என்ன செய்வதென தெரியாமல் திரும்பியவள் விழிகளை இறுக மூடி நிற்க,வேண்டுமென்றே அவளருகில் வந்தவன் தலையை இடவலமாய் அசைக்க நீர் அனைத்தும் அவள்மேல் தெறிக்க சட்டென திரும்பியவள் அவன் மேல் கைவைத்து தள்ள எத்தனிக்க அவள் கையை பற்றியவன் விளையாட்டாய் விடாமல் பிடித்திருக்க மெதுவாய் விழி திறந்தவள் அத்தனை அருகில் அவனின் அந்த சிஸ் பேக் வயிறையும் ஆர்ம்ஸையும் பார்த்து பயந்து போனாள்..
பார்வையின் வித்யாசம் உணர்ந்தவன் மெதுவாய் விலகி நின்று,” ஏ ரசகுல்லா,ரொமாண்டிக்கா லுக் விடுவநு பாத்தா இப்படி பயப்படுற”, என்றவாறு தன் சட்டையை கையிலெடுக்க,
“இல்லங்க படத்துல வர்ற போலீஸ்தான் இப்படி இருப்பாங்கநு நினைச்சேன்..”,என அவன் கையை பாவமாய் லேசாய் ஒரு விரல் கொண்டு அழுத்திப் பார்த்தவளை பார்த்தவனுக்கு அடக்க மாட்டாத சிரிப்பு வந்தது..
“நிஜ போலீசை பாத்துதான்ம்மா படத்துலயே அப்படி கொண்டு வராங்க..எல்லா போலீஸூம் தொப்பையோட இருக்க மாட்டாங்க சரியா”, என மீண்டும் தன் தலையை உலுக்க,
“என்னப்பா நீங்க முதல்ல தலையை துவட்டுங்க “,என தன் துப்பட்டாவால் தலையை துவட்டினாள்..
“என்ன மேடம் கவனிப்புலா பயங்கறமா இருக்கு??போலீஸ்காரன் மேல இருந்த பயம் போய்டுச்சா??”
“அப்படியில்ல ஆனாலும் இனி இதெல்லாம் டெய்லி நான்தான் பண்ணுவேன்..எனக்கு பிடிச்சுருக்கு”, என பாதி குரலில் கூறியவளை குனிந்து பார்த்தவன் எனக்கு கூட என ராகம் பாடி அவள் கன்னம் கிள்ளி கீழே அழைத்துச் சென்றான்..
மகனையும் மருமகளையும் முகத்தில் அத்தனை பூரிப்போடு சேர்ந்தாற் போல பார்த்த சரோஜாவிற்கு மனம் நிறைந்துபோனது..இருவருக்குமாய் உணவை பரிமாறியவர்,
“எங்கேயாவது வெளில போய்ட்டு வாங்களேன் தமிழு..அவளும் ஊரை சுத்தி பாத்தமாதிரி இருக்கும்ல..”
“ம்ம் காரை எடுத்துட்டு சும்மா ட்ரைவ் போய்ட்டு வரோம்மா..ஒரு ஒன் ஆர் டூ அவர்ஸ் வந்துருவோம்..”
“ம்ம் சரி டா பாத்து போய்ட்டு வாங்க..”
திருநெல்வேலியின் பைபாஸ் ரோடில் லாவகமாக தமிழ் காரை ஓட்டிக் கொண்டிருக்க,அடிக்கும் காற்றிற்கும் புது இட சூழலுக்கும் அடிக்கும் வெயில் கூட இனிமையாய் தோன்றியது நிர்பயாவிற்கு..
“எங்க ஊரு எப்படியிருக்கு???”
“ரொம்பவே அழகாயிருக்குப்பா..அப்பா தமிழ்நாட்டை பத்தி சொல்லும் போதெல்லாம் லைவ்ல ஒருதடவையாவது வரணும்னு நினைச்சுருக்கேன்..பட் இப்போ லைவ்வே இங்கதான்னு மாறிடுச்சு.”.
“ம்ம் ஆனாலும் எப்படி நீ இவ்ளோ நிதானனா பொறுமையா பேசுறியோ தெரில..சரி எதாவது சாப்டுறியாஇளநீர் ஜுஸ்???”
“இல்லங்க ஒண்ணும் வேண்டாம்..மார்னிங் சாப்டதே ஹெவியா இருக்கு..”
“எப்படி எப்படி நீ சாப்ட இரண்டு இட்லி ஒரு வடை ஹெவியா???அடேங்கப்பா..”,லேசாய் சிரித்தவள் மறுபடியும் வெளியே வேடிக்கை பார்க்க ஆரம்பித்திருந்தாள்..
“ஏன்ங்க கேக்கனும்னு நினைச்சேன் ஹரிஷ் அண்ணா வரவேயில்லேயே???”
“ம்ம் ஷாலினி க்கு லைட்டா பெயின் இருந்துதாம் செக் பண்ணதுல பால்ஸ் பெயின்னு சொன்னாங்களாம்..இருந்தும் இவனுக்கு விட்டுட்டு வர்றதுக்கு மனசு வரல சரி சென்னைக்கு வந்தப்பறம் மீட் பண்ணலாம்நு சொல்லிட்டேன்..”
“ஓ..கெட் டூ கெதருக்கு என்ன ப்ளான் பண்ணிருக்கீங்கப்பா??”
“நாம கம்மிங் வெட்னெஸ் டே கிளம்பலாம் நிரு..சோ அந்த வீக்கெண்ட் மே பி சட்டர் டே நைட் எல்லாரையும் கூப்டலாம் நிறைய பேர் இல்ல..ஒரு ஃபை பேமிலீஸ் அதுபோக யாரும் கூப்டனுமானு ஹரிஷ் கிட்ட கேட்டுக்கனும்டா ஓ.கே தான??”
“ம்ம் ஒ.கேப்பா..”
ம்ம் அதானே ஓ.கே சரி வேற ஒண்ணும் சொல்லிட மாட்டியே..ரொம்ப கஷ்டம் என்றவாறு தலையசைக்க இணைந்து புன்னகைத்தவள் அமைதியாகிவிட்டாள்..
மதிய பொழுது அப்படி இப்படியாய் நகர மாலை வேளையில் அனைவருமாய் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க பேச்சுவாக்கில் சரோஜா இன்று பௌர்ணமி என்று கூறினார்,
“ஹே அப்போ இன்னைக்கு நிலா சோறு சாப்டலாம்” என ராஜி கூற,
அப்டினா என ரகசியமாய் நிர்பயா மாமியாரின் காதை கடிக்க,
“ஃபுல் மூன் டே அன்னைக்கு டின்னரை மொட்டை மாடிக்கு எடுத்துட்டு போய் நிலா வெளிச்சத்துலயே சாப்டுவோம்..இப்போ எல்லாரும் வேலை அது இதுநு பிஸியானதால அப்படியே விட்டாச்சு..இன்னைக்கு எல்லாரும் இருக்குறதால போலாம்னு சொல்றா..”
“ம்ம் சூப்பர் அப்போ இன்னைக்கு லேடீஸ்க்கு ரெஸ்ட் நா சமைக்குறேன் “,என தமிழ்கூற,
“அதெல்லாம் வேண்டாம்டா நானே பண்றேன் நீ உக்காரு..”
“ம்மா சொன்னா சொன்னதுதான்..மாறா வாடா “,என அழைக்க,