(Reading time: 17 - 34 minutes)

“அதுகுள்ள ரெடி ஆய்டியா குட் மார்னிங்”, என சாதாரணமாய் கூற,

“குட்மார்னிங்க..நா கீழே போறேன்..”

“இப்படியே வா???”

“ஏன் என்னாச்சு??”

கண்களை கசக்கிய வாறே எழுந்தமர்ந்தவன்,”என்னாச்சா??கல்யாணம் ஆன மறுநாள் சுடிதாரோட கீழே போன பக்கத்து வீட்டு கிழவி இருக்கே அது ஒண்ணு போதும் ஊரை கூட்டி தேரை இழுத்துரும்..எதாவாது பட்டு புடவையை எடுத்து கட்டிட்டு போ..”,என சோம்பல் முறிக்க,

பெண்ணவளோ தலையை சொரியாத குறையாய் நின்றாள்..அது வந்து…

“என்னாச்சு?”

“இல்ல வந்து எனக்கு புடவை கட்டத் தெரியாது.”,.என திக்கித் திணறி கூற கேட்டவனோ சிரித்தே விட்டான்..

“அடிப்பாவி அப்போ போனவாரம் புல்லா புடவை கட்டியிருந்தியே????”

“அது அம்மா கட்டிவிட்டாங்க..”

“சரியா போச்சு போ..சரி எதாவது புடவையை எடுத்துட்டு வா..நா கட்டிவிட்றேன்..”

“ஆஆஆங்ங்ங்ங்”

“ஏ ரசகுல்லா கண்ணை உருட்டாத நா வேணா கண்ணை மூடிட்டே கட்டிவிட்றேன் எடுத்துட்டு வா..”,என கூற என்ன செய்வதென தெரியாமல் அலமாரியை துழாவினாள்..

“அய்யோ இதெல்லாம் முதல்லயே யோசிச்சு அம்மாகிட்ட கத்துருக்க வேண்டாம்..எனக்கு அறிவேயில்ல..என்ன பண்றது இப்போ..”, என அர்ச்சனை செய்தவாறே ஒரு புடவையை கையிலெடுக்க அதற்குள் அவன்,

“எடுத்துட்டியா எவ்ளோ நேரம்”,என விழி மூடி நிற்க மெதுவாய் அவன் கைப்பிடித்து புடவையை அவன் கையில் கொடுத்தாள்..புடவையை விரித்து தடவிப் பார்த்து சரியாய் எடுத்தவன் அவளிடம் கொடுத்து அணிய சொன்னான்..கொசுவ மடிப்பு வைத்து அவளிடம் கொடுத்து முந்தானையை சிங்கிள் ப்லீட்டாக விட்டு பின் செய்து விட்டு கண் திறந்தான்..பெண்ணவளோ மொத்தமாய் உருகிப் போயிருந்தாள்..அவள் முன் முழங்காலிட்டு அமர்ந்தவன் கீழ்மடிப்பை சரிசெய்துவிட பொறுக்கமாட்டாமல் அவனையே கேட்டாள்..

“எப்படி நீங்க இவ்ளோ நல்லா…”,எனும்போதே எழுந்தவன் அவளை கண்ணாடி முன் நிறுத்தி அவள்பின் நின்று,

“அக்சுவலா ஸ்கூல் காலேஜ்ல என்சிசி கேம்ப்லா போறப்போ கல்சுரல்ஸ்காக எங்க பசங்களுக்கு லேடி கெட்அப் போடுவோம்..அதுக்காக அம்மாகிட்ட கத்துகிட்டது..ரொம்ப வருஷம் ஆச்சு..நீ அம்மாகிட்ட போய் சரியா கட்டிக்கோ..ம்ம்..அப்பறம் நாதான் கட்டிவிட்டேன்னு போய் சொல்லிடாத தலையில் இடித்து திருப்பியவன் நெற்றியில் இதழ்பதித்து அனுப்பினான்..நீ போ நா ரெடி ஆய்ட்டு வரேன்..”,என்றவனுக்கு தலையசைத்து வெளியே சென்றாள்..

அவளைப் பார்த்த சரோஜாவும் ராஜியும் அர்த்தமுள்ள பார்வை பார்த்து சிரிக்க இன்னுமாய் முகம் சிவந்து போனது பெண்ணவளுக்கு..

“அத்தை பாத்தீங்களா உங்க மருமகப் பொண்ணு ஒரே நாள்ல புடவை கட்டிக்க படிச்சுட்டா??”,என ராஜி கூற,

“அண்ணிணிணி..”

அடடா ஒரு நாளுக்கே இவ்ளோ வெட்கமா ம்ம் ஆனாலும் அந்த போலீஸ்காரன் அடங்கி போற ஒரே ஆளு நீயாதான் இருப்ப போல..இதேபோல எப்பவுமே சந்தோஷமா இருங்க அதுபோதும் எங்களுக்கு என சரோஜா தன் இரு மகள்களையும் தன்னோடு சேர்த்துக் கொண்டார்..

தொடரும்

Episode 08

Episode 10

{kunena_discuss:1164}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.