(Reading time: 17 - 34 minutes)

போதும் மாதேஷ், என்னோடு எல்லாம் போகட்டும் என் இந்த மோசமான நடவடிக்கையால் உன்னுடைய நெஞ்சிலும் வஞ்சஉணர்ச்சி மற்றும் பெண்களின் மீதான உன் கண்ணோட்டமும் மாறி இன்று சமுதசயத்தில் ஒரு கெட்டவனாக காட்ச்சியளிக்கும்படி ஆகிவிட்டது என்று கூறினாள்.

தன அம்மா கூறியதை கேட்ட மாதேஷ் உறைந்துபோய் உட்கார்ந்திருந்தான்.

ஜானகி விசேஷம் முடிந்ததும் அழகுநிலாவிடம் வந்த ராசாத்தி ஏட்டி அழகி... இன்று சாயந்தரம் நான் ஊருக்கு கிளம்பறேன். அங்கென எல்லாம் போட்டது போட்டபடியே வந்துட்டேன். உன் மதினி வாணி புள்ளையையும் வச்சுக்கட்டு மாடு கன்றை பார்கறதுக்கு சிரமப்படுவா. உன் அண்ணன் விசேசத்துக்கு வந்திருகிறான்ல அவன் கூடவே நான் கிளம்புறேன் அதுக்கு முன்னாடி உன் கிட்ட கொஞ்சம் பேசணும் புள்ள என்றாள்.

ஏம்மா அதுக்குள்ளே கிளம்புற இன்னும் கொஞ்ச நாள் இருக்கலாமுல்ல என்று கூறினாள்.

அடியே அழகி சம்பந்தம் பண்ண இடத்தில இத்தனைநாள் தங்குனதே அதிகம். உன் சூழ்நிலை, இங்கன எடுத்துச்செய்ய மூத்த பொம்பளைங்க யாரும் இல்லை. அதனால பொறுப்ப எடுத்துசெய்ய நான் இருந்துபுட்டேன்.

அதுவுமில்லாம, ஏம்மவ மானத்தை காத்த மாப்பிள்ளைய புருஞ்சுக்காம உன்ன நட்டாத்துல விட்டுபுட்டோம். .ஆத்தா மீனாட்சிதாயி அருளால மாபிள்ளயோட அம்மாவின் விருப்பமாக உன்னை அவங்க மருமகளாக்கி உனக்கு பாதுகாப்பான இடத்தை கொடுத்துட்டு தெய்வமாகிட்டாங்க உன் மாமியார்.

அந்த குணவதியின் இறுதி காரியத்தை நல்லபடி எடுத்துச்செஞ்ச திருப்தியுடன் நான் கிளம்புறேன். நான் போறதுக்கு முன்ன உன் மாமனாரிடம் உன்ன மருவீட்டுக்கு நம்ம ஊருக்கு அனுப்பிவைக்க சொல்லச்சொல்லிட்டு கிளம்புறேன். மாப்பிள்ளை இங்கன இருந்தமாதிரி வசதியா தங்குறதுக்கு தோதா வீட்டை கொஞ்சம் நீ வருரதுகுள்ள மாத்திவைக்கனும் அதனால நான் இனனைகே ஊருக்கு கிளம்புறேன் என்றார்..

அபொழுது அங்குவந்த வேலாயுதம் ராசாத்தியை பார்த்து ஏன் தங்கச்சி அதுக்குள்ள ஊருக்கு கிளம்புறேங்க, கொஞ்சநாள் இருந்துட்டு போலாமில்லையா என்று கேட்டார். இல்லன்னே அங்கன எல்லாம் அப்படி அப்படியே போட்டுட்டு வந்துட்டேன் நீங்க உங்க மருமவளையும் மகனையும் ஊருக்கு மருவீட்டுகு அனுப்பி வைக்கணும் என்று சொல்லிக்கொண்டு இருக்கும் போதே வீட்டின் இண்டர்காம் ஒழி எழுப்பியது அதனை எடுத்த வேலாயுதந்த்திடம் வாட்ச்மேன் அய்யா நம்ம சின்னம்மா அழகுநிலாவின் நண்பர்கள் என்று விசு மற்றும் சுமதி இரு பேர் வந்துருக்காங்க உள்ள அனுப்படுமாங்கயா என்று கேட்டான். .

அதற்கு வேலாயுத,ம் இதென்னப்பா கேள்வி உள்ள அனுப்பு என்று பதிலளித்ததும், வாட்ச்மேன், ஆதி அய்யா தான் யார்வந்தாலும் தெளிவா விசாரித்து உள்ள அனுப்பு என்று ஸ்ரிக்ட்டாக சொல்லியிருக்காங்க என்று சொன்னதும் அப்படியா! இரு ஒரு நிமிஷம் என்றவர், அழகுநிலா உனக்கு விசு, சுமதின்னு நண்பர்கள் யாரும் இருகிறார்களா? உன்னை பார்க்க அப்படி இருவர் வந்திருப்பதாக வாட்ச்மேன் கூறுகிறான் என்றதும்,

என் ப்ரெண்ட்ஸ் தான் மாமா. அத்தை இறந்தபோதுகூட வந்திருந்தார்கள் என்று கூறியதும், சரிமா என்றவர் வாட்ச்மேனிடம் அவங்களை உள்ளே அனுப்பு என்று கூறினார் .

நண்பர்களை காணும் ஆவலில் அவளும் அவர்களை எதிர்நோக்கி வாசலை நோக்கிச்செல்ல, வந்த சுமதி அவளை கட்டிக்கொண்டு எப்படி இருக்கிற ஆழ்கி என்று கேட்டாள், விசுவோ ஆதித் சார் நல்லா இருகிறார்களா அழகுநிலா என்று கேட்டான்.

இருக்கோம் இன்னும் இங்க யாரும் அத்தையின் இழப்பின் வலியிலிருந்து இன்னும் வெளிவரவில்லை. என்னடீ தீடீர்னு வந்திருகிறீர்கள் பத்திரிகை கொண்டுவந்திருக்கிறது போல தெரிகிறது என்னிடம் எதுவும் நீங்க இரண்டுபேரும் சொல்லவே இல்லையில்ல என்று கூறினாள்.

அதற்கு சுமதி, ஏய் உன்னிடம் சொல்லகூடாது என்று இல்லை அழகி உன்னிடம் பகிர்ந்துகொள்ள நினைகும்போதுதான் உன் அத்தை தவறிய விஷயம் கேள்விப்பட்டோம். நீ வேறு அந்த துக்கத்தில் இருந்ததனால் உன்னிடம் பகிர்ந்து கொள்ள முடியாமல் ஆகிவிட்டது என்று கூறியபடியே ஹாலில் சோபாவில் வந்து அமர்ந்தனர்.

ராசாத்தி அதற்குள் கிச்சனில் சென்று சமயல் செய்துகொண்டிருந்த வேலம்மாளிடம் கூறி இருவருக்கும் குடிக்க பானம் தயார்செய்து எடுத்துக் கொண்டுவந்தாள்.

ராசாத்தியை பார்த்ததும் அம்மா எப்படியிருக்கீங்க என்று சுமதிகேட்டதும் நீ நல்லா இருகியாமா இது உங்க கூட படிச்ச விசுதானே இவனைதான் நீ கல்யாணம் செய்யபோவதாக அழகி சொன்னா என்று எழுந்துநின்ற இருவரையும் பார்த்து கேட்டபடி உட்காருங்க என்று டீ டம்ளரை இருவருக்கும் நீட்டினார்.

அதற்கு விசு ஆமாம் மா கல்யாணப்பத்திரிக்கை கொடுக்கத்தான் வந்தோம் நாளைக்கு கல்யாணம் கண்டிப்பா நீங்களும் வரணும் முதல் நாள் பத்திரிகை வைக்கிறோம் என்று தவறா நினைக்க வேண்டாம் வீட்டில் உள்ள பெரியவர்கள்தான் ஜானகி ஆண்டி விசேசம் முடிந்தபிறகு பத்திரிகை வைகச்சொன்னர்கள் என்றான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.