(Reading time: 16 - 31 minutes)

தொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 10 - ஸ்ரீ

inbame vazhvagida vanthavane

இருளைப் பின்னிய குழலோ 

இருவிழிகள் நிலவின் நிழலோ 

பொன் உதடுகளின் சிறுவரியில் 

என் உயிரைப் புதைப்பாளோ 

ரவிவர்மன் தூரிகை எழுத்தோ - இல்லை 

சங்கில் ஊறிய கழுத்தோ 

அதில் ஒற்றை வேர்வைத் துளியாய் 

நான் உருண்டிட மாட்டேனோ 

 

பூமி கொண்ட பூவையெல்லாம் 

இரு பந்தாய் செய்தது யார் செயலோ 

சின்ன ஓவியச் சிற்றிடையோ 

அவள் சேலை கட்டிய சிறுபுயலோ 

என் பெண்பாவை கொண்ட பொன்கால்கள் - அவை 

மன்மதன் தோட்டத்து மரகதத் தூண்கள் 

செம்மீனா விண்மீனா செம்மீனா விண்மீனா 

செம்மீனா விண்மீனா செம்மீனா விண்மீனா

ன்றைய நாள் அழகாய் ஆரம்பிக்க தன் வழக்கமான கம்பீரத்துடன் கீழேயிறங்கி வந்தவனை கண்ணிமைக்காமல் பார்த்திருந்தாள் நிர்பயா..அழகிய லைட் எல்லோ நிற முழுக்கை சட்டையை நேர்த்தியாய் மடித்து விடப்பட்டிருக்க வேட்டியை ஒருபுறம் மடித்து பிடித்தவாறே வந்தவன் தன்னவளை கண்டு புன்னகைக்க சுயநினைவிற்கு வந்தவள் பதிலுக்குச் சிரித்தாள்..ட்ரெஸ் ஓ.கே வா என அவன் செய்கையில் கேட்க பதிலுக்கு கட்டை விரலை உயர்த்திச் சிரித்தாள்..

தன்னவளை ரசித்தவாறே உள்ளே சென்றவன் மாறனை கவனியாது அவன்மேல் முட்டிக் கொண்டான்..

“டேய் புதுமாப்ள கொஞ்சம் முன்னாடி பாத்து நட நானா இருக்குறதால பரவால்ல பெருசுங்க யாராவது வந்துருந்தா தாங்காதுடா தம்பி”,என தலை தட்டி அனுப்பினான்..புதுமண தம்பதிகளுக்கான விருந்து தயாராய் இருக்க நிர்பயாவையும் தமிழையும் அமர வைத்து உணவு பரிமாறப்பட்டது..அனைவருமாய் சுற்றி தங்களையே பார்த்திருக்க நிர்பயாவின் முகம் மேலும் மேலும் சிவந்து கொண்டேயிருந்தது..

“மாறா நீயும் ராஜியும் அவங்கள நம்ம நெல்லையப்பர் கோவிலுக்கு கூட்டிட்டு போய்ட்டு அர்ச்சனை பண்ணிட்டு வந்துருங்க..முதன்முதலா வெளில போறது கோவிலுக்கா இருக்கட்டும்.”,என சரோஜா கூற நால்வருமாய் கிளம்பினர்..

மாறனும் ராஜியும் குழந்தையோடு முன்னிருக்கையிலும் தமிழ் ஜோடி பின்னிருக்கையிலுமாய் அமர்ந்தனர்..போகும் வழியெங்கும் தன் சிறு வயது நியாபகங்களை தன்னவளோடு பகிர்ந்தவாறு பேசிக் கொண்டே வந்தான்..அனைத்திற்கும் ஒரே பதிலாய் உதட்டோர புன்னகையோடு சேர்ந்த தலையசைப்பே அவளீடமிருந்து வந்தது..

கோவிலையடைந்து அனைவருமாய் உள்ளே செல்ல கோபுரத்தை பார்த்தவளே வியந்து போனாள்..நெல்லையப்பர் காந்திமதி தாயாரோடு அருள்பாலிக்கும் அற்புத தலம் திருநெல்வேலியின் மைய பகுதியில் ப்ரம்மாண்டமாய் அமைந்துள்ளது நெல்லையப்பர் கோவில்..அதன் கோபுரங்களும் பிரகாரங்களும் அந்த காலத்தின் கட்டிட கலையின் ப்ரம்மாண்டத்தை பறைசாற்றுவதாய் இருந்தது..

inbame vazhvagida vanthavane

inbame vazhvagida vanthavane

மனமுருக ஈசனையும் தாயாரையும் வேண்டி நின்றவளை தோள்தொட்டு நினைவிற்கு கொண்டு வந்தவன் கண்களாலேயே தைரியம்கூறி அழைத்துச் சென்றான்..கோவிலைச் சுற்றி எத்தனை கடைகள் எத்தனை மனிதர்கள்..

அதிலும் இவர்களை தெரிந்தவர்கள் என பாதிபேர் வந்து வாழ்த்து கூறி தங்களால் முடிந்தது என அங்கிருந்த பூக்கடையில் பூ வாங்கி ராஜிக்கும் நிர்பயாவிற்கும் கொடுக்க சிலர் இனிப்பு வாங்கித் தருவதாய் திருநெல்வேலிக்கே பெயர்போன அல்வாவை வாங்கி கொடுத்துச் சென்றனர்..நிர்பயாவிற்கு இதெல்லாம் வியப்பாகஇருந்தது..எத்தனை பாசமான மனிதர்கள்..எப்பேர்பட்ட குடும்பத்தில் தான் வாழ வந்திருக்கிறோம் என நினைத்து நினைத்து உவகை கொண்டாள்..

வீட்டிற்கு திரும்பும் போது அவள் முகத்தின் மலர்ச்சியைப் பார்த்தே அமைதியாகிவிட்டான் தமிழ்..எப்போதுமே சற்று இடைவெளிவிட்டு அமருபவள் இப்போது தமிழின் மேல் தன் தோள் உரச நெருங்கி அமர்ந்திருந்தாள் அதுமட்டுமில்லாமல் சற்றாய் அவனை ஓரப்பார்வை பார்க்க தமிழ் வெளியே பார்த்துக் கொண்டு வந்ததை பார்த்தவள் சட்டென அவன் கையை தன் இரு கைகளாலும் இறுகப்பற்றிக் கொண்டாள்..

திடீரென அவள் செய்கையில் பயந்தவன் சட்டென அவளை ஏறிட அவன் தோள்மேல் தலை சாய்த்து இன்னுமாய் கையை இறுக்கிக் கொண்டாள்..மாறனும் ராஜியும் இருப்பதை மறந்து அவள் உரிமை காட்டியது மனதிற்கு வெகுவாய் ஆனந்தமளித்தது அவனுக்கு..இருந்தும் ஒன்றும் பேசாமல் அமைதியாகவே பயணத்தை ரசித்தான்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.