானகி அழ்குநிலாவிடம் ஆதித்தை பார் நாம ரெண்டுபேரும் குளோசா இருக்கிறதை பார்த்து அவனுக்கு பொறாமையா இருக்கு என்று சரியாக அவனின் மனவோட்டத்தை கணித்து கூறினாள்.

உடனே கெத்தாக முகத்தை வைத்துகொண்ட ஆதித் அப்படியெல்லாம் இல்லவே... இல்லை...பா என்று பெருமூச்சு விட்டன்.

அதற்கு அழ்குநிலாவும் ஜானகியும் சேர்ந்தவாறு நம்...பிட்டோம் என்று கோரசாக சொன்னார்கள். .

அதனை பார்த்துகொண்டு அங்கு நின்றுகொண்டிருந்த வேலாயுதம், என் பையன் பாவம் இரண்டுபேரும் சேர்ந்துகிட்டு அவனை கலாய்ச்சா அவனுந்தான் என்ன பண்ணுவான் என்றார். அவரின் வார்த்தைகளை கேட்ட ஆதித் நீண்ட வருடத்திற்குபிறகு இயல்பாக தன்னிடம் பேசும் அவரை பார்த்து புன்னகைத்தான்.

ஜானகிக்கு தனது உடல் நிலை வீட்டிற்கு வந்ததுமே பாதி தேறிவிட்டதுபோல் ஒரு உணர்வு ஏற்பட்டது. அத்துடன் அழகுநிலா அவளின் அருகில் இருந்து அவளை பார்த்து பார்த்து கவனித்துகொண்டதோடு மட்டுமல்லாது அவளின் மனம் அறிந்து அவளுக்கு நல்ல தோழியாக நடந்துகொண்டது ஜானகியின் மனம் சந்தோஷமடைந்து முகத்திலும் பூரிப்பை கொண்டுவந்தது.

வேலாயுதமும் ஆதித்தும் ஜானகியின் உடல்நிலை மற்றும் அவசரகல்யாணம் ஆகியவற்றால் தொடர்ந்து கவனிக்காமல் விட்ட தங்களது தொழில்களில் தேங்கிய வேலைகள் நிறைய இருந்ததால் வந்ததும் அழகுநிலாவிடம் ஜானகியை கவனித்துகொள்ளும் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு வெளியேறினர்.

ரவு9:30க்கு நர்சிடம் இரவு ஜானகிக்கு எதுவும் தொந்தரவு வந்தால் எந்த மாத்திரைகளை கொடுக்கவேண்டும் என்ற டீடெய்ல்ஸ் கேட்டுக்கொண்ட அழகுநிலா அவரையும் வேலம்மளையும் வீட்டிற்கு அனுப்பிவிட்டு ஜானகியுடன் அவரது அறையில் இருந்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.