(Reading time: 21 - 42 minutes)

அன்று இரவு பத்துமணிக்கு வீட்டுக்கு வந்த ஆதித்தின் கண்கள் அழகுநிலாவை தேடியது தனது அம்மாவின் அறையின் கண்ணாடி ஜன்னல் வழியாக உள்ளே தெரிந்த வெளிச்சத்தில் அங்கு விரைந்து சென்ற ஆதித், ஜானகி அவள் பெட்டில் சாய்ந்தபடி உட்கார்ந்துகொண்டு சிரித்தமுகத்துடன் அழகுநிலாவுடன் பேசிக்கொண்டு பெட்டில் அமர்ந்திருந்த வேலாயுதத்திற்கு அவரின் முன் சிறிய டி ட்ரேயில் தட்டை போட்டு இரவு உணவு பரிமாரிக்கொண்டு பேசியபடி இருந்ததை கண்டவன் மனம் சிறகைபோல் சந்தோசத்தில் பறந்தது.

தானும் மற்ற குடும்பம்போல் அப்பா அம்மா உடன் ஒரேடேபிளில் சந்தோசமாக உட்கார்ந்து பேசி சிரித்து சாப்பிடகூட முடியாதவாறு அமைந்திருந்த தனது வாழ்க்கையை மந்திரகோலால் மாற்றிவிட்ட தேவதை பெண்ணாக அழகுநிலாவை அவன் கண்டான்.

கதவு திறந்து உள்ளேவந்த ஆதித் தனது மனைவியை பார்த்தபடி பிரீஸ் ஆகிநின்ற ஆதித்தை பார்த்த ஜானகி, டேய் ஆதித்..... இங்க நானும் உன் அப்பாவும் இருக்கிறோம் உன் ரூமில் என் மருமகளை கூட்டிகொண்டுபோய் மொரச்சு மொரச்சு பாரு என்றவர், அழகி மாமா சாப்பிட்டு முடிகபோறார் நீ போய் ஆதித்துக்கு டைனிங் டேபிளில் சாப்பாடு எடுத்துவைமா என்றார்.

ஆதித் வருவதை கவனிக்காமல் திரும்பிநின்றபடி பரிமாறிகொண்டிருந்த அழகி, ஜானகி ஆதித் என்று கூறியதும் வந்துட்டார் என்று ஆவளுடன் திரும்பி பார்த்தவள் அவன் அவளையே பாத்தபடி நின்ருகொண்டிருந்தததில் முகம் சிவந்து அத்தை மாமா இருக்கும்போது வெட்கமில்லாமல் என்னையே பார்கிரதைப்பார் என்று மனதினுள் நினைத்தவள் ஜானகியின் கிண்டலில் மேலும் சிவந்தாள்

ஜானகி அவனை டேபிளில் சாப்பாடு சாப்பிடச்சொன்னதை கேட்டதும் அத்தை மாமாவை மட்டும் டேபிளில் சாப்பிடவேண்டாம் என்னுடன் பேசிக்கொண்டே சாப்பிடட்டும் என்று எடுத்துவந்து பரிமாரச்சொன்னதுபோல்

உங்க மகனுக்கும் சாப்பாட்டை இங்கேயே கொண்டுவந்து தருகிறேன் எல்லோரோடும் பேசிக்கொண்டே அவரும் சாப்பிடட்டும் என்றவள் என்னங்க இங்க உட்காருங்க நான் உங்களுக்கு சாப்பாடு தட்டில் வைத்து எடுத்துகொண்டு வருகிறேன் என்று கூறியவள் வெளியேறினாள்.

ம்..என்று அவளிடம் கூறியவன் உட்கார்ந்தபடி எப்படி இருகீங்கமா வீட்டிற்க்கு வந்ததும் என் மாம் பழையபடி ஹெல்தியாக ஆகிடீங்கபோல உங்க மருமக கூட சேர்ந்து ரொம்ப அரட்டயடிகாமல் ஒழுங்கா கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க என்று கூறிகொண்டிருகும்போது

அத்தை அவருக்கு நீங்க என்கூட குளோசா இருக்கிறது பொறாமையா இருக்கிறது அதனாலத்தான் ரெஸ்ட் எடுக்க உங்களை சொல்றமாதிரி நம்ம இரண்டுபேரையும் பிரிக்கப்பார்கிறார் என்ற சொலியபடி இந்தாங்க சாபிடுங்க என்று தட்டை அவனிடம் நீட்டினாள்.

அவள் நீட்டிய தட்டி வாங்கிகொண்ட ஆதித் அவளின் வார்த்தைகேட்டு சிரித்தபடி நீயும் அம்மாவும் சாப்டீங்களா என்று கேட்டான்.

அவன் கேட்டதும் ஜானகி கூறினாள், அழகி எனக்கு மாத்திரை சாப்பிட டயத்துக்கு சாப்பாட்டு எடுத்துகொண்டு வந்ததுமே நான் அவகிட்ட சொல்லிட்டேன் இந்த வீட்டு ஆம்பளைங்க சாப்பிட வந்துவிடுவார்கள் என்று காத்திருக்காதே, உன் மாமனாரும் உன்புருசனும் காலையில் வீட்டைவிட்டு கிளம்பிப்போனா எப்பொழுது வீட்டுக்கு வருவங்கனே சொல்லமுடியாது. அவங்களை எதிர்பார்த்து சாப்டாம இருந்தா உனக்கு அல்சர் வந்துடும் அதனாலே எனக்கு சாப்பாடு எடுத்துகொண்டுவரும்போதே உனக்கும் சாப்பாட்டை எடுத்துகொண்டுவந்துடு நாம ரெண்டுபேரும் சேர்ந்து சாபிடலாம் என்று சொல்லிவிட்டு அவளையும் சாப்பிட வைத்துவிட்டேன் என்றார்

ம்.. நீங்க சொல்றது சரிதான்மா என்றவனிடம் வேலாயுதம் ஆதித் அழகுநிலா வந்ததுகுபிறகுதான் உன் அம்மா முகத்தில் இத்தனை சந்தோசத்தை பார்கிறேன் நான் எத்தனைநாள் நாம குடும்பமா உட்கார்ந்ர்து பேசி சிரித்தபடி சாப்பிடனும் என்றுநினைத்து ஏங்கியிருகிறேன்தெரியுமா இது என் மருமகளால்தான் நிறைவேறியிருக்கு என்று பாசத்துடன் தனது மகனிடம் சொன்னவர் மனைவியின் முகம் பார்த்து பேசிமுடித்தார்.

உள்ளேவரும்போது தான் நினைத்ததுபோல தனது தந்தையும் நினைத்திருக்கிறார் என்பதனை அவரின் பேச்சிலிருந்தே உணர்ந்தவன் காதலுடன் அழகியை பார்த்தபடியே நீங்க சொல்றதுசரிதான்பா என்றவன் அழ்குநிலவை வம்பிழுக்கும் நோக்கத்துடன் வந்த இரண்டு நாட்களிலேயே என் அம்மாவையும் அப்பாவையும் உன் கைக்குள்ள போட்டுகிட்டபோல என்று குறும்புடன் கேட்டான்

அவன் அவ்வாருகூறியதும், இவரபாருங்கத்த எப்படி சொல்றாரு! என்னை என்று சிணுங்கியபடி கூறியதும் அவர், ஏண்டா என் மருமகளை வம்பிழுகிற உன்னைமட்டும்தான் அவ கைக்குள்ள போட்டுகிடனுமாக்கும் இவ்வளவு பொறாமை உனக்கு ஆகாது ஆதித், என்று அழ்குநிலவிற்கு சப்போர்ட் செய்வதுபோல ஜானகியும் அவளை வம்பிழுத்தாள்.

போங்கத்த நீங்களும் அவங்க கூடசேர்ந்துகிட்டு என்ன வம்பிளுகிறீங்க, அவங்க காலையில் போய்டு நைட்டுதான் வருவாங்க பகல் முழுவதுவும் நான்தான் உங்க கூட இருக்கபோறேன் அதனால நீங்க என்கூட்டதான் கூட்டணி வ்ச்சுக்கிடனும் அப்படியில்லாம உங்க புள்ளகூட சேர்ந்து என்ன கலாய்சிங்க பிறகு இருக்கு, என்றவளிடம் வேலாயுதம் அவங்க கிடகுறாங்கமா நான் எப்பவும் உன்கட்ச்சிதான் என்றார் .

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.