(Reading time: 21 - 41 minutes)

தொடர்கதை - ஒளிதருமோ என் நிலவு...? - 22 - தீபாஸ்

oten

காரில் அமர்ந்திருந்த ஆதித் முகம் கடினமாக இருந்தது மதியம் ஹாஸ்பிடல் போகணும் என்று சொன்னவர் காலையில் சாபிட்டவுடனேயே எங்க என்னை இழுத்துக்கிட்டு போகிறார்? அவரிடமே எங்கே போகிறோம்? என்று கேட்டுவிடலாமா... என்று ஆதித்தின் முகத்தைப் பார்த்தாள்.

ஆனால், ஆதித் இவளுடன் முகம் கொடுத்து பேசுவான் என்ற நம்பிக்கை அவளுக்கு இல்லை. ஏனென்றால் காலையில் சாபிட்டுவிட்டு ஹாலில் சோபாவில் ஆதித் அமர்ந்தான் ஆனால் அழகுநிலா இரவும் சரியாக தூங்காததாலும் அதிகாலையில் எழுந்ததாலும் காலை உணவு உண்டதும் அவளின் கண்கள் தூக்கத்திற்கு ஏங்கியது.

அவன் ஹாலில் சோபாவில் அமர்ந்து யாருடனோ மொபைலில் பேசிகொண்டிருக்கும் போது அவள் தூங்குவதற்காக அவர்களின் அறைக்குள் வந்தாள். அப்பொழுது தான் இப்போ எங்கே படுப்பது? பெட்ரூமில் படுக்காமல் உள்ளே இருந்த ரீடிங் ரூமில் படுத்தால் ஏற்கனவே தன மேல் காலையில் இருந்து கோபமாக இருக்கும் ஆதித் மேலும் கொபப்படுவானோ? என்று யோசனயானது. மேலும் அவனின் முகத்திருப்பல் அவளுக்கு மனதை என்னவோ செய்தது

ஆதித் உள்ளே வருவது கூட உணராமல் நின்றுகொண்டிருந்தவளை பார்த்துக்கொண்டே இவ எதுக்கு இப்போ இப்படி நிற்கிறாள்? என்ற யோசனையுடன் அங்கிருந்த கபோர்ட்டினை திறந்தவன் அது எம்ட்டியாக இருப்பதை பாத்துவிட்டு அழ்குநிலாவிடம் ஏய் உன் ட்ரெஸ் எல்லாத்தையும் இதில் அடுக்கு என்று கூறினான்.

அவன் ஏதோ கூறவும் தான், என்ன என்று கேட்டுகொண்டே அங்கு ஆதித் இருப்பதை கண்டு, என்ன சொன்னீங்க... என்று கேட்டாள்.

உன் ட்ரெஸ் எல்லாத்தையும் இதில் அடுக்கு என்று மறுபடியும் அவன் கூறியதும் அழகுநிலா மனதினுள் இப்போ இவரிடம் நான் ரீடிங் ரூமில் உள்ள கபோர்டிலேயே என் ட்ரெஸ்ஸை அடுக்கிவைத்துக்கொள்கிறேன் என்று கூறினால் மேலும் கோபப்படுவார் எனவே அப்புறம் அடுக்குகிறேன் என்று சொல்லிவிடுவோம் என்று நினைத்தபடி ஆதித்தை பார்த்தாள்.

நான் சொன்னதை செயதுவிட்டு என்னை சைட் அடிக்கலாம் இப்போ போய் உன் பேக்கை எடுத்துட்டுவா என்று அவன் கூறியதும்

அச்சோ இவனை நான் சைட்டடிப்பது இப்படி பகிரங்கமா அவன் புரிந்து கொள்கிறபடியா இருக்கு... கொஞ்சம் இந்த கண்ணை அவனின் புறம் போகாமல் கட்டிபோடனும் என்று நினைத்தபடி அவளின் பற்கள் எல்லாம் தெரியும் விதமாக சிரித்தவள் நான் அப்பறம் அடுக்கிகிடவா.... இப்போ எனக்கு தூக்கம் வருதே... என்று கூறினாள்.

அவள் அவ்வாறு கூறியதும் ம்..கூம் இப்போ என் கண்முன்னாலேயே ஒவ்வொரு ட்ரெஸ் ஆக எடுத்து அடுக்கு... அப்போதான் இன்னைக்கு ஈவ்னிங் நடக்கிற பார்டியில் நீ எதை என்னுடன் உடுத்திக்கொண்டு வரலாம் என நான் அதில் செலைக்ட் பண்ணமுடியும் என்றான்.

அவன் அவ்வாறு கூறியதும் அழகுநிலா நான் ஒன்று சொல்லட்டுமா?என்று கேட்டாள் .அவள் அவ்வாறு கூறியதும் சொல்லு என்றான் விரைப்பான குரலில்

நான் சொன்னால் நீங்க கோபப்படக்கூடாது ஓகே வா... என்றாள். அப்போ நான் கோபப்படுகிறமாதிரி எதையோ நீ சொல்லப்போற அப்படித்தானே என்று கேட்டான்.

ப்ளீஸ் ஆதித் நான் சொல்றதை புருஞ்சுக்கோங்க. என்று கூறினாள். அவள் அவ்வாறு கூறியதும் முதலில் நீ சொல்லவந்ததை சொல்லு பிறகு கோபப்படலாமா வேண்டாமான்னு நான் முடிவெடுக்கிறேன் என்றான்.

நான் அந்த ரூமிலேயே என்று ரீடிங் ரூமை விரல்நீட்டி சுட்டிக்காட்டி தங்கிகிடவா.. அங்குள்ள கபோர்டிலேயே என் திங்சை வச்சுகிடட்டுமா? என்றாள்.

அவள் சொன்னவிதம் ஹெட் மாஸ்டரிடம எஸ்கியூஸ் கேட்கும் ஸ்டூடன்ட் போல் அவனுக்கு தோன்றியது. அவளின் வார்த்தையில் அவனுக்கு இன்ஸ்டன்டாக கோபம் ஏறினாலும் அவளின் பாவத்தை அவனுள்ளம் ரசிக்கவே செய்தது.

மனதினுள் ஆதித், இவகிட்ட ஏன் என்று விளக்கம் கேட்டால் இப்படி பச்சபுள்ள ஆக்ட் குடுத்து நம்மள அவ சொல்றபடி செய்யவச்சுடுவா... அவள் ஆர்கியூ பண்ண சான்சே கொடுக்ககூடாது என்று முடிவெடுத்தவன்.

நம்ம இரண்டு பேருகும் நடந்த கல்யாணம் பொம்மை கல்யாணம் இல்லை. நீ என்னுடைய பொண்டாட்டி அந்த பந்தத்தில் இருந்து வெளியில் போக ஆயுளுக்கும் நான் விட மாட்டேன். சோ... சீக்கிரம் என்னுடன் வாழறதுக்கு உன் மனசை தயார்படுத்திக்கோ!

அதுவரை நான் பொறுமையா இருக்கணும் என்று நினைக்கிறேன். ஆனா நீ இப்படி என் ரூமில் படுத்தால் உன்னை நான் ரேப்பண்ணிடுவேன் என்ற மாதிரி சீன் கிரியேட் பண்ண..... நான் சாந்திமுகூர்த்தத்தை இப்போவே நடத்தி முடிச்சிடுவேன், என்று கூறினான்

அவன் அவ்வாறு கூறியதும் தன் கண்ணை விரித்து அவனை பார்த்தவள் ஆ... என்று வாய் திறந்தவள் தன வாயை கையால் மூடிகொண்டாள் இப்படியெல்லாம் கூட மிரட்டுவாங்களா? சொன்னத செஞ்சுடுவாரோ! என்று மனதினுள் கூறியவள் மூளை வேலைநிறுத்தம் செய்தது அப்படியே நின்றால்

ஆதித் அவளிடம் அந்த பயம் இருக்கணும் என்று கூறியபடி விறுவிறு என்று அடுத்த அறைக்குச் சென்றவன் அவள் உடை இருந்த பேக்கை எடுத்துவந்து அதனை தலை குப்புற பெட்டில் கவிழ்த்தினான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.