(Reading time: 21 - 41 minutes)

ஆதித் வந்ததும் அவனை வெல்கம் செய்த அந்தக்கடை உரிமையாளர் டாம்போ வெல்கம் ஆதித் ஜீ என்றவன் அவனுடன் வர்ஷா வராததை பற்றி விசாரிக்க வருவதை புரிந்துகொண்ட ஆதித் அவர் கேட்கும் முன்னமே மீட் மை வொய்ப் அழகுநிலா ,என்று முந்திக்கொண்டு பேச்சை ஆரம்பித்துவிட்டன ஆதித்.

ஆதித் அவ்வாறு கூரியதுமே டாம்போ தான் கேட்க வந்ததை தடுப்பதரற்காகவே ஆதித் வேகமாக அழகுநிலாவை அறிமுகப்படுத்துவதை உணர்ந்துகொண்டவன் அவளை பற்றி கேட்க்காமல் விட்டுவிட்டான். அதேபோல் வாழ்த்துக்கள் சார் என்று கூறியவர் வெல்கம் மிசஸ்ஆதித்தராஜ் என்று அழகுநிலாவிடம் கூறியவன் என்ன பார்கபோறீங்க மேடம் என்று கேட்டதும் அவள் ஆதித்தின் முகம் பார்த்தாள் ஆதித் அவனிடம் பார்ட்டி வியர் கலெக்சன் என்று பதில் கூறினான்.

டாம்போ காண்பித்த உடை எதுவுமே தனக்கு செட் ஆகும் என்று அழகுநிலாவுக்கு தோன்றவில்லை. எனவே அவள் ஆதித்திடம் என்னங்க சுடிதார் அல்லது சேரி வாங்கலாமே இந்த மாதிரி ட்ரெஸ் எல்லாம் நான் போட மாட்டேனே என்று கூறினாள்.

அவள் அவ்வாறு கூறவுமே, மேடம்! பார்ட்டிவியர் சுடிதார் சேரி எல்லாம் எங்களிடம் இருக்கு இருங்க காண்பிக்கிறேன் என்று எடுத்து வந்து காண்பித்தான்

சுடிதாரில் சிலவற்றை அவள் செலக்ட் செய்து அதன் விலையை பார்த்தவள் அதிர்ச்சியடைந்தாள். இந்த ஒரு ட்ரெஸ் ரேட்டுக்கு நான் ஒன்பது சுடிதார் வாங்கிடுவேன் என்று நினைத்தவள் மீண்டும் ஆதித்தின் காதில் கொஞ்சம எட்டி எதிரில் இருப்பவருக்கு கேட்கக்கூடாது என்பதற்காக மெதுவாக இங்க எல்லாம் அநியாய விலைக்கு இருக்கு நாம வேற கடைக்கு போகலாமா என்று கேட்டாள்

அவள் தன்னை நெருங்கி காதோரம் அவளின் மூச்சுகாற்று படும் படி ஹஸ்கி வாய்சில் பேசியது அவனை சிலிர்க்க வைத்தது. அவனும் அவளின் காதில் அவளை போவே ஹஸ்கிவாய்சில் ட்ரெஸ் உனக்கு புடுச்சுருக்கா இல்லையா என்று கேட்டான்

ம...புடுச்சிருக்கு ஆனா..என்று மேலும் கூறப்போவதை தடுத்த ஆதித் பிடிச்கிருக்குள்ள பிறகு என்ன ஆனா... ஆவனானு... சொல்லிகொண்டிருக்கிற இன்னும் சிலது எடு என்று அவன் கூறினான்.

அவன் கூரியதைக் கேட்ட அழகுநிலா, இல்ல எனக்கு இன்றைக்கு பார்ட்டிக்கு போட்டுபோக ஒன்று மட்டும் போதும் என்று அவள் கூறியதும் எனக்கு நீ ஒன்னுமட்டும் வாங்கறது போதாது என்றவன் அவனே அவளுக்கு விதவிதமாக சுடிதார் மற்றும் சேலைகளை செலக்ட் செய்தான்.

பின் அங்கிருந்த டிரையல் ரூமில் ஒவ்வொன்றாய் அவளை போட்டுகொண்டு காண்பிக்க சொன்னான்

அவள் ஒவ்வொன்றாய் போட்டுவந்து அவனிடம் காண்பிக்க ஆரம்பித்தாள். முதலில் உடை அவளுக்கு அழகாய் இருக்கிறதா என்று பார்க்க ஆரம்பித்தவன் அடுத்தடுத்து உடுத்திக்கொண்டு அவள் வரவும் அந்த நேர்த்தியான சுடிதாரின் உதவியில் மேலும் அழகாக தெரிந்த அவளையும் சேர்ந்து ரசிக்க ஆரம்பித்தான்.

அதனை அவள் உணராதவகையில் இயல்பாக அவளிடம் தொட்டு இங்க கொஞ்சம் பிடிக்க சொல்லனும் இந்த டிசைன் சூப்பர் என்று அவளை தொட்டு தொட்டு கருத்து கூறுகிறேன் என்ற போர்வையில் அடாவடியாக அவளிடம் நடந்து கொண்டான்.

முதலில் அவன் உடைதான் சரி பார்கிறான் என்று நினைத்தவள் பின் அவனின் கை அழுத்தத்திலும் பார்வை மாறுபாட்டினையும் உணர்ந்து கொண்டவளால் அவனை தடுக்கும் விதம் தான் தெரியவில்லை

முதலில் அவஸ்த்தையாக நெளிந்தாள் அழகுநிலா, மற்றவர் பார்வைக்கு சாதராணமாக தெரியும் படி உடையை சரிசெய்வதுபோல் அவன் செய்த அட்டூழியத்தால் அவளின் முகம் சிவந்தது பின் அவன் தொடுகையை ரசிக்க ஆரம்பித்தது அவளுள்ளம்.

அவன் செலக்ட் செய்த உடைகளில் ஒன்றை மட்டும் தனியாக பேக் செய்து கையில் வாங்கிகொண்டவன் மற்றதை காரின் பின்னால் வந்து வைக்கச்சொல்லி கூறியவன் அவளுடன் நெருங்கி தோளில் கை போட்டு காருக்கு நடந்து வந்தான்

அழகுநிலா அவனிடம் இருந்து கூச்சம் காரணமாக விலகமுயன்றால் ஆனால் அவள் அவனை விட்டு விலக முயன்ற பொழுதுகளில் எல்லாம் பார்க்க சாதாரணமாக தெரியும் அவனின் பிடி அழுத்தமாக மாறியதால் தன முயற்ச்சியை கை விட்டுவிட்டாள் அழகுநிலா

மதியம் ஆனதால் ஒரு நட்ச்சத்திர ஹோட்டலுக்கு அவளை அழைத்துசென்றவன் மதிய உணவை அவளின் விருப்பம் கேட்டு வாங்கி அவளுக்கு கொடுத்தான் ஏனோ அழகுநிலாவிற்கு அவள் எடுத்த முடிவுகள் எல்லாம் மறந்தே போனது. அவளுக்கு பார்த்து பார்த்து அவன் கவனித்தவிதம் கண்டு என் ஆதித் என்ற எண்ணம் உதித்தது அவளுக்கு, காற்றில் மிதப்பதை போல் ஒரு போதை இருவருக்கும் உண்டானது

ஆதித் சிறிது சிறிதாக அவளை அவள் அறியாமல் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தான் அதில் அவள், அவளை அறியாமல் அவனிடன் தன்னை ஒப்புகொடுத்தாள் ஆதித்துக்கு அவளின் மலர்ந்த முகம் கண்டு பெரும் நிம்மதி மனதினுள் பிறந்தது

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.