“இரு விழியோ சிறகடிக்கும்
இரு விழியோ சிறகடிக்கும்
இமைகளிலோ வெடிவெடிக்கும்
இதயத்திலே ஒரு கனவு
உதயத்திலே வடம் பிடிக்கும்
காதல் நாள் தானே..
ஒரு பாறை மெல்ல மெழுகானதென்ன
உனை கண்ட வேலை உயிர் பூத்ததென்ன
மழையாய் விழுந்தாய்
மூக்குத்திப் போலே ஆடாத நெஞ்சம்
நீ பார்த்த தாலே தோடாச்சு நெஞ்சம்
புயலாய் ஆனாயே
சங்கில் ஓசைப் போலே உன்னில் தங்கிக் கொள்ள ஆசை
மின்னல் போல கண்ணில் உந்தன் பிம்பம் பூக்கும் ஆசை
உயிரோடு உயிர் பேச அடிக் காதல் தானே பாஷை
இது வரமா…”
அனைவருமாய் தயாராகி கோவிலை அடைய சாதாரண நாள் என்பதால் கூட்டம் இல்லாமல் இருந்தது..அவர்களுக்காக காத்திருந்த அர்ச்சகர் அவர்களை பார்த்ததும் பூஜையை தொடங்கினார்..கடவுளை மனமாற வேண்டிக் கொண்டவள் தன்னருகில் வேஷ்ட்டி சட்டையில் கம்பீரமாய் அமர்ந்திருப்பவனை அவ்வப்போது கடைகண் பார்வையால் தனக்குள் பதித்து கொண்டாள்..அடிக்கடி அவள் பார்வை தன்னை உரசிச் செல்வதை அவனும் உணர்ந்து கொண்டுதான் இருந்தான்..கொஞ்சம் கொஞ்சம் அவள் மனதில் தனக்கான இடம் அமைவது அவனுக்கு மகிழ்ச்சியை அளித்தது..
பூஜையை முடித்து மதிய உணவு அங்கேயே ஏற்பாடு செய்து அவர்கள் சாப்பிட்டு விட்டு அன்னதானத்திற்கும் ஏற்பாடு செய்திருந்தனர்..வீட்டிற்கு வரும்போது மணி மூன்றை எட்டியிருக்க பெரியவர்கள் சற்று ஓய்வெடுக்கச் செல்ல தமிழும் வெற்றியும் மண்டப அலங்கார சம்மந்தமாய் வெளியே சென்றிருக்க காவியாவை தான் பார்த்துக் கொள்வதாய் கூறி ராஜியை தூங்கச் செல்லுமாறு அனுப்பினாள் நிர்பயா..
“காவியா குட்டி இன்னைக்கு சித்திகூட விளையாடுவாங்களாம் ஓ.கே வா??”
“ஹே ஜாலி ஓ.கே நிபி சித்தி..என்ன விளையாடலாம்..ம்ம் நீ ஓடு நா உன்னை பிடிக்குறேன் ஓ.கே யா??”
ஓ.கே மை பேபி கேர்ள் ரெடி என்னை பிடி பாப்போம் என மெதுவாய் ஹாலைச் சுற்றி வர பிஞ்சு கால்களின் கொலுசொலி ரம்மியமாய் கேட்க அவளை சுற்றி வந்தாள் குட்டி தேவதை…சிறிது நேரத்தில் அவளுக்கு அது போரடித்து விட சென்று சோபாவில் அமர்ந்துவிட்டாள்..
“நிபி இந்த கேம் போரடிக்குது..”
“அச்சச்சோ ம்ம் என்ன பண்ணலாம்??”,என அவளை போலவே யோசிக்க,
“நாம ஹைட் அண்ட் சீக் விளையாடலாம்..நீ கண்ணை கட்டிகிட்டு என்னை பிடிக்க வா பாக்கலாம்..”
ம்ம் சரி ஓ.கே நா கண்ணை கட்டிக்குறேன் என தன் துப்பட்டாவை எடுத்து கண்ணை கட்டியவள் அவளை கைகளால் தேடியவாறே சுற்ற அவளிடம் மாட்டாமல் போக்கு காட்டிக் கொண்டிருந்தாள் சிறியவள்..ஏதேதோ பேசியவாறே தேடிக் கொண்டிருந்தவளுக்கு கொலுசு சத்தம் கேட்காதது உரைக்க சட்டென கண்கட்டை அவிழ்த்து காவியா என திரும்ப வாசலில் தமிழ் நின்று கொண்டிருந்தான்..அசடு வழிந்தவளாய் காவியா..என இழுக்க,
மாடிக்குச் சென்றுவிட்டதாய் விரலுயர்த்தி காட்டினான்..சற்றே அருகில் வந்தவன்,
“காவியாவோட சித்தப்பா அவளவிட நல்லாவே விளையாடுவான் உனக்கு ஓ.கேனா நா ரெடி”, என அவள் துப்பட்டாவை கையிலெடுக்க,சற்றே பின்னாடி பார்த்தவள் இதோ வரேன்ம்மா என கூற பின்னே திரும்பி அவன் பார்ப்பதற்குள் துப்பட்டாவை உருகிக் கொண்டு ஓடிவிட்டாள்..
போலீஸ்காரனையே ஏமாத்துறியா அடுத்த தடவை மாட்டும் போது இருக்கு என அவன் கூறியதை கேட்டவளுக்கு உதட்டோரமாய் புன்னகையெழுந்தது..அன்று மாலையும் சரோஜா அவளுக்கு அலங்காரம் பண்ணிவிட தமிழ் இருவரையும் கிண்டலடித்துக் கொண்டிருந்தான்..
இப்படியாய் அடுத்த இரண்டு நாட்களும் கழிய நிர்பயாவிற்கு மெஹந்தி இடுவதற்கு பார்லர் பெண்கள் வந்திருக்க அவள் கை கால்கள் முழுவதும் வடஇந்திய முறையிலேயே மெஹந்தி போட்டுவிட்டனர்..அனைவரும் பரபரப்பாய் திருமண வேலைகளில் ஈடுபட்டிருக்க தான் இப்படி அமர்ந்திருப்பது அவளுக்கு என்னவோ போல் இருந்தது..
இருந்தும் யாரும் எதுவும் கூறவில்லை..ராஜி அவ்வப்போது அவளுக்கு தண்ணீர் சாப்பாடு என கொண்டுவந்து கொடுத்தாள்..தமிழ் வழக்கமான அவன் பாணியில் அவளை சீண்டிக் கொண்டிருந்தான்..ஒவ்வொரு நிமிடமும் வாழ்க்கை மிக மிக அழகானதாய் மாறிக் கொண்டிருப்பதாய் உணர்ந்தாள்..நாளை திருமணம் என்ற நிலையில் ஓரளவு நெருங்கிய சொந்தங்கள் காலையிலேயே வீட்டிற்கு வந்து விட பேச்சும் அரட்டையுமாய் ஆளுக்கொரு வேலையில் ஈடுபட்டிருந்தனர்..
M | Tu | W | Th | F |
---|---|---|---|---|
TA 🎵 MM-1-OKU 🎵 |
RTT |
MM-2-AMN |
PT |
UKEKKP 🎵 MM-1-OKU 🎵 |
UKEKKP |
UANI |
CM |
UANI |
UKAN |
RTT 🎵 UKEKKP 🎵 |
MM-2-AMN |
UKAN |
TM 🎵 UKEKKP 🎵 |
* - Change in schedule / New series
If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.
super mamiyar....
semaiyana policekarar.....
ippadi oru policekaar.......