(Reading time: 21 - 42 minutes)

வேலாயுதம் அவ்வாறு பேசுவதை பார்த்த ஜானகியின் கண்கள் மகிழ்ச்சியில் கண்ணீரை சொரிந்தது. அதனை பார்த்த மூவரும் பதறியபடி என்ன ஆச்சுத்தே என்று அழகியும், அம்மா என்று ஆதித்தும், ஜானகி என்று வேலாயுதம், பதறியபடி எழுந்து அவரிடம் சென்றனர். அழகி சமயோகிதமாக ஜானகி எமோசன் ஆனால் அவளின் ஹர்ட் பீட்டை நார்மலாக்க அவரை அமைதிபடுத்த கொடுக்கசொன்ன டேப்லட்டை எடுத்தபடி தண்ணீருடன் அவரை அணுகி அவரை குடிக்கவைத்தாள்.

அவள் கொடுத்த டேப்லட்டை மூச்சுவாங்க அவளிடம் வாங்கி முழுங்கியவள் எனக்கு ஒன்னுமில்லை நீங்க மூணுபேரும் பதறாதீங்க என்று மெதுவாக கூறியவள் வேலாயுதத்தை பார்த்து நீங்க இப்படி சந்தோசமா பேசி சிரித்து இயல்பாக பேசுறதை பார்த்து எத்தனை வருசமாச்சு, இனி எப்போதும் இப்படியே நீங்க நம்ம பிள்ளைகளோடு சந்தோசமா இருக்கணும் என்றாள்.

அவள் அவ்வாறு கூறியதும் ஆதித், சரிமா நீங்க சொல்றதுபோலவே அப்பா இருப்பார் நீங்க எதுக்கும் எமோசனலாகாதீங்க படுத்து ரெஸ்ட் எடுங்க என்று கட்டிலை அவள் படுப்பதற்கு தோதாக ஆதித் இறகிவிட்டதும் வேலாயுதம் போர்வையால் அவரை மூடியவர் அவளின் கைபிடித்து அமர்ந்தபடி ஆதித் நீயும் அழகுநிலாவும் போய் படுங்க அம்மா ரெஸ்ட் எடுக்கட்டும் என்றவர் ஜானகியின் அருகில் அமர்ந்துகொண்டார்.

அதற்குமேல் அங்கிருந்தால் ஜானகி ரெஸ்ட் எடுக்கமாட்டார் என்பதை உணர்ந்து அங்கிருந்த சாப்ப்டுதட்டு மற்றும் கிண்ணங்களை அழகியுடன் சேர்ந்து ஆதித்தும் எடுத்துகொண்டு அவளின் பின்னாலேயே அடுப்படிக்குள் வந்தான்.

அழகி தட்டுகளை ஒதுக்கி சிங்கிள் போட்டு கழுவுவதை பார்த்துக்கொண்டு நிலையில் சாய்ந்தபடி நின்ற ஆதித் தாங்க்ஸ் அழகி..., என்றான்.

எதுக்கு என்று அழகிகேட்டதும் எல்லாத்துக்கும் அம்மாவை கவனிச்சுகிட்டதுக்கு, அழகான குடும்ப சூழலை எனக்கு மீட்டு கொடுத்ததுக்கு, உனக்கு ஒன்று தெரியுமா அழகி! நான் அம்மாவின் ரூமிற்குள் வந்ததுமே நானும் அப்பா சொன்னதுபோல் இதேமாதிரி குடும்பமாக எல்லோரும் சேர்ந்து ஒன்றாக உட்கார்ந்து சாபிடமாட்டோமா? என்ற என் ஏக்கத்தை போக்கிய தேவதையா உன்னை அங்கு கண்டுதான் பிரீஸ் ஆகிபோய் நின்றேன் என்றான்.

அவன் அவ்வாறு கூறியதும் அழகி என்ணங்க இதுக்கு போய் இப்படி தாங்க்ஸ் எல்லாம் சொல்றீங்க! நான் அப்படி பெருசா எதுவும் செய்யல அத்தையும் மாமாவும் என்னிடம் பாசமாக நடந்துகொள்கிறார்கள் அதனால் நானும் இயல்பாக குடும்பத்தில் கலந்து எல்லாம் செய்கிறேன் இதில் என்ன இருக்கு என்று கூறினாள்.

அவள் கூறுவதை கேட்டதும் சிரித்தபடி அவளை ரசித்துகொண்டே மனதினுள் இதுதான் அழகி இந்த இயல்புதான் என்னை உன்னிடம் தடுமாற வைத்தது. உன் இடத்தில் வர்ஷா இருந்தால் பணியாளர்களை கொண்டு என் அம்மாவை கவனித்திருப்பாள். என் அப்பாவிடம் ஹாய் அங்கிள் என்ற வார்த்தையோடு தள்ளி நின்றிருப்பாள். அனால் என் குடும்பத்தை திரும்ப உயிர்ப்புள்ளதாக மாற்றி என்னிடம் தந்திருக்க மாட்டாள், என்று நினைத்தான். மேலும் மனம் ஒருவரை சிறந்தவராக எண்ணினால் அவர்களின் ஒவ்வொரு அசைவும் அழகானதாகவே தோன்றும். . அழகி ஜானகி விருப்பத்தின் பேரில் அன்று சாயங்காலம் புடவை உடுத்தியிருந்தாள் பாத்திரம் கழுவுவதற்காக முந்தானையை கொத்தாக இடுப்பில் சொருகியிருந்தாள் அதனால் அவளின் இடையில் நீர் தெறித்து பனித்துளிகளாய் மின்னியது அவளை ரசித்தவன் கண்களில் அவளின் இடைவிசை இழுத்தது எனவே அவனும் மெல்லமாக அவளில் பின் வந்துநின்றவன் அவளின் இடையில் தனது கைகளை தவழவிட்டான்.

ஏற்கனவே ஆதித் நிலையின் அருகில் நின்றபடி தன்னையே பார்த்துகொண்டிருப்பதை திரும்பி நின்று பாத்திரம் கழுவினாலும் அவளால் உணரமுடிந்தது. அவனின் பார்வை வீச்சில் தடுமாற்றத்துடன் இருந்தவளின் இடையில் அவனின் கைப்படவும் அவள் கை தனது வேலையை நிறுத்திவிட்டது.

நெளிந்தபடி ஆதித் ப்ளீஸ் நான் பாத்திரம் கழுவனும் என்றாள் நானும் உன் கூட சேர்ந்து கிளீன் பண்றேனே பேபி என்றதும் ம்..கூம் நானே செய்துகுவேன் நீங்க போய் ரெப்ரஸ் ஆகிக்கோங்க என்று கூறியபடி அவனை விட்டு விலகி ஓர் அகல எட்டு சைடில் எடுத்துவைத்து அவனின் கையை எடுத்துவிட்டவள் டென்சனுடன் அவனை பார்த்தாள்.

அவளின் நடுக்கத்தை பார்த்தவன் அதையும் ரசித்தபடி ஓகே நான் ரூமிற்குபோய் ரெப்ரஸ் ஆகிக்கொள்கிறேன், சீக்கிரம் வா என்று கூறியவன் விசில் அடித்தபடி தனது அறைக்கு செல்லும் படியில் ஏறி மறைந்தான்.

அழகுநிலாவிற்கு அவனின் பார்வையும் தொடுகையும் மயக்கத்தை கொடுத்தபோதும் எதிர்பாராமல் அன்று அவன் தன்னுடன் கூடியதில் இருந்து இன்னும் அவள் மீளவில்லை.

ரூமிற்குள் வந்த ஆதித் மனம் பெரும் சந்தோசத்தில் இருந்தது. அழகுநிலா தன அம்மாவை கவனித்துகொண்டவிதமும் தான் இன்று வந்ததும் அவள் தன தந்தைக்கு பரிமாறிக்கொண்டு தாயுடன் சிரிப்புடன் பெசிகொண்டிருந்ததை பார்த்த ஆதித்துகு இயல்பாய் தன குடும்பத்தில் பொருந்திகொண்ட விதம் கண்டவன் தான் அவளின் மீது கொண்ட காதலை அவள் புரிந்துகொண்டுவிட்டாள் என்றே அவன் எண்ணினான் .

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.