(Reading time: 13 - 25 minutes)

தொடர்கதை - கடவுள் போட்ட முடிச்சு - 01 - ஜெயந்தி

kadavul potta mudichu

பால் செம்புடன் அறைக்குள் நுழைந்தாள் நந்தினி.அவளைக் கண்டதும் கோபமாக என்னை என்னுடைய பணத்துக்காகதானே கல்யாணம் செய்து கொண்டாய்.உன்னை மாதிரி நிறைய பெண்களை எனக்கு தெரியும்.ஒன்றை மட்டும் நினைவில் கொள்.நீ நினைப்பது போல என்னுடைய பணம் உனக்கு எப்போதும் கிடைக்காது.அதைவிட ஒரு மனைவிக்கு உரிய மரியாதையும் உனக்கு கிடைக்காது என்று தெரிந்துகொள்.உனக்கு கொஞ்சம்கூட வெக்கமாக இல்லையா.அக்காவுக்கு பார்த்த மாப்பிள்ளையை நாம் திருமணம் செய்து கொண்டோமே இது அவளுக்கு நாம் செய்யும் துரோகம் என்று.என்ன மாதிரியான பெண் நீ.உன்னைப் பார்க்கவே எனக்கு அருவருப்பாக இருக்கு” என்று வெறுப்பை உமிழ்ந்தான் ஆதி.

அவன் பேசி முடிக்கும்வரை பொறுமையாக காத்திருந்த நந்தினி மிக நிதானமாக நடந்து சென்று கட்டிலின்மீது அமர்ந்தாள்.அதைப்பார்த்த ஆதியின் கோபம் அதிகரித்தது.அவன் கோபமாக மீண்டும் பேச ஆரம்பிக்கும் முன் பால்செம்பிலிருந்த பாலை டம்ப்ளரில் ஊற்றி நிதானமாக அருந்த ஆரம்பித்தாள்.

ஆதியின் கோபம் திகைப்பாக மாறியது.குடித்துமுடித்தப்பின் நந்தினி மிக நிதானமாக பேச ஆரம்பித்தாள்.”உங்களுக்கே நன்றாக தெரியும்.நான் ஒன்றும் ரதியின் கல்யாணத்தை நிறுத்தவில்லை.அவளுக்கு ஏற்கனவே சினிமா மேல் மோகம் உண்டு.வாய்ப்புகிடைக்கவும் அவள் உங்களை தூக்கி எறிந்துவிட்டு கிளம்பி விட்டாள்.நீங்கள் இன்னும் அவளையே நினைத்து கொண்டிருக்கிறீர்கள்.உங்களை யாரும் கழுத்தில் கத்தியை வைத்து என்னுடைய கழுத்தில் தாலி கட்ட சொல்லவில்லையே “ என்று சொன்னாள்.

“பொய் சொல்லாதே.ஏற்கனவே என்னிடம் வந்து உன் அக்காவுடனான திருமணத்தை நிறுத்த சொன்னாய்.நான் கேட்கவில்லை எனவும் நீயே எதோ செய்து அந்த திருமணத்தை நிறுத்தி இருக்கிறாய்.அதுவும் கல்யாணத்துக்கு முதல்நாள்.அப்போதுதானே நான் உன்னை மணப்பேண்.திட்டம் போட்டு வேலை செயடுருக்கிறாய்.சொல் எதற்காக என்னுடைய அழகுக்காகவா இல்லை என்னுடைய பணத்திற்காகவா” என்றான் ஆதி.

“இதற்க்கான பதிலையும் நான் ஏற்கனவே சொல்லி விட்டேன் .என்னுடைய அக்காவைப்பற்றி எனக்கு நான்கு தெரியும்.அதனால் உங்கள்ளுக்கு வரும் தொல்லையிலிருந்து நீங்கள் தப்பிப்பதர்க்காகத்தான் நான் உங்களை எச்சரித்தது.மேலும் நான் அவளை திருமணம் செய்ய வேண்டாம் என்று தான் எச்சரித்தேனே தவிர என்னை திருமணம் செய்து கொள்ள அல்ல. யோசித்தால் உங்களுக்கே இது நன்கு புரியும்” என்றாள் நந்தினி.

என்னை என்ன மூளை இல்லாத முட்டாள் என்கிறாயா- ஆதி

நான் அவ்வாறு கூறவில்லை-நந்தினி

நீ சொன்னதின் அர்த்தம் அதுதான்-ஆதி

எதையுமே குதர்க்கமாகவே யோசிப்பதுதான் உங்கள் வழக்கம் –நந்தினி

அப்படியானால் நீ கூறியதற்கு நீயே அர்த்தம் கூறு –ஆதி

அதிக டென்ஷனாக இருக்கும்போது நம் மூளை சரியாக வேலை செய்யாது.எனவே நிதானமாக யோசிக்கும்படி கூறினேன்.

“சரி இதை விட்டுவிடுவோம்.நீ என்னை எச்சரித்தது என்மேல் உள்ள அக்கறையினால்தான் என்றே வைத்து கொள்வோம்.என்னை திருமணம் செய்துகொள்ளும் ஆசையினால் இல்லை.ஆனால் நீ ஏன் இந்த திருமணத்தை ஒத்து கொண்டாய்.நீ உண்மையிலேயே நல்லவளாக இருந்தால் இந்த திருமணத்தை நீ மறுத்திருக்க வேண்டும்.அப்படி செய்யாததிலேயே தெரிகிறது நீ எப்படிப்பட்டவள்” என்றான் ஆதி

“இதையே நானும் திருப்பி கூறலாமே.ஒரு பெண்ணை உயிருக்கு உயிராக காதலித்து விட்டு அவள் இல்லையெனவும் உடனே அவளுடைய தங்கையின் கழுத்தில் தாலி கட்டிய உங்களைப்பற்றி மட்டும் உயர்வாக எண்ண முடியும்” என்றாள் நந்தினி.

“என்னுடைய தாய்,தந்தையின் மானத்தைக் காப்பதற்காக மட்டுமே நான் உன் கழுத்தில் தாலி கட்டினேன்” என்றான் ஆதி.

“நானும் அநாதை கிடையாது” என்றாள் நந்தினி.

“அப்படி என்றால் நீயும் கௌரவதுக்காகத்தன் என்னை மணந்து கொண்டாய் என்மேல் கொண்ட ஆசையினால் அல்ல என்கிறாய் அப்படித்தானே” என்றவன் தொடர்ந்து “இதை நம்ப முடிந்தால் எவ்வளவோ நன்றாக இருக்கும்” என்றான்.

“நீங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும் அதுதான் உண்மை.எனக்கு தூக்கம் வருகிறது நான் தூங்க வேண்டும்.மேலும் உங்களுக்கு பால் வேண்டும் என்றால் இதிலிருந்து ஊற்றி குடித்துக் கொள்ளுங்கள்.எனக்கு பால் பிடிக்காது .அதைப்போல அடுத்தவர் வாய் வைத்து குடித்ததை குடிக்கவும் பிடிக்காது.எனவே உங்களுக்கு பிடிக்கவில்லை என்றாலும் என்ன செய்வது என்று நீங்களே முடிவெடுத்து கொள்ளுங்கள் .ஏனென்றால் இது உங்கள் வீடு. இங்குள்ள பழக்கங்களும் உங்களுக்குத்தான் நன்கு தெரியும்” என்றாள் நந்தினி.

எனக்கு மட்டும் தினம்தினம் முதலிரவு கொண்டாடி பழக்கம்தான் என்று வாய் வரை சொல்ல வந்ததை சொல்லாமல் நிப்பாட்டினான்.இவளுடன் சரிக்கு சரியாக சண்டை போடுவதைவிட இப்போதைய பிரச்சனையில் இருந்து எப்படி விடுபடுவது என்று யோசிக்க வேண்டும் என்று நினைத்தவன் தன்னுடைய அறையிலேயே இருந்த பிரிட்ஜில் போய் அந்தப்பாலை பத்திரமாக வைத்துவிட்டு திரும்பி பார்த்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.