(Reading time: 21 - 42 minutes)

அவளின் வருகையை எதிர்பார்த்து இரவுடையில் காத்துகொண்டிருந்த ஆதித் இன்னும் என்ன செய்யுரா என்று எண்ணியபடி டிவியில் .சேனல்களை மாற்றி மாற்றி வைத்துகொடிருந்தவன் கடைசியில் மியூசிக் சேனலை வைத்தான் அதில் காதல் சொட்டும் பாடல்கள் ஒலிபரப்பாகிகொண்டிருந்தது..

தனது பிறந்தநாள் அன்று காலையில் அழகுநிலா தன்னை எழுப்பியதும் கனவினில் அவளையே நினைத்துகொண்டு இருந்த தான் அவள் எழுப்பவும் கனவென்ற நினைவில் அவளின் கைபிடித்து வெடுக்கென்று இழுத்ததும் மேலே விழுந்தவளை அனைத்து புரண்டது நினைவினில் வந்து அவனுக்கு புன்னகை எழுந்தது .

ஆதித்திருக்கும் அறைக்கு செல்லவேண்டும் என்ற நினைப்பே அவளுக்கு உதறலை ஏற்படுத்தியது. எவ்வளவு மெதுவாக வேலைகளை செய்தாலும் அது முடிந்தே விட்டது. இனியும் தாமதப்படுத்த முடியாது என்ற நிதர்சனம் உணர்ந்தவள் மெல்ல அடியெடுத்துவைத்து அவனின் அறையை அடைந்தாள்.

கதவை திறந்து பார்த்த அழகுநிலா அன்றொருநாள் காலையில் தான அவனை எழுப்ப வரும்போது எவ்வாறு படுத்து உறங்கிகொண்டிருந்தானோ அதேபோல் இன்றும் உறங்குவதை பார்தத் அழ்குநிலாவிற்கு கொஞ்சம் நிம்மதியாக இருந்தாலும் தனக்காக காத்திருக்காமல் உறங்கியது ஏமாற்றமும் எழுந்தது.

அவள் கொண்டுவந்த நீர் ஜாடியை கட்டிலின் அருகில் இருந்த டேபிளில் வைத்தவள் திரும்பிய மறுநொடி அன்றுபோல் இன்றும் அவளை இழுத்துதன்மேல் போட்டுகொண்டான்.

அதை எதிர்பார்க்காத அழகி ஆ என்று சத்தம் எழுப்ப முயன்றநேரம் அவளின் முகத்தில் மோதிய அவனின் முகம் அவளின் இதழ்தேனை ருசிக்க ஆரம்பித்தது.

முதலில் பயந்தவள் பின் அவனின் அதிரடியான முத்தத்தில் அதிர்ந்து நேரம்செல்லச்செல்ல தன்னை இழக ஆரம்பித்தாள். மூச்சுக்கற்றுக்காக அவனிடமிருந்து விலகி எழுந்து அவள் அமர்ந்தாள்.

அந்தநேரம் டிவியின் அரவிந்தசாமி இந்திரா திரைப்படத்தில் தனது காதலிக்கு அதிரடியாக முத்தமிட்டு ஒலிக்கும் பாடல் ஒளிபரப்பாகிகொண்டு இருந்தது தங்களின் நிலையையே அந்த பாடல் பிரதிபளிபதுபோல் இருவரும் உணர்ந்தனர் .

அதனை தொடர்ந்து ஆவலுடன் அவளை அனுகநினைக்கும்போது அவள் கட்டிலின் அந்தபக்கம் அவனின் கையில் அகப்படாமல் இறங்கிசென்று பால்கனி கதவைதிறந்து போய் இரவில் ஒளிவிடும் நிலவை ரசிப்பதுபோல் நின்றுகொண்டாள் .

அவளின் அருகில் போய் நின்றுகொண்டு அவளை ரசனையை பார்த்தபடி ஒலித்துகொண்டிருந்த பாடலுடன் சேந்து பாட ஆரம்பித்தான்

 

தொட தொட மலர்ந்ததென்ன பூவே

தொட்டவனை மறந்ததென்ன?

தொட தொட மலர்ந்ததென்ன பூவே

தொட்டவனை மறந்ததென்ன?

பார்வைகள் புதிதா? ஸ்பரிசங்கள் புதிதா?

மழை வர பூமி மறுப்பதென்ன?

அவளை தாபத்துடன் அணுகும் ஆதித்தை தவிர்த்து சென்றதை தாளாமல் பாட்டாலேயே அவளிடம் கேள்வி கேட்டான் .

பார்வைகள் புதிதா? ஸ்பரிசங்கள் புதிதா?

மழை வர பூமி மறுப்பதென்ன?

தொட தொட மலர்ந்ததென்ன பூவே

தொட்டவனை மறந்ததென்ன?

அன்றொருநாள் இரவில் தான அவளுடன் கலந்து அவளின் நெஞ்சில் காலடி பத்தித்ததை யார் அழித்துவிட்டார் என்று கேள்வி கேட்பதுபோல் இருந்தது அடுத்துவரும் வரிகள் .

அந்த இள வயதில் ஆற்றங்கரை மணலில்

காலடி தடம் பதித்தோம்.. யார் அழித்தார்?

அவனின் சூட்சுமமான கேள்வியை உணர்ந்தவள் இந்த பூவை கொய்தவன் யார் நீதானே என்பதை

நந்தவன கரையில் நட்டு வைத்த செடியில்

மொட்டு விட்ட முதல் பூவை யார் பறித்தார்?....

என்று கேள்வியால் நீதானே அது என பதிலை கேள்வியாகவே கேட்டா .

காதலன் தீண்டாத பூக்களில் தேனில்லை....

என்று அவளின் இதழை கூர்ந்தபார்த்தபடி பாடிகாட்டினான் .அவனின் பார்வை வீச்சில் சற்றுமுன் நடந்த முத்தத்தை நினைத்தவள்

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை....

என்று அவனின் தொடுகையை தாளாமல் அவன் மேல் சாய்ந்தபடி

தொடத் தொட மலர்ந்ததென்ன பூவே

சுடச் சுட நனைந்ததென்ன

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.