(Reading time: 17 - 34 minutes)

தொடர்கதை - ஒளிதருமோ என் நிலவு...? - 26 - தீபாஸ்

oten

தோட்டத்தில் போட்டிருந்த ஊஞ்சலில் உட்கார்ந்திருந்த ஆதித்தின் நெஞ்சம் சொல்லமுடியாத வேதனையில் இருந்தது. தன அம்மாவின் ஆன்மாவிடம் மானசீகமாக பேசிகொண்டிருந்தான் ஆதித். ஏம்மா என் கையை கட்டிப்போட்டீங்க உங்களின் இறப்புக்கு காரணமானவர்களை நான் எதுவும் செய்யமுடியாதவாறு உங்களின் வார்த்தை தடுக்கிறதே!

எனக்கு முள்ளின் மேல் நிற்பதை போல் வலிக்கிறதே என்றபடி வேதனயுடன் அமர்ந்திருந்த அவனின் அருகில் வந்து அமர்ந்த அழகுநிலாவிற்கு அவனின் நிலை சொல்லாமலே புரிந்தது. அவனின் வேதனையான முகம் கண்டவள் அவனின் முகத்தை நேற்று இரவுபோல் தன நெஞ்சில் இழுத்து புதைத்துகொண்டவள் நீங்க இப்படி மருகுவது அத்தைக்கு கஷ்டமாக இருக்கும். வாங்க நேத்திலிருந்து நீங்க எதுவும் சாப்பிடல சாப்பாடு எடுத்து வைத்திருக்கிறேன் சாப்பிடவாங்க என்றாள்.

ம்..கூம் உள்ளே என்னால் நிற்கவே முடியவில்லை மூச்சு முட்டுது. அவங்க போனால்தான் என்னால் வீட்டிற்குள்ளே இருக்கமுடியும். அவங்களை பார்க்கும்போது என் அம்மாவிற்கு நான் கொடுத்த வாக்கை மீறி எதுவும் அவங்களை பேசிவிடுவேனோ என்று பயமாக உள்ளது என்றான் ஆதித்.

அப்பொழுது நான் போய்டுறேன்பா... என்ற மஞ்சுளாவின் குரலில் நிமிர்ந்து பார்த்த இருவரும் அங்கு நின்றுகொண்டிருந்த அவளை பார்த்ததும் மொளனமானார்கள். .அந்த மொளனத்தை உடைத்து சமாதானமாக பேசவந்த அழ்குநிலாவைதடுத்த மஞ்சுளா, நீ எதுவும் சமாதனம் சொல்லவேண்டாம் என்னை இந்த அளவுக்கு அவன் ஏற்றுக்கொண்டதே எனக்கு சந்தோசம்! நான் வருகிறேன் என்று வெளியேறிவிட்டாள்.

மாதேஷ் தனது பிளாட்டிற்கு வந்ததும் ஹால் சோபாவில் அமர்ந்திருந்த தனது அம்மா மஞ்சுளாவை பார்த்தர்த்தும் அசச்சச்சோ அம்மா எப்போ இங்க வந்தாங்க யூடுயூபில் வந்த என் விசயம் தெரிந்தபின் அம்மா என்னை மொபைலில் தொடர்பு கொண்டபோது அதை அட்டன் செய்ய பயந்துகிட்டு எடுக்காததால் கோபத்துடன் இங்கு வந்தார்களா...? அல்லது நான் ஆதித்தோட வீட்டிற்கு போய் பிரச்சனையை செய்ததால் ஆதித் அம்மா இறந்ததை கேள்விகேட்டு வந்தார்களா...? என்று தயக்கத்துடன் வாசலிலேயே நின்றுவிட்டான

ஏதோ உணர்வின் காரணமாக திரும்பி பார்த்த மஞ்சுளா அங்கு மாதேஷ் நின்றுகொண்டிருப்பதை பார்த்தவள் எழுந்து அவனின் அருகில் சென்றவள் கோபத்துடன் அவனின் கன்னத்தில் ஒரு அரை விட்டாள்.

இதுவரை தன்னை அடித்திராத அம்மாவின் அறையில் அதிர்ந்து அம்மா...! என்று கன்னத்தை கையால் தாங்கிபிடித்தபடி அலறினான் மாதேஷ் .

என்னடா அம்மா... இத்தனைநாள் உன்னை அடித்து வளர்காததுக்கு இப்போ வெட்கப்படுறேண்டா, தன் மகனை பெண்பித்தனாகவோ தெருப் பொறுக்கியாகவோ அடையாளம் காட்டப்பட்டாள் அவனது தாயைத்தான் முதலில் பழிப்பர், கல்யாண வாழ்கையிலும் தோற்றேன், அன்னை ஸ்தானத்திலும் தோற்றேன். நான் வாழ்கையில் தோல்வி அடைந்துவிட்டேண்டா அதுவும் யாரை தோற்கடிக்கனும் என்று நினைத்தேனோ அவளின் மூலமே நான் தோற்றுப்போய்விட்டேன். .

உனக்கு ஒருவிசயம் தெரியுமா உன் அப்பா என்மேல் கோபம் கொண்டிருந்தால்கூட நான் இந்த அ.ளவு நொந்துபோயிருக்கமாட்டேன் ஆனால் அந்த ஜானகி சொன்னாள் என்பதற்காக என் மீதுள்ள வருத்தத்தை ஒதுக்கிவிட்டு என்னுடன் இனி நல்ல கணவனாக இருக்க முயற்ச்சிக்கிறேன் என்று சொன்னாரே அப்பொழுது நான் மனசார செத்துட்டேன்.

உனக்கு ஒன்று தெரியுமா உனஅப்பா நீ என் வயிற்றில் இருக்கும்போதே என்னை விவாகாரத்து செய்ய யோசிக்கவில்லை அப்பொழுதும் அந்த ஜானகி தடுத்ததினால்தான் அவர் எனக்கு எக்ஸ் புருஷன் என்று வெளியில் சொல்லவேண்டிய நிலை இல்லாமல் போனது. அதேபோல் இப்பொழுதும் அவள் இறக்கும்போது என்னுடன் வாழச்சொல்லி கேட்டதன் பின்தான் என்னுடன் நல்ல கணவனாக வாழ உன் அப்பா முயற்சிசெய்வதாக கூறுகிறார் அந்த ஜானகிக்கு உன் அப்பா பரம்பரைய் சொத்தில் இருந்து ஒத்தை ரூபாயை கூட அவளுக்கு அவன் மகனுக்கோ செலவழிக்க விடாமல் பார்த்துக்கொண்டேன் அதற்கு நான் செலவழித்த முயற்ச்சியை உன்னை நன்றாக வளர்ப்பதில் செலவழிக்காமல் விட்டுவிட்டேன். அதன் விளைவு இன்று நீ சமுதாயத்த்க்ஹின் முன் குற்றவாளியாக நிற்கிறாய் நான் இத்தனை இடையூறு செய்தபோதும் அந்த ஜானகியின் மகன் இன்று உன்னைவிட உயர்ந்தநிலையில் இருக்கிறான்

இதற்கெல்லாம் காரணம் என்னவென்று நான் இப்பொழுது யோசிக்கும்போதுதான் என் புத்திக்கு ஒன்றுரைத்தது உண்மையான அன்பும் அக்கறையும் சூழ்ச்சியாலும் வஞ்சத்தாலும் அடையமுன்றால் கடைசியில் என்னைப்போல் தோற்றுத்தான் போவோம் என்பதனை நான் காலம் கடந்து உணர்ந்துகொண்டேன்.

மாதேஷ்..... நீ நினைப்பதுபோல் ஜானகி என் வாழ்வின் குறுக்கே வரவில்லை உன் அப்பா ஜானகியை விரும்புவதுதெரிந்தே நான் ஊடே சென்று ஜானகியை குழப்பி உன் அப்பாவின் காதலை அவள் ஏற்கவிடாமல் செய்தேன் என்று கூறி தான் ஜானகிக்கு செய்யநினைத்த அநியாயம் எனக்கு எதிராகதிரும்பி உன் அப்பா அவளின் கழுத்தில் அவள் மறுக்க..மறுக்க தாளிகட்டி அவளை உன் அப்பாவின் வாழ்கைகுள் கொண்டுவருமாறு எனக்கு எதிராக திரும்பிவிட்டது என்று கூறி நடந்த அத்தனையும் அவனிடம் கூறினாள் மஞ்சுளா.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.