(Reading time: 17 - 34 minutes)

அவளை பார்த்தவனுக்கோ மனம் வலித்தது..எத்தனை பயம் எத்தனை நடுக்கம் அவளிடத்தில் விரல் படாமல் அவள் கையிலிருந்து சொம்பை வாங்கியவன் அங்கிருந்த டேபிளில் வைக்க இன்னமும் அவளிருந்த இடத்தை விட்டு நகரவில்லை..

“நிரு…”

“ஆஆங்ங் சொல்லுங்க..”

“ஏன் இப்படி பயப்படுற நத்திங் டூ வொரி கம் டவுண்..மொதல்ல உக்காரு”, என கட்டிலை காட்ட,மறுப்பேதுமில்லாமல் அமர்ந்தாள்..சற்று தள்ளியே அமர்ந்தவன் மெதுவாய் அவளிடம்,

“எனக்காக ஒண்ணு பண்றியா??”

“சொல்லுங்க..”

“எதையும் போட்டு குழப்பிக்காம உன்னை நீயே கஷ்டப்படுத்திக்காம என் மடில தலைசாய்ச்சு நிம்மதியா தூங்குறியா??”

அவன் முடித்த அடுத்த நொடி கண்கள் விரிய அப்பட்டமான அதிர்ச்சியோடும் நிம்மதியோடும் அவனைப் பார்த்தாள்..

“ப்ப்பாபா எவ்ளோ பெரிய கண்ணு..நானே உள்ளே போய்டுவேன் போல இருக்கே..”

என்றவனிடம் அதற்குமேல் எதுவும் பேச முடியாமல் அவன் தோள் சாய்ந்து கதற ஆரம்பித்திருந்தாள்..நிச்சயமாய் இது அவளுக்கு தேவையென உணர்ந்தவன் மறுக்காமல் தன்னோடு சேர்த்துக் கொண்டான்..சில நிமிடங்களில் அவன் கண்களே லேசாய் சிவக்க ஆரம்பிக்க அதை கட்டுப்படுத்தியவன் அவளை நிமிர்த்தி,

“போதும் நிரு..ரொம்பவே அழுதாச்சு இனி நீ அழவே கூடாது அதுக்காகதான் இப்போ உனக்கு டைம் கொடுத்தது..நா இருக்கும்போது நீ எதை நினைச்சு இப்படி பயப்படுற..காலைலேயே உன் முகம் சரியில்ல..அம்மா அப்பாவ மிஸ் பண்றியோனு நினைச்சேன்..பட் இப்போ வர உன் முகம் ஏன் இப்படியிருக்கு..”

“செல்வா..”

“ம்ம் அப்பப்போ இப்படி கூப்டே சரி கட்டிருவியே சரி சொல்லு”, என தன் தோள் சாய்த்துக் கொண்டான்..

நீங்க நினைச்சது சரிதான் அப்பா அம்மாவ ரொம்பவே மிஸ் பண்ணேன்தான்..ஆனா நேரம் ஆக ஆக வேற மாதிரியான பயம் வந்துடுச்சு..கல்யாணத்துக்கு என் மனசு மாறினதுக்கு காரணமே நீங்க தான் ஆனா குடும்ப வாழ்க்கைக்கு நா இன்னும் மனசளவுல தயார் ஆகல..அதை யார்கிட்ட சொல்றதுநு தெரில..சொல்லவும் பிடிக்கலை..

ஈவ்னிங்ல இருந்தே இந்த அலங்காரம் இதெல்லாம் பாத்தவுடனே ரொம்ப கஷ்டமாய்டுச்சு..அம்மா புரிஞ்சுப்பாங்கநு நினைச்சா அவங்களும் ஒண்ணும் சொல்லாம பாலை கையில கொடுத்து அனுப்பிட்டாங்களா..அதான்..என்றுகூறி தலைநிமிர்த்தி அவனைப் பார்க்க..

ம்ம் புரியுது நிரு..பட் அம்மா என்கிட்ட உனக்காக நிறையவே பேசினாங்க அதுவும் போக இருக்குற ஒண்ணு ரெண்டு ரிலேட்டிவ்ஸ்க்கு எதுவும் தப்பா பட்றகூடாது..அதைவிட அப்பாவுக்கும் மாறனுக்குமே எதுவும் உறுத்திட கூடாதுல அதுக்காக தான் இதெல்லாம்…

மத்தபடி..ஐ வில் ப்ராமிஸ் யூ உன் விருப்பமில்லாம நம்ம ரூம்குள்ள உன் மேல புருஷனா நா எந்த உரிமையும் எடுத்துக்க மாட்டேன்..தைரியமா இரு சந்தோஷமா இரு..உன்னோட நல்ல ப்ரெண்டா அட்த சேம் டைம் அப்பப்போ கொஞ்சம் டீஸ் பண்ணிட்டு சமத்தா இருப்பேன்..ஓ.கே தான??போலீஸ்காரன் ம்மா சொன்ன பேச்சை காப்பாத்துவேன் நம்பலாம்,என தன்னை பார்த்தவனை கண்டு பேச நா எழாமல் இறுக்கமாய் அவனை கட்டிக் கொண்டாள்..

அதை எதிர்பாராதவனோ இன்னுமாய் அவளை தன்னோடு சேர்த்துக் கொண்டான்..சில நொடிகளில் தன் பிடியை தளர்த்தியவன் அவள் இன்னமும் அசையாமல் இருப்பதை கண்டு,

“ஹே ரசகுல்லா,இன்னுமும் இப்படியே இருந்தா லத்தி பிடிக்குற கை..முருங்கைக்காய் மாதிரி இருக்குற உன் எலும்பு உடைஞ்சுரும் பரவால்லையா??”,என காதில் கிசுகிசுக்க சட்டென விலகியவள் முகத்தை திருப்பியவாறே சுவரருகே போய் நிற்க,

“போ நிரு ட்ரெஸ் சேஞ்ச் பண்ணிட்டு வந்து படு காலைல லேட்டா எழுந்தா அதுக்கும் உன்னைதான் எல்லாரும் கிண்டல் பண்ணுவாங்க”,என்றவாறு தனக்கான உடையை கையில் எடுத்தான்.இரவு உடைக்கு மாறியவள் அவன் கூறியவாறே அவன் மடியில் தலைசாய்த்து உறங்கத் தொடங்கினாள்..கண்களில் வழிந்த நீர் அவன் கால் தொட அதை துடைத்தவாறே தன் மடியிலிருந்தவளை கணவனாய் தந்தையாய் நல்ல நண்பனாய் வாழ்வு முழுவதும் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றெண்ணியவாறே தட்டிக் கொடுத்தான்..

காலையில் அரைகுறையாய் விழித்தவள் எழ எத்தனிக்க ஏதோ கடினமாய் தோன்ற தன்னவனின் கரம் என்பதை உணர்ந்தவளுக்கு முகம் தானாய் சிவந்தது..இரவு முழுவதும் இப்படி அவன் கையணைப்பிலேயே தூங்கியிருக்கிறோம் என்பதை நினைத்தவளுக்கு அவனை எப்படி எதிர்கொள்ள போகிறோம் என வெட்கம் எழ மெதுவாய் அவன் கையை விலக்கியவள் எழுந்துகுளிக்கச் சென்றாள்..

குளித்து தன்னிடமிருந்த நல்ல சுடிதாராய் ஒன்றை எடுத்து அணிந்து வந்தவள் தலையை உலர வைத்து கீழே செல்ல எத்தனிக்க தமிழ் மெதுவாய் புரண்டு படுத்தான்..பக்கத்தில் தன்னவளை காணாமல் அறையில் பார்க்க

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.