(Reading time: 21 - 41 minutes)

அடுத்த கோப்பையை அவள் எடுக்க முயன்றதும் வேகமாக அவளின் அருகில் வந்த மாதேஷ் அவளை பருக விடாமல் அதனை வாங்கி வைத்துவிட்டு அவளை அழைத்த்கொண்டு போய் அங்கிருந்த இருக்கையில் அமர வைத்தான்.

தலையை கையில் தாங்கி மேஜையில் கையூன்றி அவள் அமர்ந்ததும் மாதேஷ் அங்கு மேடையில் ஒரு பக்கம் லைட் ம்யூசிக் செய்து கொண்டிருந்த குரூபிடம் வந்தவன் கிட்டார் வாசித்துகொண்டிருந்தவனிடம் ஐ வான்ட் சிங் டு மை பேபி, பிளீஸ் புரோ லெட் மீ யூஸ் யுவர் கிட்டார் என்று கேட்டான் .

சிரிப்புடன் கிடாரை அவனிடம் அந்த கலைஞன் நீட்டியதும் தாங்ஸ் என்று கூறியபடி வாங்கியவன் அதனை வாசிக்க ஆரம்பித்தான்

அங்கு மிதந்து கொண்டிருந்த இசை நின்று கிட்டார் ஒழி மட்டும் கேட்டதும் நிமிர்ந்து பார்த்த வர்ஷவை பார்த்துக்கொண்டே அதனை மீட்டினான் மாதேஷ்

தனக்காக அவன் இசை மீட்டபோவதை உணர்ந்த வர்ஷா அவனையே இமைக்காமல் பார்த்தாள்

நலம் வாழ எந்நாளும் வாழ்த்துக்கள்!

தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்

இளவேனில் உன்வாசல் வந்தாடும்!

இளந்தென்றல் உன்மீது பண்பாடும்!

அந்த பாடலின் வரிகள் மற்றும் இசை அவள் மனதை ஆறுதல் படுத்தியது

மனிதர்கள் சிலநேரம் நிறம் மாறலாம்!

மனங்களும் அவர் குணங்களும் தடம் மாறலாம்!

இலக்கணம் சில நேரம் பிழையாகலாம்!

எழுதிய அன்பு இலக்கியம் தவறாகலாம்!

அவன் தனக்கும் ஆதித்துக்கும் இடையில் உண்டான காதல் நிறம்மாறி தடமாறிபோனத்தை கூறுவதை நினைத்தவள் கண்கள் மறுபடியும் பொங்க துவங்கியது

 

விரல்களைத் தாண்டி வளர்ந்ததைக் கண்டு

நகங்களை நாமும் நறுக்குவதுண்டு

இதிலென்ன பாவம்...!

எதற்கிந்த சோகம்? கிளியே..!

என்று அவன் பாடியதும் நாசூக்காக தன கண்ணீரை வழியாமல் உள்ளிழுத்தவள் செயற்கை புன்னகையை பூசிகொண்டாள்.

 

கிழக்கினில் தினம்தோறும் கதிரானது!

மறைவதும் பின்பு உதிப்பதும் மரபானது!

கடல்களில் உருவாகும் அலையானது

விழுவதும் பின்பு எழுவதும் இயல்பானது!

 

நிலவினை நம்பி இரவுகள் இல்லை!

விளக்குகள் காட்டும் வெளிச்சத்தின் எல்லை!

ஒரு வாசல் மூடி......!

மறுவாசல் வைப்பான் இறைவன்!

அவன் பாடி முடித்து அவளின் புன்னகை முகம் கண்டு நிம்மதியடைந்து கிட்டரை திரும்ப கொடுத்துவிட்டு வர்ஷா அமர்ந்திருந்த சீட்டில் பார்த்தாள் அதில் அவள் இல்லை. .

வேகமாக அவளைத் தேடி வாசலுக்கு விரைந்தவன் அவள் வெளியேறப்போவதை பார்த்து வேகமாக எட்டுவைத்து வர்ஷா என்று கூப்பிட்டான்.

அவன் கூபிடதும் தேங்கி நின்றவளின் முன் வந்த மாதேஷ் நான் உன்னை ட்ராப் பண்றேன் வர்ஷா என்றான்.

அவன் அவ்வாறு கூறியதும் அவள் தன பர்சில் வைத்திருந்த கார் கீயை வெளியில் எடுத்து காண்பித்த வர்ஷா நான் என் காரில் தான் வந்திருக்கிறேன் போய்கொல்வேன் என்னை நினைத்து நீங்க கவலை படவேண்டாம் மாதேஷ் என்றவள் தாங்க்ஸ் மாதேஷ் ஆதித்தை பார்த்ததும் கொஞ்சம் எமோசனல் ஆகிவிட்டேன் அந்த சூழ்நிலையில் நீங்க உங்க பாட்டின் மூலம் என்னை ரிலாக்ஸ் ஆக்கிடீங்க தாங்க்ஸ் என்று கூறினாள்.

அவள் அவ்வாறு கூறியதும் மசதேஷ் உன் கண்ணில் கண்ணீரை என்னால் பார்க்க சகித்துக்கொள்ள முடியல எப்போதும் உன் கண்ணில் கண்ணீர் வராமல் நான் பார்த்துகொள்வேன் வர்ஷா என்னை கல்யாணம் செய்து கொள்வாயா வர்ஷா என்று கேட்டுவிட்டான் மாதேஷ்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.